Mookuthi Amman 2 Update : 2020ஆம் ஆண்டு வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம், மூக்குத்தி அம்மன். அந்த ஆண்டில் கொரோனா பரவ ஆரம்பித்ததால் இதை ஓடிடி தளமான டிஸ்னி ஹாட்ஸ்டாரில்தான் ரிலீஸ் செய்தனர். இதைப்பார்த்த ரசிகர்கள், தியேட்டரில் இதை பார்க்க தவறி விட்டோமே என்று ரசிகர்கள் பலர் கூறினர். அந்த அளவிற்கு படம் மக்களை கவர்ந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூக்குத்தி அம்மன்:
தாய், தாத்தா, மூன்று தங்கைகள் என ஒரு பெரிய குடும்பத்தை கட்டிக்காக்கும் பொருப்புள்ள இளைஞன், அவன் முன் திடீரென்று தோன்று தெய்வம் அனைத்து வரங்களையும் கொடுத்தால் எப்படியிருக்கும்? இதுதான் மூக்குத்தி அம்மன் (Mookuthi Amman) படத்தின் கதை. மக்கள் கடவுள் நம்பிக்கையை வைத்து, அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் அரசியல் செய்கின்றனர் என்பதையும், காமெடியான காண்பித்திருப்பார் ஆர்.ஜே.பாலாஜி. இவரே, இப்படத்தை எழுதி, இயக்கி, நடித்தும் இருந்தார். 


இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு தாயாக ஊர்வசி நடித்திருப்பார், தாத்தாகவாக நடிகர் மெளலி நடித்திருப்பார். தங்கைகளாக ஸ்முருதி வெங்கட், மது மைலாங்கோடி, அபி நக்ஷத்ரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வில்லனாக அஜய் கோஷ் நடித்திருந்தார். 


மேலும் படிக்க | பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகியுள்ள டீன்ஸ் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!


அம்மனாக வந்த நயன்தாரா:
மூக்குத்தி அம்மன் படத்தில், ஆர்.ஜே.பாலாஜிக்கு அருள் தரும் அம்மனாக நடித்திருந்தார் நயன்தாரா (Nayanthara). இந்த படத்தில் அவர் சில நிமிடங்களே வந்து செல்வார். இருப்பினும் இவருக்கான காட்சிகள் படம் முழுக்க வைக்கப்பட்டிருக்கும். இதனால், இவர் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்ததே பெரும்பாலானோருக்கு தெரியாமல் போனது. இவரது கதாப்பாத்திரமும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. 


மூக்குத்தி அம்மன் 2 அப்டேட்:
தமிழ் திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் தயாராகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.


இந்த ஆண்டில் மட்டும் 'சிங்கப்பூர் சலூன்', 'ஜோஷ்வா இமைப் போல் காக்க', 'பி டி சார்' என வரிசையாக வெற்றி படங்களை தயாரித்து வழங்கிய வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் அடுத்த வெற்றி படைப்பாக 'மூக்குத்தி அம்மன் 2' எனும் திரைப்படம் தயாராகவுள்ளது. 


இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படத்தில் திரையுலக முன்னணி நட்சத்திர நடிகர்கள் பலர் இணைந்து நடிக்கவுள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தை நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினரின் பட தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. 


இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு காணொளியாக வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குநர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்திரைப்படத்தை 2025 ஆம் ஆண்டில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.




மேலும் படிக்க | தெலுங்கு ராம் சரணுடன் இணைந்த கர்நாடக சக்கரவர்த்தி சிவ ராஜ்குமார்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ