தளபதி விஜய் நிராகரித்து பின்னால் பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படங்கள்!

தளபதி விஜய் தமிழ் திரையுலகில் முக்கியமான டாப் ஹீரோக்களில் ஒருவர். தனது கரியரில் பல ஹிட் படங்கள் கொடுத்துள்ளார். விஜய்யால் நிராகரிக்கப்பட்ட ஆனால் பின்னாலில் பிளாக்பஸ்டராக அமைந்த படங்களை பற்றி பார்ப்போம்.

 

1 /5

தூள்: விக்ரம் நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியான படம் தூள். இப்படத்தின் இயக்குனர் தரணி முதலில் இந்த கதையை விஜய்யிடம் கூறியதாகவும், அவருக்கு பிடிக்கவில்லை என்பதால் விக்ரம் நடித்ததாகவும் கூறப்படுகிறது. 

2 /5

முதல்வன்: விஜய் தந்தை எஸ்ஏசி-யிடம் உதவி இயக்குனராக இருந்த ஷங்கர் விஜய்க்காக எழுதிய கதை தான் முதல்வன். ஆனால் அந்த சமயத்தில் விஜய்க்கு அரசியல் ஆசை இல்லாததால் படத்தில் நடிக்க முடியாமல் போனது. பின்னர் அர்ஜுன் இந்த படத்தில் நடித்தார்.    

3 /5

சண்டக்கோழி: லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் சண்டக்கோழி. முதலில் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனா விஜய், பின்னால் நிராகரித்தார்.    

4 /5

சிங்கம்: ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து சூப்பர்ஹிட் ஆனா படம் சிங்கம். கடந்த 2010ம் ஆண்டு இப்படம் வெளியானது.  முதலில் இந்த கதை விஜய்க்கு சொல்லப்பட்டது, ஆனால் அவர் மறுத்துவிட்டார்.   

5 /5

தீனா: ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தீனா படம் அஜித்திற்கு முக்கிய படங்களில் ஒன்று.  2001ம் ஆண்டு வெளியான இப்படத்தில் முதலில் விஜய் தான் நடிக்க இருந்தார்.  ஆனால் விஜய் நிராகரித்தால் அஜித் நடித்து இருந்தார்.