மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் தொடரின் செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ஆரவ், சந்தோஷ் பிரதாப், அமித் பார்கவ், நடிகை வரலட்சுமி சரத்குமார், இயக்குநர் தயாள் பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகை வரலட்சுமி சரத்குமார்,
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. கொன்றால் பாவம் படத்தில் இயக்குநர் நிருபித்து விட்டார். இந்த படம் பார்க்கும் போது நன்றாக இருக்கும். கதை கேட்கும் போதே நல்லா இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரமும் செட் ஆகும் போது நன்றாக வந்துள்ளது. அதை படத்தில் நீங்கள் பார்ப்பீர்கள்.
பிக் பாஸ் நேரங்களில் நானும் ஆரவும் ஜாலியாக / நண்பர்களாக தான் கூத்தடிப்போம். அவர் ரொம்ப நல்ல நடிகர். அவரோடு இந்த படத்தில் நடித்ததில் ரொம்ப சந்தோஷமாக இருந்தது எனவும், படம் பார்க்கும் போது கோல்ட் வார் என்று நான் எதற்காக சொன்னேன் என்று புரியும். சந்தோஷ் பிரதாப்பும் இந்த படத்தில் அவ்வளவு நன்றாக பொருந்தி இருக்கிறார்.
யாசருக்கு கல்யாணம் ஆகப்போகிறது. எங்கள் குழுவுக்கு ரொம்ப பிடித்த மனிதர் யாசர். எங்கள் படத்தில் எந்த கான்ட்ரோவர்சியும் இல்லை. நன்றாக இருக்கும். நீங்கள் போய் படத்தை பாருங்கள் என்றும் , எல்லா படத்துலயும் கான்ட்ரொவர்சி வைத்து விடுகிறார்கள். நம்ம படத்துல அதெல்லாம் கிடையாது. கதை இருக்கிறது. எல்லாரும் நன்றாக நடித்துள்ளோம். படத்துக்கு ஆதரவு தர வேண்டும் என்று கூறினார்.
அவர் இல்லாததால் மறந்து விட்டேன். மஹத்துக்கு நன்றி சொல்லனும். நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக, மஹத் ஐ லவ் யூ டா... படம் பண்ணுடா என்று சொன்னதற்காக , தான் பண்ணுவதாக சொன்னான். அதற்காக மஹத்துக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் கூறினார்.
செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த நடிகை வரலட்சுமி சரத்குமார்,
கொன்றால் பாவம் - அதில் கொலைகாரி...இதில் போலீஸ்காரி. இதிலாவது நேர்மையாக இருப்பீர்களா என்ற கேள்விக்கு, இந்த வார்த்தையே பிடிக்கலை. நேர்மை இல்லையெனில் யாரும் எதுவும் சாதித்ததில்லை என்றும் காமெடியாக கூறினார்.
நீங்கள் ரம்யா கிருஷ்ணனுக்கு அடுத்து என்று சொன்னார்கள். அப்போது ரஜினி கூட நடிப்பீங்களா என்ற கேள்விக்கு, எனக்கு தெரிந்து எல்லாரோடும் நடித்து விட்டதாக நினைக்கிறேன். சூப்பர் ஸ்டார் கூட நடிக்கணும்னு எல்லாருக்கும் தான் ஆசை. எனக்கும் தான். வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் . நடிப்பது என்பது என் வேலை. அதனால் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் எனக்கு அது நன்றாக பொருத்தினால் நான் நடிப்பேன் என்று கூறினார்.
மேலும் உடல் எடை குறைத்தது பற்றிய கேள்விக்கு, நான் உடம்பை குறைத்து ஒன்றரை வருடமாகிறது. குண்டாக இருந்தாலும் பிரச்சினை. ஒல்லியாக இருந்தாலும் பிரச்சினை. என்னதான் செய்வது என்று சிரித்து கொண்டே பேசியவர், படங்களுக்காகவும், ஃபிட் ஆக இருக்க வேண்டும் என்பதற்காகவும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் ஆரவ்,
கலக தலைவன் படம் முடிந்து என்ன படம் பண்ணலாம் என்று யோசிக்கும் போது இந்த படம் வந்தது. அதில் வில்லன் கதாபாத்திரம். இந்த படத்தை டப்பிங்கில் பார்க்கும் போது ரொம்ப சர்ப்ரைஸாக இருந்தது.
2017 முதல் வரலட்சுமி உடன் நடிக்க வேண்டிய வாய்ப்பு தள்ளி போய் கொண்டே இருந்தது. தற்போது இந்த படத்தில் ஒர்க் பண்ணி உள்ளோம். யாசர் எங்கள் குழுவின் மொத்த என்டர்டெயின்மென்ட். அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தவர், அமித் & மஹத் சுற்றி தான் படம் நகரும். அந்த அளவிற்கு நன்றாக நடித்துள்ளார்கள் என்றும் படக்குழுவினரை பாராட்டி பேசினார்.
ஒரு கதை சொல்லி அதை அப்படியே எடுப்பது பெரிய விஷயம். அந்த அளவிற்கு நன்றாக எடுத்துள்ளார் என்று இயக்குநரை பாராட்டி பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த ஆரவ்,
பிக் பாஸ் முடித்து வெளியே வரும் போது எல்லாரும் உங்களை பாராட்டினார்கள். ஆனால் உங்களை போல் ஒரு சிலர் தான் வெளியே தெரிகிறார்கள். ராஜ் கமல் நிறுவனம் உங்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்களா?? என்ற கேள்விக்கு, அந்தந்த நேரம் வரும் போது தேவையெனில் கூப்பிடுவார்கள் என்று நினைக்கிறேன். ஒரு ஷோவில் வெற்றி பெற்றதால் மட்டும் கூப்பிட மாட்டாங்க என்றும் கூறினார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குநர் தயாள் பத்மநாபன்,
கொன்றால் பாவம் மாதிரி தரமான படம் மூலம் என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசியவர், பொதுவாக ஒரு இயக்குநருக்கு ஒரு மொழியில் படம் கொடுக்கும் போது முதல் படத்துக்கும் இரண்டாம் படத்துக்கும் ஒரு போதிய இடைவெளி இருக்க வேண்டும் எனவும், ஆனால் தமிழில் குறைந்தது 6 மாதத்திலாவது பண்ண வேண்டும் என்று நினைத்ததாகவும் கூறினார்.
இந்த கதையை எடுக்கும் போதான அனுபவங்களை பகிர்ந்து கொண்டு பேசியவர், 3 மாதத்துக்குள் இவர்கள் அடுத்த படத்துக்கு ( ஆஹா ஓடிடி) கூப்பிடுவதற்குள் முடிக்க வேண்டும் என்றும், மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷனை பொறுத்தவரை, கொரோனா காலத்தில் எழுதிய ஒரு திரைக்கதை. குடும்பத்தில் இருட்டில் நடக்கும் சில குறும்புகளை பற்றிய படமாக இருக்கும் என்றும், இது க்ரைம் த்ரில்லர் ஸ்டோரியாகவும் இருக்கும் இது வேறு மாதிரியான திரைக்கதை என்றும் கூறினார்.
ஒரிஜினலாக தியேட்டர்களில் தான் ரிலீஸ் செய்ய முடிவு செய்தோம். ஆனால் இன்று டிரண்ட் மாறி விட்டது. ஓடிடி மாதிரிக்கு சில படங்களை உருவாக்குவதும் முக்கியமாக இருக்கிறது. இந்த படம் அப்படி இருக்கும் என்றும் கூறினார்.
ஓடிடி தளத்தில் தேர்வு செய்யப்படும் நிறைய படங்களேமே நன்றாக இல்லை என்றும், தியேட்டர்களுக்கு வந்த பிறகு தான் ஓடிடிக்கு வர வேண்டும் என்று வரும் தகவல் உண்மையா என்ற கேள்விக்கு, அது எனக்கு தெரியவில்லை. என்னால் வகைபடுத்தி பார்க்க முடியவில்லை என்றும், லாக் அப் டெத்துக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த படத்தில் எந்த கான்ட்ரோவர்சியும் இல்லை. இது க்ரைம் த்ரில்லர் படம் எனவும் கூறினார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் சந்தோஷ் பிரதாப்,
கொன்றால் பாவம் இப்போது தான் முடிந்த மாதிரி இருக்கு. அடுத்த படம் வந்தது. ஸ்கூல் லீவு முடிஞ்சு நம்ம ப்ரண்ட்ஸ் ஐ பாக்குற மாதிரி தான் இந்த டீம். இது ரொம்ப சந்தோஷமான டீம் என்றும், இது குடும்பமாக மீண்டும் இணைந்தது மாதிரி தான் எனவும் கூறினார்.
நல்ல படங்களுக்கு விளம்பரம் தேவையில்லை. ஆனால் இந்த காலத்தில் நல்லதோ, கெட்டதோ கூவி கூவி விற்க வேண்டியதாக இருக்கிறது. இதுவும் நல்ல படம் நிச்சயம் ரீச் ஆகும். இந்த படத்தை நீங்கள் நிச்சயமாக கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ