பிரபல தமிழ் சினிமா இயக்குநர் மரணம்! பிரபலங்கள்-ரசிகர்கள் இரங்கல்..

Director Director Surya Prakash : தமிழ் சினிமாவிற்கு பிரபலமான படங்களை கொடுத்த இயக்குநர் ஒருவர் தற்போது உயிரிழந்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழத்துள்ளனர்.   

Written by - Yuvashree | Last Updated : May 27, 2024, 12:00 PM IST
  • பிரபல இயக்குநர் மரணம்
  • சரத்குமார் இரங்கல்
  • வீட்டில் உயிரிழந்தார்
பிரபல தமிழ் சினிமா இயக்குநர் மரணம்! பிரபலங்கள்-ரசிகர்கள் இரங்கல்.. title=

Director Director Surya Prakash : கோலிவுட் திரையுலகம், கடந்த சில ஆண்டுகளாக இயக்குநர்களின் இழப்புகளை எதிர்பாரா விதமாக சந்தித்து வருகிறது. காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர்களான விவேக், மயில்சாமி உள்ளிட்டோர் மாரடைப்பால் உயிரிழக்க, கடந்த ஆண்டு மனோபாலாவும் நுரையீரல் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். இவர்களது உயிரிழப்புகள் அனைத்தும் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

அதே போல, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நெகடிவ் கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த மயில்சாமியும் உயிரிழந்தார். இதே போல, பல தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த சரத்பாபுவும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அந்த வகையில், தற்போது பிரபல இயக்குநர் ஒருவர் மாரடைப்பு காரணமாக இறந்துள்ளது, திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரபல இயக்குநர் உயிரிழப்பு!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களை வைத்து படங்களை இயக்கியவர், சூர்ய பிரகாஷ். 1996ஆம் ஆண்டு, திரையுலகிற்குள் நுழைந்த இவர் ஒரு சில படங்களையே இயக்கி இருந்தாலும், அவை ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் அளவிற்கு பிரபலமாக இருந்தன. இந்த நிலையில், அவர் இன்று காலை தனது வீட்டில் உயிரிழந்திருக்கிறார். இவர் மாரடைப்பால் உயிரிழந்தாரா, அல்லது பிற காரணங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. 

இயக்கிய படங்கள்:

சூர்ய பிரகாஷ், 1996ஆம் ஆண்டு மாணிக்கம் எனும் படத்தை இயக்கி தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். இந்த படத்தை அவர் ராஜ் கிரணை வைத்து இயக்கியிருந்தார். 1998ஆம் ஆண்டு பெண் ஒன்று கண்டேன் படத்தை பிரபுவை வைத்து இயக்கினார். ஆனால் அப்படம் வெளியாகவில்லை. இதைத்தொடர்ந்து சரத்குமாரை வைத்து ‘மாயி’ படத்தை இயக்கினார். இப்படத்தில் வடிவேலு, மீனா, கோவை சரளா உள்பட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படமும், ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனம் பெற்ற படமாக இருந்தது. 

மேலும் படிக்க | 42 வயதில் 3வது திருமணம் செய்த பிரபல நடிகை! அதுவும் 6 வயது இளையவரை..

சினிமாவில் இருந்து ப்ரேக்!

மாயி படத்தை தொடர்ந்து, திவான் படத்தை இயக்கிய சூர்ய பிரகாஷ், தெலுங்கிலும் சில படங்களை இயக்கிநார். இவரது படங்கள் பெரிதாக ஓடாததை தொடர்ந்து, 2015ஆம் ஆண்ட்ல் ஆதிபார் படத்தை இயக்கிவிட்டு திரையுலகில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டார். கடைசியாக, அவர் இயக்கிய படம், வருசநாடு. 2015ஆம் ஆண்டில் வெளியாக வேண்டிய இப்படம், சில பிரச்சனைகள் காரணமாக வெளியாகாமல் போனது.

சரத்குமார் இரங்கல்:

நடிகர் சரத்குமாரின் ஹிட் படங்களுள் ஒன்று, மாயி. இந்த படத்தை இயக்கிய சூர்ய பிரகாஷ் இன்று உயிரிழந்ததை தொடர்ந்து அவருக்கு இரங்கல் தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். 

அதில், “வரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். சூர்ய பிரகாஷின் உயிரிழப்பிற்கு ரசிகர்களும் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | தயாராகிறது வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2! ஹீரோ சிவகார்த்திகேயன் இல்லை-வேறு யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News