Latest News Chinmayi Sripada : மலையாள திரையுலகில், பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, இதை தனியாக விசாரிக்க நீதிபதி ஹேமா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், மலையாள திரையுலகில் இருக்கும் பிரபலங்களால் பாதிக்கப்பட்ட நடிகைகள் பலர் புகார்களை தெரிவித்து வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சினிமா துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா?


மகளிருக்கு “அந்த உரிமை கிடைச்சிருச்சி, இந்த சுதந்திரும் கிடைச்சிருக்கு” என பலர் பேசினாலும், இன்றளவும் அவர்கள் ஏதேனும் ஒரு வகையில் ஒதுக்கப்பட்டு-அடக்கப்பட்டு வருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அந்த வகையில், திரையுலகில் இருக்கும் பெண்களும் ஏதேனும் ஒரு வகையில், பாலியல் சீண்டல்களை அனுபவித்து வருகின்றனர். இந்திய திரையுலகில் ஒட்டு மொத்தமாகவே பல நடிகைகள் இந்த கொடுமையில் இன்னும் சிக்கி தவிக்கின்றனர். ஆனால், இது குறித்து வெகு சிலரே பேசி வருகின்றனர். அப்படி பேசுபவர்களையும் அதிகாரத்தில் இருப்பவர்கள் அடக்கி வைப்பது வழக்கமாகி வருகிறது. 


இந்த நிலையில், முதன்முதலாக இந்த பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்திலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனும் நோக்கிலும் கேரளாவில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதற்காக அமைக்கப்பட்டிருப்பதுதான், ஹேமா கமிட்டி.


தமிழ் திரையுலகில்..


சில ஆண்டுகளுக்கு முன்பு பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார், பாடகி சின்மயி. அன்று முதல், இன்று வரை அவரை செல்லாக்காசாக ஆக்க பலர் திட்டமிட்டதாகவும், அவரை திரையுலகை விட்டே தூக்க பலர் முயற்சித்ததாகவும் அவரே கூறியிருக்கிறார். “பாலியல் குற்றம் நடக்கும் போது இதை வந்து பேச வேண்டியதுதானே..இவ்ளோ லேட்டா ஏன் சொல்ற?” என்றும் பலர் மூளையே இல்லாமல் கேள்வி கேட்டனர். 


இதையடுத்து, கேரளாவில் ஹேமா கமிட்டி கொடுத்துள்ள அதிர்வலைகள் தமிழ் திரையுலகையும் தாக்கியிருக்கிறது. நடிகை ராதிகா இது குறித்து பகிர்ந்த சில விவரங்களும் பலருக்கு பகீர் கிளப்பியது. இந்த நிலையில், ஒரு சிலர் தமிழ், தெலுங்கு உள்பட பிற தென்னிந்திய மொழி சினிமாக்களிலும் இது போன்ற ஒன்றை கொண்டு வர வேண்டும் என்று கூறி வருகின்றனர். இது குறித்து ஒரு செய்தி சேனலுக்கு பேட்டியளித்திருக்கும் சின்மயி, “அதற்கு வாய்ப்பே இல்லை” என்று கூறியிருக்கிறார். அவர் அப்படி கூறியதற்கு காரணத்தையும் அவரே தெரிவித்திருக்கிறார். 


மேலும் படிக்க | பிரபல நடிகையின் பாலியல் குற்றச்சாட்டு! பதிலளித்த ரியாஸ் கான்..என்ன சொன்னார் தெரியுமா?


காரணம் என்ன? 


கோலிவுட்டில் எந்த மாற்றமும் நிகழாது என்று கூறிய அவர், இங்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் அனைவரும் கையில் பவர் வைத்திருப்பவர்களாகவும், அரசியல் கட்சிகளின் ஆதரவில் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறர்.  மேலும், தமிழகத்தில் கேரளாவை போல women in Cinema Collective in the Tamil industry என்றும் தெரிவித்திருக்கிறார். 



வாய் திறக்காத பிரபலங்கள்..


கேரள திரையுலகில் நடந்துள்ள விஷயம், சாதாரண மக்களையே இந்த அளவிற்கு தாக்கியிருக்கும் போது, நடிகர்களை எந்த அளவிற்கு தாக்கியிருக்க வேண்டும்? ஆனால், நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலர் இது குறித்து தனக்கு தெரியவே தெரியாது என்று பேசினர். நடிகர் ஜீவா, சமீபத்திய நேர்காணலில் “அது பாேன்ற விஷயங்கள் கேரளாவில்தான் நடந்திருக்கிறது..தமிழ் சினிமாவில் இல்லை…” என்று கூறினார். நடிகர் ராதிகா, சின்மயி மற்றும் சில பிரபலங்கள் தவிர வேறு யாரும் இது குறித்து பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | AMMA நடிகர் சங்க தலைவர் மோகன்லால் ராஜினாமா... திரையுலகில் அதிர்ச்சி - அடுத்தது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ