கங்குவா படத்தின் எடிட்டர் 43 வயதில் மரணம்!! காரணம் என்ன?
Latest News Kanguva Editor Nishad Yusuf Death : தென்னிந்திய திரையுலகின் பிரபல திரைப்பட தொகுப்பாளர் நிஷாத் யுசுஃப் மரணமடைந்துள்ளார்.
Latest News Kanguva Editor Nishad Yusuf Death : சூர்யா நடிப்பில் வரும் நவம்பர் மாதம் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் படம், கங்குவா. சிறுத்தை சிவா இயக்கியிருக்கும் இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் படத்தொகுப்பாளராக வேலை பார்த்த நிஷாத் யுசுஃப்தான் தற்போது இறந்து போயுள்ளார்.
அக்டோபர் 30ஆம் தேதியான இன்று, நிஷாத் யூசுஃப் அதிகாலையில் மரணமடைந்துள்ளார். 43 வயதாகும் இவரது மரணத்தை கேரளாவின் திரைப்பட சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. கொச்சி, பனம்பள்ளி எனும் இடத்தில், அப்பார்ட்மெண்டில் தங்கி வந்திருக்கிறார் நிஷாத். இவரது சொந்த ஊர் ஹரிப்பாட்.
2022ஆம் ஆண்டு வெளியான தல்லுமலா படத்திற்காக இவர், தேசிய விருது பெற்றிருக்கிறார். மலையாளம் மட்டுமன்றி, தென்னிந்திய திரையுலகின் வருங்காலமாக பார்க்கப்பட்ட எடிட்டர்களுள் ஒருவர் இவர். இவரது மரணம், தற்போது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
காரணம் என்ன?
எடிட்டர் நிஷாத், 40களில் இருக்கிறார். இவ்வளவு சிறு வயதிலேய அவர் மரணமடைந்திருப்பதற்கான காரணம் குறித்து, பலர் தேடி வருகின்றனர். இப்போது வரை, இறப்பிற்கான காரணம் வெளியிடப்படவில்லை. உடற்கூறாய்வுக்கு பிறகு, இது குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | பிரபல தமிழ் சினிமா இயக்குநர் மரணம்! பிரபலங்கள்-ரசிகர்கள் இரங்கல்..
பிரபலங்கள் இரங்கல்..
நிஷாத்தின் மறைவிற்கு சில பிரபலங்கள் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர். ஆர்.ஜே.பாலாஜி இது குறித்து வெளியிட்டிருக்கும் பதிவில், நிஷாத் யுசுஃப்ஃபின் இறப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும், அவரை சமீபத்தில் சந்தித்து பேசியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், அவர் ஒரு நல்ல மனிதர் என்று குறிப்பிட்டிருக்கும் அவர், வாழ்க்கை கணிக்க முடியாததாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
சமீபத்தில் நடந்த கங்குவா இசை வெளியீட்டு விழாவில் கூட இறந்து போன நிஷாத் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.மலையாள திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சூர்யாவின் 45வது படத்திற்கும் இவர்தான் படத்தொகுப்பாளராக நியமிக்கப்பட இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | 30 வயது இன்ஸ்டா பிரபலம் மரணம்! என்ன நடந்தது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ