50 வயசு விஜய்யா இது? இவ்ளோ அழகா இருக்காறே!! GOAT பட போட்டோக்கள்..

The GOAT Movie Latest Photos : விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் தி கோட் படத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இது, ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகிறது. 

The GOAT Movie Latest Photos : வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம், தி கோட் (The Greatest Of All TIme). விஜய் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் அவருடன் இணைந்து சினேகா, மீனாட்சி சௌத்ரி, லைலா, பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மைக் மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, வரும் செப்டம்பர் 5ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. இதையடுத்து, இந்த படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. இதனை, படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டிருக்கிறார். 

1 /8

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம், தி கோட். தமிழ் சினிமாவின் ஜாலி இயக்குநர் என அழைக்கப்படும் வெங்கட் பிரபுவுடன் முதன்முறையாக விஜய் கைக்கோர்த்திருக்கிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

2 /8

நடிகர் விஜய், அரசியலில் நுழைவதற்கு முன்பு நடிக்கும் ஜாலியான படம் இது. இதையடுத்து தனது 69வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். தி கோட் படத்தின் படப்பிடிப்புகள் சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இதையடுத்து, இப்படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் வரிசையாக வெளியாகிய வண்ணம் இருந்தன. 

3 /8

நடிகர் விஜய், தி கோட் படத்தில் இரண்டு கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஒரு கதாப்பாத்திரம் தந்தையாகவும் இன்னொரு கதாப்பாத்திரம் மகனாகவும் இருக்கிறது. இதில், மகனின் கதாப்பாத்திரம் 20களில் இருப்பதால் அதற்கு மட்டும் டீ-ஏஜிங் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 

4 /8

தி கோட் திரைப்படத்தில் இளமையான விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்க, வளர்ந்த விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்திருக்கிறார். சினேகாவும் விஜய்யும் வசீகரா திரைப்படத்திற்கு பிறகு இந்த படத்தில்தான் ஒன்றாக நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

5 /8

சில நாட்களுக்கு முன்பு தி கோட் படத்தின் டிரைலர் வெளியானது. முன்னர் வெளியான பாடல்கள் நெகடிவ் விமர்சனங்களை பெற, டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. 

6 /8

தி கோட் படத்தில், மைக் மோகன் வில்லனாக நடிக்கிறார். 80களில் முக்கிய நடிகராக இருந்த இவர், சினிமாவை விட்டு பல ஆண்டுகள் விலகியிருந்தார். தற்போது தி கோட் படம் மூலம் கம்-பேக் கொடுத்திருக்கிறார். 

7 /8

தி கோட் படத்தில் விஜய்யின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. இதனை, படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். 

8 /8

இந்த போட்டோக்களில் நடிகர் விஜய் பார்ப்பதற்கு 50 வயதானவர் போலவே தெரியவில்லை என்றும், இளமையாக இருப்பதாகவும் கூறி வருகின்றனர். இவை தற்போது வைரலாகி வருகின்றன.