Nayanthara Beyond The Fairy Tale OTT Release Date : தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர், நயன்தாரா. கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்கும் மேலாக, தென்னிந்தியாவின் பிரபல ஹீரோயினாக வலம் வரும் அவர், ரசிகர்களால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுகிறார். இவரது திருமணத்தை, இந்திய திரையுலகமே திரும்ப பார்த்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருமணம்..


நயன்தாரா-விக்னேஷ் சிவன், தங்களது 7 ஆண்டுகள் காதல் வாழ்க்கைக்கு பிறகு, 2022ஆம் ஆண்டு ஊரே வியக்கும்படி திருமணம் செய்து கொண்டனர். நடிகை நயன்தாரா, சிகப்பு நிற புடவையிலும், விக்னேஷ் சிவன் வித்தியாசமான வேட்டி சட்டையிலும் மேடையில் நடந்து வந்து மணமேடையில் அமர்ந்து திருமணம் செய்து கொண்ட விதம், பலருக்கு Dream Wedding-ஆக அமைந்தது. தாலி கட்டிய பிறகு விக்னேஷ் சிவன் நயன்தாராவின் நெற்றியில் முத்தம் கொடுத்ததும், நயன், கண்களில் கண்ணீரும் காதலும் ததும்ப அவரை பார்த்ததும் புகைப்படமாக பல நாட்கள் வைரலானது. 


வீடியோ ரிலீஸ்..


நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணத்தில் தமிழ் மட்டுமன்றி பாலிவுட்-டோலிவுட் என பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த திருமண வீடியோவை காண வேண்டும் என பலர் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்க, இது நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அது போலவே, அந்த வீடியோவின் டிரைலரும் வெளியானது. ஆனால், சொன்ன தேதியில் இந்த வீடியோ வெளியாகவில்லை. நெட்ஃப்ளிக்ஸ் தளம், நயன்தாராவின் திருமண புகைப்படங்களை எங்கும் பதிவிடக்கூடாது என கேட்டுக்காெண்டதாகவும், இதற்கு மாறாக பல புகைப்படங்களை இவர்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டதாகவும் கூறப்பட்டது. இதனால், திருமண வீடியாேவின் ஓடிடி ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. 



ஓடிடியில் வெளியாவது எப்போது? 


நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமண வீடியோ, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருப்பதாக அப்டேட் வந்துள்ளது. வரும் தீபாவளிக்கு, இந்த திருமண வீடியோவை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம் என கூறப்படுகிறது. இந்த படத்தை, டாக்குமெண்ட்ரி வகையில் எடுத்துள்ளனர். 


மேலும் படிக்க | நயன்-விக்னேஷ் சிவன் விவாகரத்தா? நடந்தது என்ன? முழு விவரம்..


நயன்தாரா-விக்னேஷ் சிவன்:


2005ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘ஐயா’ திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நயன்தாரா. மிக இளம் வயதில் திரையுலகிற்குள் வந்துவிட்ட இவர், தொடர்ந்து கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். திரையுலகிற்கு வந்த சில ஆண்டுகளிலேயே டாப்பிற்கு சென்ற இவர், இடையில் சிம்பு-பிரபுதேவா என இருவருடன் வெவ்வேறு சமயங்களில் காதலில் விழுந்தார். இந்த இரு காதல்களுமே மிகவும் மோசமான பிரேக்-அப் ஆக முடிந்ததாக கூறப்பட்டது. இவர்களையடுத்து நயன்தாரா சந்தித்த நபர்தான், விக்னேஷ் சிவன். 



2015ஆம் அண்டு வெளியான, ‘நானும் ரெளடிதான்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்த நயன்தாரா, அப்படத்தின் இயக்குநரான விக்னேஷ் சிவன் மீது காதலில் விழுந்தார். சில ஆண்டுகள் சீக்ரெட் ஆக தங்களது காதலை வளர்த்து வந்த இவர்கள், பின்பு பப்ளிக்காக சில ஆண்டுகள் டேட்டிங் செய்தனர். 


2022ஆம் ஆண்டு திருமணம் முடித்த இவர்களுக்கு, உயிர்-உலக் என இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். நயனின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட டாக்குமெண்டரி, அவரது குழந்தைகளே வளர்ந்த பின்பு வெளிவருவது குறித்து ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். 


மேலும் படிக்க | நயன்தாராவின் அழகிற்கு ‘இந்த’ உணவு காரணமாம்! நீங்களும் செய்யலாம்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ