Police Complaint Against Actress Saranya Ponvannan Latest News : ஆபாச வார்த்தைகளால் திட்டி, கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்ததாக பக்கத்து வீட்டு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விஷயம் திரைத்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் முழுமையாக என்ன நடந்தது என்பதை இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அம்மா வேடங்களில் நடித்து பிரபலமானவர்..


தமிழ் திரைப்படங்களில் அம்மா வேடங்களில் நடித்து மக்களிடையே பிரபலமானவர் சரண்யா பொன்வண்ணன். இயக்குநரும் நடிகருமான பொன்வண்ணனின் மனைவியான இவர், கமல் நடிப்பில் 1987ஆம் ஆண்டு வெளியான நாயகன் படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானார். தொடர்ந்து ஹீரோயின் ரோலில் நடித்துக்கொண்டிருந்த இவர், பின்னர் அண்ணி ரோலில் நடிக்க ஆரம்பித்தார். ராம் படத்தில் நடிகர் ஜீவாவிற்கு அன்னையாக நடித்து தாய்மார்கள் மனங்களில் இடம் பிடித்தார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து தென்னிந்தியா அளவில் பிரபலமான நாயகியாக இருக்கிறார். இவரது வயது, 53. 


நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா, பரத், தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், கருணாஸ், மாதவன் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு தாயாக நடித்திருக்கிறார். வருடத்திற்கு நான்கைந்து படங்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார், சரண்யா பொன்வண்ணன். இவரது எளிமையான பேச்சும், தாய்மை குணம் பொருந்திய சுபாவமும் அனைவருக்கும் பிடிக்கும். இந்த ஆண்டில் மட்டும், இவர் நடிப்பில் 4 படங்கள் வெளியாக உள்ளன. அதில், 1 படம் ஜெயம் ரவி நடிக்கும் பிரதர் படமாகும்.


வழக்குப்பதிவு...


சரண்யா-பொன்வண்ணன் தம்பதிக்கு, சாந்தினி மற்றும் பிரியதர்ஷினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர். சரண்யா, தனது கார் நிறுத்துவது தொடர்பாக பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட சண்டையில் வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபமடைந்த நடிகை சரண்யா, அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து ஆபாசமாகத் திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது...


இதுதொடர்பாக, பக்கத்து வீட்டுப்பெண் ஸ்ரீதேவி சிசிடிவி காட்சிகளை சமர்பித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் சரண்யா பொன்வண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 


ரசிகர்கள் ரியாக்‌ஷன்..


தமிழ் திரையுலகை பொறுத்தவரை, ஒரு சில பிரபலங்களுக்கு காரணமேயின்றி, பலர் ரசிகர்களாக இருப்பர், அவர்களை வெறுப்பவர்கள் மிகவும் குறைவாக இருப்பர். அப்படி, ஹேட்டர்ஸே இல்லாத நடிகையாக இருப்பவர் சரண்யா பொன்வண்ணன். காரணம், அவர் தேர்ந்தெடுக்கும் அனைத்தும் அம்மா கதாப்பாத்திரங்கள் என்பது மட்டுமன்றி, தனது நேர்காணல்களிலும் மிகவும் மென்மையாகவும் தன்மையாகவும் பேசி பலரை ஈர்த்திருக்கிறார். இவர் இதுவரையில் ‘அச்சமின்றி’ என்ற ஒரே ஒரு படத்தில்தான் நெகடிவ் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அப்போதே இவரை வில்லியாக ஏற்க மறுத்த ரசிகர்கள், தற்போது இயல்பு வாழ்க்கையில் அவர் இப்படி செய்திருப்பாரா என பேசிக்க்கொள்கின்றனர். இதை நம்பமுடியவில்லை என்றும் சிலர் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். 


மேலும் படிக்க | லவ்வர் படத்திற்கு மணிகண்டன் நடிக்கும் அடுத்த படம்! வெளியான அப்டேட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ