Venkat Prabhu About GOAT Negative Reviews : கோலிவுட்டின் டாப் ஹீரோவாக விளங்கும் நடிகர் விஜய் நடிப்பில், சமீபத்தில் வெளியான படம் தி கோட் (The Greatest Of All Time). வெங்கட் பிரபு இயக்கியிருந்த இந்த படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி அர்ச்சனா தயாரித்து வழங்கியிருக்கிறார்.
தி கோட் திரைப்படம்:
தமிழ் திரையுலகின் ஜாலியான இயக்குநராக கருதப்படும் வெங்கட் பிரபு, முதன்முறையாக விஜய்யுடன் ‘தி கோட்’ படத்தில் கைக்கோர்த்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் விஜய்யின் லுக் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்ததால், படம் அவ்வளவுதான் போல என ரசிகர்கள் பலர் நினைத்தனர். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி வெளியானது. இப்படத்தை விஜய் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடியதை அனைத்து திரையரங்குகளிலும் பார்க்க முடிந்தது.
தி கோட் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி செளத்ரி ஆகியோர் நடித்திருக்கின்றனர். பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், ஜெயராம் உள்ளிட்ட பலர் இதில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படத்தில் எதிர்பாராத கேமியோக்கள் இருப்பதால் ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளி குதித்தனர்.
இந்த ஆண்டின் பிப்ரவரி மாதம் “தமிழக வெற்றிக்கழகம்” என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், விரைவில் திரையுலகை விட்டு விலக இருக்கிறார். விஜய்யின் இந்த திடீர் முடிவு, அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. இதையடுத்து, அவர் நடிக்கும் கடைசி படத்திற்கு முந்தைய படமாக அமைந்தது தி கோட் திரைப்படம்.
நெகடிவ் விமர்சனங்கள்..
சமீப காலங்களாக, எந்த படம் வெளியானாலும், அந்த படம் எவ்வளவு நன்றாக இருந்தாலும், அதனை குறை கூறுவதற்கு என்றே ஒரு விமர்சனக்குழு கிளம்பிவிடும். அப்படி, சில நாட்களுக்கு முன்பு வெளியான தி கோட் படத்திற்கும் பல்வேறு வகைகளில் இருந்து நெகடிவான விமர்சனங்கள் கிளம்பியது. இதற்கு, இயக்குநர் வெங்கட் பிரபு ட்விட்டர் எக்ஸ் ஸ்பேஸில் தனது பதிலை தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க | GOAT OTT : தி கோட் படம் எந்த ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தெரியுமா?
“படத்திற்கு பல நெகடிவ் விமர்சனங்கள் வந்துள்ளது. இதில் எதையாவது பார்த்து, ‘இந்த விஷயத்தை மாற்றியிருக்கலாம்’ என உங்களுக்கு தோன்றியதா?”என ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு வெங்கட் பிரபு, பெரும்பாலான விமர்சனங்கள் படத்தை பற்றி பேசாமல் அதில் வைத்திருக்கும் ரெஃபரன்ஸை பற்றி கூறுவதாகவும், தனக்கு அதைப்பற்றி கவலையே இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
மேலும், “எந்த சூப்பர் ஸ்டாரின் படங்களிலும் வேறு ஹீரோக்களின் பட ரெஃபரன்ஸை வைக்க மாட்டார்கள். அதற்கு அந்த ஹீரோ ஒப்புக்கொள்வாரா என்று கூட தெரியாது. விஜய் நினைத்திருந்தால் இதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி அந்த காட்சிகளை நீக்க சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் அனைத்து ஹீரோக்களின் ரசிகர்களும் நம் படத்தை கொண்டாட வேண்டும் என்று விரும்பினார். ரெஃபரன்ஸை தாண்டி, படத்தில் என்ன கொண்டாடும் வகையில் இருக்கிறது என்பதை விமர்சனத்தில் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்று கூறியிருந்தார்.
விமர்சனம் கொடுப்பது அனைவரது தனிப்பட்ட விருப்பம் என்றும், “அந்த படம் அவங்களுக்கு பிடிக்கலன்னா..பிடிக்கலதான்..அதை கேள்வி கேட்க முடியாது” என்றும் வெங்கட் பிரபு கூறினார்.
மக்கள் கருத்து என்ன?
தி கோட் திரைப்படம், ரசிகர்கள் மட்டுமன்றி, பொது மக்களுக்கே பெரிதும் பிடித்த படமாக இருந்தது. திரையரங்கிலும் இப்படத்தை பெரிதாக என்ஜாய் பண்ணி பார்த்தாக பலர் கருத்துகளை தெரிவித்தனர். ஆனாலும், படத்தில் லாஜிக் ஓட்டைகள் மற்றும் தேவையற்ற இடங்களில் பாடல்கள் சொருகப்பட்டிருந்தது குறையாக பார்க்கப்பட்டது. இதைத்தாண்டி படம் நன்றாக இருப்பதாக, பெரும்பாலான விமர்சகர்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | எதிர்பார்க்காத ட்விஸ்ட்..மாஸ் காட்டிய விஜய்..GOAT எப்படி? விமர்சனம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ