Pushpa 2 Box Office Collection Drop On Day 19 : தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில், சமீபத்தில் வெளியான படம் புஷ்பா 2: தி ரூல். இந்த திரைப்படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். இப்படம், இந்தியாவை தாண்டி உலகளவில் பெரிய ஹிட் அடித்திருக்கிறது. ஆனால், அல்லு அர்ஜுனின் கைதுக்கு பிறகு இந்த வசூல் அப்படியே மந்தமாகி விட்டதாக கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புஷ்பா 2:


2021ஆம் ஆண்டில் வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகம், யாரும் எதிர்பார்க்காத வகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இதில் இடம் பெற்றிருந்த புஷ்பா-ஸ்ரீவள்ளி கதாப்பாத்திரமும், பகத் பாசிலின் வில்லத்தனமான நடிப்பும் பலரையும் வெகுவாக கவர்ந்தன. இதையடுத்து அதன் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைப்பெற்று வந்தது. அந்த வகையில், இதன் 2 ஆம் பாகம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியானது. 


முதல் பாகத்தில் புஷ்பா எப்படி தனக்கான சந்தன மரக்கடத்தல் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குகிறான் என்பதை காண்பிக்கப்பட்டது. இந்த பாகத்தில், அவன் எப்படி அதில் ராஜாவாக வாழ்கிறான் என்பதை காண்பித்துள்ளனர். ஆனால், இந்த பாகத்தில் பகத் பாசிலின் கதாப்பாத்திரத்திற்கு அதிக காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தின் ரன் டைம் 3 மணி நேரம் 15 நிமிடமாக இருந்தாலும், அந்த நேரம் தெரியாத அளவிற்கு திரைக்கதை வேகமாக இருந்ததால், படம் வெற்றி பெற்றது. 


மேலும் படிக்க | புஷ்பா படத்தில் விஜய்யை விட அதிக சம்பளம் வாங்கியுள்ள அல்லு அர்ஜுன்!


அல்லு அர்ஜுன் கைது:


புஷ்பா 2 படத்தின் முதல் காட்சி, ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் திரையிடப்பட்டது. படத்தை பார்ப்பதற்காக ஏற்கனவே இந்த திரையரங்கிற்கு ரசிகர்கள் கூட்டமாக படையெடுத்திருந்தனர். அதே சமயத்தில் அல்லு அர்ஜுனும் அங்கு வந்ததால், காவலர்களால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதாக கூறப்படுகிறது. இதில், 38 வயது மிக்க ரேவதி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். மேலும், இவரது 9 வயது மகனும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு அவரும் உயிரிழந்தார். 


இந்த உயிரிழப்புகளுக்கு அல்லு அர்ஜுன்தான் காரணம் என்று கூறி அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சில நாட்களுக்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டு ஒரு இரவு முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வருவது சம்பந்தமான சிசிடிவி காட்சிகளும் வெளியானது. அவருக்கு எதிரான ஆதாரங்கள் வலுப்பெற்றிருப்பதால் அவர் போலீஸாரின் விசாரணைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். 


புஷ்பா 2 வசூலில் பாதிப்பு!


புஷ்பா 2 திரைப்படம் முதல் நாளிலேயே சுமார் ரூ.164 கோடிக்கும் மேல் வசூலித்தது. தொடர்ந்து படிப்படியாக முன்னேறிய கலக்ஷன், படம் ரிலீஸான 4 நாட்களிலேயே 600 கோடி வசூலை தாண்டியது. இதையடுத்து, தற்போது அப்படம் 16 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது. ஆனால், அல்லு அர்ஜுனின் கைது, இந்த வசூலை சற்று பாதித்திருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசிக்கொள்கின்றனர். 


இப்படம், 3 வாரங்களுக்கு ரூ.2000 கோடியை தாண்டி விடும் என ஆரம்பத்தில் கணிக்கப்பட்டது. ஆனால், இப்போது ரூ.1416 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த வாரத்தை விட, இந்த வாரம் இப்படத்தின் வசூல் 63% குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


மேலும் படிக்க | புஷ்பா 2 படத்தின் வெற்றிக்கு காரணம் அல்லு அர்ஜுன் இல்லை! வேறு யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ