Latest News Police Complaint Against Yuvan Shankar Raja : இருபது லட்சம் ரூபாய் வீட்டு வாடகை பணத்தை தராத காரணத்தினால் இசைமைபாளார் யுவன் சங்கர் ராஜா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான் வசித்து வந்த வீட்டுக்கு ரூ.20 லட்சம் வாடகை பணம் செலுத்தாமல் இரவோடு இரவாக வீட்டை காலி செய்ய முயற்சித்ததாகவும் சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லேக் ஏரியாவில் அமைந்துள்ள வீட்டில் இசையமைப்பாளர்  யுவன் சங்கர் ராஜா வாடகைக்கு குடியிருந்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா வசித்து வந்த வாடகை வீடு என்பது அஜ்மத் பேகம் என்பவருக்கு சொந்தமானதாக கூறப்படுகிறது இந்நிலையில் அஜ்மத் பேகத்தின் சகோதரர் முகமது ஜாவித் என்பவர் யுவன் சங்கர் ராஜா மீது திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகார் தற்போது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


அந்த புகாரில்,கடந்த 2 ஆண்டுகளாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார் என்றும் இந்த வீடு எனது சகோதரிக்கு சொந்தமானது. இந்த வீட்டுக்கு யுவன் சங்கர் ராஜா ரூ.20 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்தார். வாடகையை எனது சகோதரி கேட்கும்போதெல்லாம் யுவன் சங்கர் ராஜா தராமல் அலட்சியம் காட்டி மறுத்து பேசி வந்துள்ளார்


மேலும் படிக்க | கொலை மிரட்டல் விடுத்தாரா நடிகை சரண்யா! வெளியான CCTV!


எனவே நான் வாடகை பணம் கேட்க போன் செய்தேபோதும் அவர் செல்போனை எடுக்கவில்லை. தற்போது அவர் எந்த தகவலும் சொல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து கொண்டு காலி செய்வதாக பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் கூறி உள்ளார் .மேலும் நேற்றும், இன்றும் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் வெளியே எடுத்து சென்றுள்ளார் .


இது சம்பந்தமாக புகார் அளித்துள்ளேன் இதை தீர விசாரித்து யுவன் சங்கராஜாவிடம் வாடகை பாக்கி மற்றும் சேதத்துக்கான இழப்பீட்டை பெற்று தர வேண்டும்'' என புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த புகாரை பெற்று கொண்டு போலீசார் தொடர்ந்து விசாரணைை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து யுவன் சங்கர் ராஜா தரப்பில் விளக்கம் கொடுக்கப்படவில்லை. 


கோட் பட பாடல்களுக்கு விமர்சனம்:


வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படம் உருவாகி இருக்கிறது. படம், அடுத்த மாதம் (செப்டம்பர்) 5ஆம் தேதி வெளியாவதை தொடர்ந்து, அதன் டிரைலர் நேற்று வெளியானது. டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நெகடிவ் விமர்சனங்களை சந்தித்தது. குறிப்பாக, ஸ்பார்க் மற்றும் விசில் போடு பாடல்களை ரசிகர்கள் அதிகமாக கலாய்த்தனர். இந்த சமயத்தில் யுவன் இது போன்ற போலீஸ் புகாரில் மாட்டியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 


மேலும் படிக்க | யுவன் சம்பவமா-யுவனுக்கு சம்பவமா? விசில் போடு பாடல் எப்படியிருக்கு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ