தனுஷ் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் ரஜினி-கமல்!?
Dhanush Starrer Ilayaraja Biopic Latest News: நடிகர் தனுஷ் நடிக்கும் ஒரு படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது எந்த படம் தெரியுமா?
Dhanush Starrer Ilayaraja Biopic Rajinikanth Kamal Haasan To Do Cameo Roles: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர், தனுஷ். இவர், தனது கைவசம் பல படங்களை வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு அவரது 50வது படத்திற்கு ‘ராயன்’ என பெயர் வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படம் மட்டுமன்றி, இவர் நடிக்கும் இன்னொரு முக்கியமான படம் குறித்த தகவல்களும் சமீபத்தில் வெளியானது.
இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு:
ரசிகர்களால் ‘இசைஞானி’ என்று அழைக்கப்படும், இசை ஜாம்பவான், இளையராஜா. இவரது வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளதாக தககவல்கள் வெளியானது. இந்த படத்தில், இளையராஜா இந்தியாவிற்கே இசைஞானியாக வளர்ந்தது எப்படி என காண்பிக்க உள்ளனர்.
இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில், நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்த தகவல்களை கேட்ட ரசிகர்கள், அவர்தான் இளையராஜாவின் கதாப்பாத்திரத்திற்கு சரியானவராக இருப்பார் என்று கூறி வருகின்றனர்.
கேமியோ கதாப்பாத்திரத்தில் கமல்-ரஜினி?
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, கமல்ஹாசனையும் ரஜினிகாந்தையும் பலர் பாேட்டி நடிகர்களாக பார்த்து வருகின்றனர். இவர்கள் இருவருமே இளமை காலம் முதல், இப்போது வரை நல்ல நண்பர்களாகவே இருக்கின்றனர். இவர்களின் பெரும்பாலான பழைய படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். அதனால், தனுஷ் இளையராஜாவாக நடிக்கும் அவரது வாழ்க்கை வரலாற்று படத்தில் கமலும் ரஜினியும் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஜினி-கமல், இருவருமே பல ஆண்டுகளாக ஒன்றாக படங்களில் சேர்ந்து நடிப்பதில்லை. இருவருமே பெரிய கமர்ஷியல் பட ஹீரோக்கள் என்பதால், இவர்கள் ஒரே படத்தில் சேர்ந்து நடிப்பார்களா என்பது சந்தேகம்தான். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகுதான் எதுவாக இருந்தாலும் உறுதிபட தெரியவரும்.
மேலும் படிக்க | தளபதி விஜய் நிராகரித்து பின்னால் பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படங்கள்!
யார் இயக்குநர்?
இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்குநர் அருண் மாத்தேஸ்வரன் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. பாலிவுட் இயக்குநர் ஆர்.பால்கி, தனக்கு இளையராஜாவின் கதையை இயக்க ஆர்வமுள்ளதாகவும் அவரது 50 ஆண்டுகால பயணத்தில் அவர் செய்த சாதனைகளை அந்த படத்தில் காண்பிக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த வாய்ப்பு அருண் மாத்தேஸ்வரனுக்கு சென்றுள்ளது.
தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் (ஜனவரி) வெளியான ‘கேப்டன் மில்லர்’ படத்தை அருண் மாத்தேஸ்வரன்தான் இயக்கியிருந்தார். இந்த படம், கலவையான விமர்சனங்களையும் குறைவான வசூலையும் பெற்றதை ஒட்டி, தனுஷின் இன்னொரு படத்தையும் இவரே இயக்க உள்ளார் என்ற தகவலை கேட்ட ரசிகர்கள் அரண்டு போயுள்ளனர்.
தனுஷின் அடுத்தடுத்த படங்கள்..
நடிகர் தனுஷ், “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற படத்தை இளம் நடிகர்களை வைத்து இயக்கியிருக்கிறார். இதையடுத்து தனது 50வது படமான ‘ராயன்’ படத்தையும் அவரே எழுதி இயக்கி இருக்கிறார். இது அவர் இயக்கும் மூன்றாவது படமாகும். இதையடுத்து, மாரி செல்வராஜ் இயக்கும் ஒரு படத்திலும் தனுஷ் நடிக்க இருக்கிறார். அடுத்து ‘ராஞ்சனா’ பட இயக்குநர் ஆனந்த் எல்.ராஜ் இயக்கும் ‘தேரி இஷ்க மெயின்’ என்ற படத்திலும் தனுஷ் நடிக்கிறார்.
மேலும் படிக்க | ‘வணங்கான்’ பட நாயகியை ஷூட்டிங்கின் போது அடித்த பாலா? நடிகையே கொடுத்த நேர்காணல்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ