Latest News This Week Tamil Cinema Updates : 2024ஆம் ஆண்டின் பிற்பகுதி, தமிழ் சினிமாவிற்கு ஜாக்பாட் அடித்த மாதங்களாக இருக்கிறது. முதல் 6 மாதங்களுக்கு எந்த பெரிய படங்களும் வெளியாகவில்லை. ஜூலை மாதத்தில் இருந்து பெரிய படங்கள் வெளியாக ஆரம்பித்தன. இதைத்தொடர்ந்து பல படங்கள் வரிசையாக வெளியாகின. வரும் தீபவளிக்கு கூட தமிழில் 3 பெரிய படங்கள் வெளியாகின்றன. இதனால், இந்த வாரம் தமிழ் சினிமாவிற்கு அப்டேட் வாரமாக இருக்கிறது. அந்த வகையில், இந்த வாரம் என்னென்ன அப்டேட்டுகளை எதிர்பார்க்கலாம் என்பதை இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கங்குவா:


சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படம், வரும் நவம்பர் 14ஆம் தேதியன்று வெளியாக இருக்கிறது. இந்த படத்தை கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். பான்-இந்தியா அளவில் உருவாகியிருக்கும் இந்த படத்தை எதிர்பார்த்து பலர் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இதில், சூர்யா இரு வேடங்களில் நடித்திருக்கிறார்.



இந்த படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். டீசரில் இடம் பெற்றிருந்த இசை, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் Yolo இந்த வாரம் வெளியாகியிருக்கிறது.  கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, பிரம்மாண்டமான அளவில் நடைபெற இருக்கிறது. வரும் அக்டோபர் 26ஆம் தேதி, சென்னை நேரு ஸ்டேடியத்தில் இந்த விழா நடக்க இருக்கிறது.



சிம்புவின் புதிய படம்:


நடிகர் சிம்பு, தனது 48வது படத்தின் அறிவிப்பை நேற்று வெளியிட்டார். 2k கிட்ஸிற்கு 90s கிட்ஸ் சாயலில் ஒரு படம் கொடுப்பதாக முன்னர் தெரிவித்த அவர், சொன்னபடி அந்த படத்தின் போஸ்டரில் தம்+மன்மதன்+வல்லவன்+விண்ணை தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்களின் சாயல் அடங்கிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டார். 



‘ஓ மை கடவுளே’ படத்தை இயக்கிய அஷ்வத் மாரிமுத்துவடன் கைக்காேர்த்திருக்கிறார் சிம்பு. இந்த படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


மேலும் படிக்க | தீபாவளிக்கு திரைக்கு வரும் 6 பெரிய படங்கள்!! முழு லிஸ்ட் இதோ..


அமரன் டிரைலர்:


தீபாவளிக்கு வெளியாகும் படங்களில், ரசிகர்கள் எதிர்பார்ப்பை அதிகமாக தூண்டியிருக்கும் திரைப்படம் அமரன். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். 



புல்வாமா தாக்குதலை வைத்தும், அதில் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்தை வைத்தும் இந்த படம் உருவாகியிருக்கிறது. இதனை, ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல்ஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க, இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். சாய் பல்லவி இந்து ரெபேகா வர்கீஸ் கேரக்டரில் நடித்திருக்கிறார். அமரன் படம், வரும் 31ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டிருக்கின்றனர். 


பிரதர் டிரைலர்:


தீபாவளிக்கு ரிலீஸாகும் இன்னொரு பெரிய படம், பிரதர். இந்த படத்தில், ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் வருகிறார். குடும்ப-காமெடி கதையாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், நட்ராஜ் நட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். 



ராஜேஷ்.எம் இயக்கியிருக்கும் இந்த படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | “கங்குவா படத்தில் குறையே இல்லை!” படம் பார்த்தவர் சொன்ன விமர்சனம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ