GOAT படத்திற்கு முதலில் வைக்கப்பட இருந்த பெயர்! வெங்கட் பிரபு பகிர்ந்த தகவல்..

The GOAT Movie Title First Choice : வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கோட் படத்திற்கு முன்னர் வைக்கப்பட இருந்த பெயர் என்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Aug 31, 2024, 11:08 AM IST
  • ‘தி கோட்’ படத்திற்கு முதலில் வைக்கப்பட இருந்த பெயர்
  • பிரச்சனை வரும் என்பதால் மாற்றம்..
  • என்ன தெரியுமா?
GOAT படத்திற்கு முதலில் வைக்கப்பட இருந்த பெயர்! வெங்கட் பிரபு பகிர்ந்த தகவல்.. title=

The GOAT Movie Title First Choice : விஜய் நடிப்பில், விரைவில் வெளிவர இருக்கும் படம் தி கோட் (The Greatest Of All Time). வெங்கட் பிரபு இயக்கியருக்கும் இந்த படம், சயின்ஸ் ஃபிக்ஷன்-ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் ப்ரமோஷனுக்காக இயக்குநர் வெங்கட் பிரபு பல்வேறு நிகழ்ச்சிகளிள் கலந்து கொண்டு வருகிறார்.அப்போது, கோட் படத்திற்கு முன்னர் வைக்கப்பட இருந்த பெயர் குறித்து அவர் பேசியிருக்கிறார்.

தி காேட் திரைப்படம்:

கோலிவுட்டின் ஜாலி இயக்குநர் என்று கூறப்படும் வெங்கட் பிரபுவுடன், முதல் முறையாக தி கோட் படத்தில் கைக்கோர்த்திருக்கிறார் நடிகர் விஜய். இந்த படத்தில் இரு கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இவருக்கு, சினேகா-மீனாட்சி செளத்ரி என இரு நாயகிகள் ஜோடியாக நடித்திருக்கின்றனர். அதே போல, பிரபு தேவா, பிரசாந்த், அஜ்மல், ஜெயராம் உள்ளிட்ட பலர் இதில் விஜய்யுடன் சேர்ந்து முக்கிய கதாப்பாத்திரமாக வருகின்றனர். 

தி காேட் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கி, பின்னர் ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் நடைப்பெற்றது. நடிகர் விஜய், இதில் ஒரு தோற்றத்தில் நடுத்தர வயதில் இருப்பவராகவும், இன்னொரு தோற்றத்தில் 20களில் இருக்கும் இளைஞராகவும் நடித்திருக்கிறார். இதில், டீ-ஏஜிங் தோற்றம் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை சந்தித்தது. 

GOAT படத்திறக்கு வைக்கப்பட இருந்த பெயர்..

சமீபத்தில் ஒரு நேர்காணலில கலந்து கொண்ட வெங்கட் பிரபு, தான் காேட் படத்திற்கு முதலில் வைத்த பெயர் ‘காந்தி’தான் என்று சொன்னார். ஆனால், அதற்கு டைட்டில் கிடைக்காது என்ற காரணத்தினால் வேறு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தாராம். அப்போது “காந்தி தானே இந்தியாவின் The Greatest Of All Time” என்று தோன்றவே, அதே பெயரை படத்திற்கு வைத்து விட்டதாக கூறியிருக்கிறார். 

மேலும் படிக்க | Thalapathy 70 : தளபதி 70 கன்ஃபாரம்?! இயக்குநர் இவர்தான்..வைரலாகும் சூப்பர் நியூஸ்!

The GOAT Movie

படத்தில் விஜய்யின் பெயர்..

தி கோட் படத்தில், நடுத்தர வயது விஜய்யின் கதாப்பாத்திரத்திற்கு ‘காந்தி’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இதுவரை, பல திரைப்படங்களில் பல ஹீரோக்களுக்கு படங்களில் காந்தி என பெயரிடப்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம் இது குறித்து சர்ச்சையாக எதுவும் பேசாதவர்கள், விஜய் படத்திற்கு மட்டும் சலசலப்பை ஏற்படுத்தும் கேள்விகளை கேட்டனர். குறிப்பாக, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வெங்கட் பிரபுவிடன் “காந்தி என பெயர் வைத்துக்கொண்டு விஜய் படத்தில் சரக்கடிப்பது போன்ற காட்சிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன..இது சர்ச்சையாகாதா?” என கேட்டார். 

அதற்கு வெங்கட் பிரபு, “என் நண்பனுக்கு கூட காந்தி என்று பெயர்..அவன் செய்யும் காரியங்களை வெளியவே சொல்ல முடியாது. காந்தி என்று பெயர் வைத்தால் சரக்கடிக்க கூடாதா?” என்று கூறினார். மேலும், இந்த பெயருக்கு பின்னால் எந்த அரசியல் காரணங்களும் இல்லை என்றும் அவர் கூறினார்.

ரிலீஸும் ரசிகர்களின் எதிர்பார்ப்பும்..

நடிகர் விஜய், தனது சினிமா பயணத்தை விரைவில் முடிக்க இருக்கிறார். இதையடுத்து, தி கோட் படம் அவரது திரை வாழ்க்கையின் இறுதி படங்களுள் ஒன்று என்பதால் இதை தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர். படம், வரும் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. 

மேலும் படிக்க | நெப்பாேடிசம் நிறைந்த GOAT..ரசிகர் சொன்ன விஷயம்-வெங்கட் பிரபு கொடுத்த பதில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News