The GOAT Director Venkat Prabhu Wife : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில், சமீபத்தில் வெளியான படம் தி கோட் (The Greatest Of All Time). இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தி கோட் திரைப்படம்:


சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் படம், தி கோட். விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருக்கிறார். இதில், இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இரு விஜய்க்கு ஜோடிகளாக சினேகா மற்றும் மீனாட்சி செளத்ரி ஆகியோர் வருகின்றனர். இவர்களை தவிர, பிரபு தேவா, சினேகா, பிரசாந்த், அஜ்மல், மைக் மாேகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். 


வெங்கட் பிரபுவின் படம் என்றாலே, அதில் கமர்ஷியல் சார்ந்த விஷயங்களுக்கு பஞ்சம் இருக்காது. தி கோட் படமும் 3 மணி நேரமாக இருந்தாலும், எந்த இடத்திலும் போர் அடிக்காமல் விறுவிறுப்பாக செல்கிறது. மேலும், பல ஹீரோக்களின் ரெஃரென்ஸ்களை இதில் வைத்திருப்பதால் படம் ரசிகர்களால் திருவிழா போல கொண்டாடப்பட்டு வருகிறது. 


வெங்கட் பிரபுவின் சம்பவம்..


தமிழ் திரையுலகின் ஜாலியான இயக்குநர் என்று புகழப்படுபவர் வெங்கட் பிரபு. இவர் முதன் முதலில் இயக்கிய சென்னை-600 028 திரைப்படம், இளைஞர்களால் இப்போதும் கொண்டாடப்படும் படமாக இருக்கிறது. இதையடுத்து இவர் இயக்கிய கோவா, மங்காத்தா, மாநாடு உள்ளிட்ட அனைத்து படங்களும் மாபெறும் ஹிட் அடித்தன.


இத்தனை ஆண்டுகளாக திரையுலகில் இருந்தாலும், இப்போதுதான் இவருக்கு விஜய்யுடன் இணைந்து பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. அதிலும், தி கோட் படம் விஜய்யின் கடைசி படத்திற்கு முந்தைய படமாக அமைந்து விட்டதால் இதை ரசிகர்களுக்கு தரமாக கொடுக்க வேண்டும் என்று எண்ணி, பல சிறப்பான சம்பவங்களை படத்தில் செய்திருக்கிறார். இது, இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | விஜய் எப்படியிருக்காரு பாருங்களேன்..! தி கோட் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்..


வெங்கட் பிரபுவின் குடும்பம்…


இயக்குநர் வெங்கட் பிரபு, இளைராஜாவின் சகோதரரும் திரை பிரபலமுமான கங்கை அமரனின் மூத்த மகன் ஆவார். அப்பா, பெரியப்பா, தம்பிகள், அண்ணன்கள், அக்காக்கள் என வெங்கட் பிரபுவின் குடும்பத்தில் இருக்கும் அனைவருமே சினிமா பின்னணியில் இருப்பவர்களாக இருக்கின்றனர்.



சென்னையிலேயே பிறந்து வளர்ந்த வெங்கட் பிரபு, 2001ஆம் ஆண்டு ராஜலக்‌ஷ்மி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, ஷிவானி என்ற மகள் இருக்கிறார். இவர்களின் குடும்ப புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 


தி கோட் படத்திற்காக வெங்கட் பிரபு வாங்கிய சம்பளம்:


தி கோட் திரைப்படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் சார்பாக கல்பாத்தி அர்ச்சனா தயாரித்திருந்தார். இப்படம், சுமார் ரூ.400 கோடி அளவில் தயாராகி இருந்தது. இதில், விஜய்யின் சம்பளம் மட்டும் 200 கோடி என்று அர்ச்சனாவே ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். அதே போல, இயக்குநர் வெங்கட் பிரபு இப்படத்திற்கு வாங்கியிருக்கும் சம்பளம் குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது. இவருக்கு, சுமார் ரூ.10 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இந்த தகவல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. 


நடிகரும் இயக்குநர் வெங்கட் பிரபுவன் தம்பியுமான பிரேம்ஜிக்கு, சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைப்பெற்றது. இவர், இந்து என்ற பெண்ணை, திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | 50 வயசு விஜய்யா இது? இவ்ளோ அழகா இருக்காறே!! GOAT பட போட்டோக்கள்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ