எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா The GOAT படம்? ட்விட்டர் விமர்சனம் சொல்வது இதுதான்..!
Latest News The GOAT Movie Twitter X Review : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தி கோட் படம், செப்டம்பர் 5ஆம் தேதியான இன்று வெளியாகி இருக்கிறது. இதையடுத்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
Latest News The GOAT Movie Twitter X Review : ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெரிய அளவில் தூண்டிய தி கோட் திரைப்படம், தற்போது வெளியாகி இருக்கிறது.
தி கோட் திரைப்படம் :
தமிழ் திரையுலகின் ஜாலி இயக்குநராக அறியப்படுபவர், வெங்கட் பிரபு. இவருடன், முதன்முறையாக தி கோட் படத்தில் கைக்கோர்த்திருக்கிறார் விஜய். விரைவில் முழு நேரமாக அரசியலில் களமிறங்க இருக்கும் விஜய்க்கு, இப்படம் கடைசி படத்திற்கு முந்தைய படமாக மாறியிருக்கிறது. இதனால், படம் எப்படியிருந்தாலும் இதை பார்த்தே ஆக வேண்டும் என்ற காரணத்திற்காக ரசிகர்கள் பலர் தியேட்டரை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
ட்விட்டர் எக்ஸ் விமர்சனம்:
சில ரசிகர்கள், இப்போதே விமர்சனங்களை தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர். ஒரு ரசிகர் படத்தின் இடைவேளை காட்சி நன்றாக இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
முதல் பாதி..
தி கோட் படத்தின் முதல் பாதி குறித்த விமர்சனங்கள் வெளியாகியிருக்கின்றன. இதில், எந்த இடத்திலும் காட்சிகள் இழுவையாக இல்லை என்றும், திரைக்கதை நன்றாக இருப்பதாகவும் ஒரு ரசிகர் தெரிவித்து இருக்கிறார். படம் முழுக்க, எங்கேஜிங் ஆக இருப்பதாகவும், டி-ஏஜிங் அருமையாக இருப்பதாகவும் அந்த ரசிகர் கூறியிருக்கிறார்.
டீசண்டான படம்..
ஒரு ரசிகர் தி கோட் படத்தின் கதை, டீசண்டாக இருப்பதாக கூறியிருக்கிறார். படம் முழுக்க தளபதி ஷோதான் என்று கூறியிருக்கும் அவர், ஆக்ஷன் காட்சிகள் படத்தில் நன்றாக வந்திருப்பதாகவும் மொத்தத்தில் படம் மாஸாக இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
தளபதி vs இளைய தளபதி:
கோட் படத்தில் இரு விஜய்யும் மோதிக்கொள்ளும் காட்சி இருப்பது, நன்றாக இருப்பதாக ஒரு ரசிகர் தெரிவித்து இருக்கிறார்.
முன்கூட்டியே ரிலீஸ்!!
தி கோட் திரைப்படம், உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் காலை 4 மற்றும் 5 மணி காட்சிகளுக்கு தடை இருப்பதால், 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியது தமிழக அரசு. இதனால், பிற மாநில ரசிகர்களை விட, தமிழகத்தில் இருப்பவர்கள் தி கோட் படத்தை மிகவும் லேட்டாகவே பார்க்கின்றனர். அமெரிக்காவில், இந்திய நேரப்படி கோட் படம் காலை 4 மணிக்கு முதல் காட்சியாக இருக்கிறது. இதனால், அந்த நாட்டில் கோட் படத்தை பார்த்த ரசிகர்களும், வெளி மாநிலத்தை சேர்ந்த சில ரசிகர்களும், தி கோட் படத்தை விமர்சித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் விமர்சனங்களை பதிவிட்ட வண்ணம் இருக்கின்றனர்.
படக்குழு…
தி கோட் திரைப்படத்தில், விஜய்யுடன் இணைந்து தமிழ் திரையுலகின் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருக்கின்றனர். அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் வரும் விஜய்க்கு, சினேகா-மீனாட்சி செளத்ரி ஆகியோர் நடித்திருக்கின்றனர். கூடவே லைலா, ஜெயராம், பிரசாந்த், பிரபு தேவா, பிரசாந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் வருகின்றனர். 80களில் டாப் ஹீரோவாக இருந்த மைக் மோகன், நீண்ட இடைவேளைக்கு பிறகு தி கோட் படத்தின் மூலம் கம்-பேக் கொடுத்திருக்கிறார்.
மேலும் படிக்க | தி கோட் படத்தில் விஜயகாந்தின் AI தோற்றம்!! வைரலாகும் புகைப்படங்கள்..
படத்திற்கு கொடுத்த ஹைப்..
பொதுவாக, விஜய்யின் படம் என்றாலே எப்போதும் அதன் மீது ஒரு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். கடைசியாக வெளியான ‘லியோ’ திரைப்படத்திற்கு அப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால் படம் கடைசியில் ரசிகர்களை ஏமாற்றியது. இந்த தவறை, தி கோட் படத்தில் செய்யக்கூடாது என்று நினைத்த படக்குழுவினர் படம் குறித்த எந்த பிற தகவல்களையும் பெரிதாக கூறாமல் இருந்தனர். ஆனால், ரிலீஸிற்கு நெருக்கத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, வைபவ் ஆகியோர் கொடுத்த நேர்காணல் ரசிகர்களிடம் கொஞ்சமாக இருந்த எதிர்பார்ப்பை பன்மடங்காக மாற்றியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | தி கோட் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு!! எத்தனை காேடி வரும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ