Thangalaan Movie Twitter X Review Tamil : பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் படம், தங்கலான். தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமான இது, சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 15ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. விக்ரம் கதாநாயகனாக நடித்திருப்பதாலும், புரட்சிமிகு கருத்துகளை கூறும் பா.இரஞ்சித்தின் கதை என்பதாலும் இப்படம் மக்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. இந்த எதிர்பார்ப்புகள், ரசிகர்களை பூர்த்தி செய்திருக்கிறதா? இங்கு அது குறித்து பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தங்கலான் திரைப்படம்:


தமிழ் திரையுலகில் மக்களின் கவனம் ஈர்க்கும் இயக்குனராக இருப்பவர் பா.இரஞ்சித். இவர் இயக்கத்தில் தற்போது வெளியாக இருக்கும் படம் தான் தங்கலான். இதில் விக்ரமுடன் இணைந்து பார்வதி திருவோது, மாளவிகா மோகனன், டேனியல், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் ட்ரெய்லர், மக்களை ஆச்சரியத்தினால் ஆழ்த்தியது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மற்றும் ரஞ்சித்தின் நீளம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இரண்டும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன. 


கதை என்ன? 


பிரிட்டிஷ் ராஜ்யத்தின் போது, கே ஜி எஃப் தங்க சுரங்கத்தின் அருகே வாழ்ந்த பழங்குடியின மக்கள் குறித்தும், அவர்களை வைத்து தங்கத்தை எடுக்க முயற்சிக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் குறித்தும் இப்படம் இயக்கப்பட்டுள்ளது. இதில், ஆரத்தி இன்னும் சூனியக்காரி ஆக வருகிறார், மாளவிகா மோகனன். இவரை தடுக்கும் தங்கலானாக வருகிறார், விக்ரம். இறுதியில் அந்த தங்கம் இவர்களின் கையில் கிடைத்ததா? ஆரத்தியின் நிலை என்ன? இது குறித்து விளக்குகிறது மீதி படம்..


விமர்சனம்..


தங்கலான் படத்தை பார்த்த சிலர், தங்களின் விமர்சனங்களை ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர். அவற்றை இங்கு பார்க்கலாம்.


“யாரு பைத்தியம்?”


ஒரு ரசிகர், “இந்த படத்துல யாரு பைத்தியம்னே தெரியல..” என விமர்சனத்தை தெரிவித்திருக்கிறார்.



“ஆடியன்ஸை இப்படி யோசிக்க வெச்சுட்டாரே பா.இரஞ்சித்!” என அவர் புலம்பியிருக்கிறார்.


பர்சனல் அட்டாக்?


சிலர், படம் பார்க்காமலேயே நெகடிவ் ரிவ்யூ கொடுப்பதாக ஒரு ரசிகர் தெரிவித்திருக்கிறார். 



ரஞ்சித்தின் அரசியல் மீது இருக்கும் வெறுப்பால், அவர் படத்தின் மீது பலர் இவ்வாறு மோசமான மனநிலையை வைத்திருப்பதாக அந்த ரசிகர் தெரிவித்திருக்கிறார். 


மேலும் படிக்க | ரகு தாத்தா திரை விமர்சனம்! கொஞ்சம் சிரிப்பு..ரொம்ப கடுப்பு..படம் எப்படி?


தங்கலானின் உலகம்..


படம் பார்கையில் நம்மை அந்த உலகிற்கே அழைத்து செல்கிறார் ரஞ்சித் என ஒரு ரசிகர் தெரிவித்திருக்கிறார். 



மேலும், படத்தின் ஒளிப்பதிவு, நடிப்பு, இசை என அனைத்தும் தரமாக இருப்பதாக அந்த ரசிகர் தெரிவித்திருக்கிறார். 


கலவையான விமர்சனங்கள்..


மொத்தத்தில், தங்கலான் திரைப்படத்திற்கு மக்கள் கலவையான விமர்சனத்தையே அளித்திருக்கின்றனர். ஒரு சிலர், படம் அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை என்று கூற, ஒரு சிலர் பா.இரஞ்சித் மீது இருக்கும் வெறுப்பினை அப்படியே வெளிப்படையாக கக்கி வருகின்றனர். ஆனால், கிராஃபிக்ஸ் .காட்சிகள் நன்றாக இருக்கிறது என்பது அனைவரது பொதுவான கருத்தாக இருக்கிறது. எனவே, இந்த படத்தை கண்டிப்பாக தியேட்டரில் சென்று பார்க்கலாம். 


மேலும் படிக்க | தங்கலானின் வெற்றி மிகப்பெரியதாக இருக்கும்: சூர்யா வாழ்த்து


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ