Puhspa 2 Movie Box Office Collection: இந்த மாதம் வெளியான புஷ்பா 2 திரைப்படம் பல சாதனைகளை படைத்து வருகிறது. உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படம்,இந்திய சினிமாவில் புதிய சாதனைகளைப் படைத்துள்ளது. டிசம்பர் 5 அன்று வெளியான இப்படம் 16 நாட்களில் உலகளவில் ரூபாய். 1,508 கோடி வசூலித்துள்ளது.
புஷ்பா 2 திரைப்படம் இந்தியா மட்டும் 15 நாட்களில் ரூபாய். 988.92 கோடி வசூலித்துள்ளது. இதற்கு முன்பு இருந்த பல சாதனைகளை தகர்த்துள்ளது.
‘புஷ்பா 2’ திரைப்படம், தென்னிந்திய சினிமாவின் பெருமையை உயர்த்தி, இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. அல்லு அர்ஜுனின் நடிப்பு மற்றும் படத்தின் வலுவான கதைக்களம், ரசிகர்களை ஈர்த்துள்ளது.
இயக்குனர் சுகுமாரின் இயக்கத்தில், ‘புஷ்பா 2’ திரைப்படம், இந்திய சினிமாவின் வளர்ச்சியை மேலும் உயர்த்தியுள்ளது. அல்லு அர்ஜுன், தனது ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்து, எதிர்கால படைப்புகளிலும் அவர்களை மகிழ்விக்க உறுதியளித்துள்ளார்.
புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா தவிர ஃபஹத் பாசில், ஜெகபதி பாபு, தனஞ்சயா, ராவ் ரமேஷ், சுனில் மற்றும் அனசுயா பரத்வாஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் புஷ்பா 2 திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.