அய்யயோ! டிடிக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் இருக்கும் போட்டோக்கள் வைரல்..
TV Anchor Dhivyadharshini Surgery : தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான தொகுப்பாளராக இருப்பவர், திவ்யதர்ஷினி. இவர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
TV Anchor Dhivyadharshini Surgery : தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகமாக பார்க்கும் முகமாக இருந்தவர், திய்வதர்ஷினி என்ற டிடி. இவர் தற்போது தான் இருந்த நிலையை இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களாக வெளியிட்டிருக்கிறார். இது, வைரலாகி வருகிறது.
டிடியின் வைரல் பதிவு:
தொகுப்பாளர் டிடிக்கு, Arthritis எனப்படும் மூட்டு வீக்கம் குறைபாடு இருக்கிறது. இதனுடன் அவர் போராடி வந்தது அனைவருக்கும் தெரியும். தற்போது, அது தொடர்பான பதிவைதான் அவர் வெளியிட்டிருக்கிறார்.
2 மாதத்திற்கு முன்னர் தனக்கு முட்டியில் பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தனது முட்டியை இதன் மூலம் முற்றிலுமாக மாற்றியிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க | மரண படுக்கையில் அப்பாவுக்கு செய்து கொடுத்த சத்தியம்! உருக்கமாக பேசிய டிடி..
டிடியின் உருக்கமான பதிவு!
டிடி தனது பதிவில் என்ன கூறியிருக்கிறார் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
“கடந்த 3 மாதங்கள் எனக்கு சோதனையான காலமாக அமைந்தது. 2 மாதங்களுக்கு முன்பு என் முழங்காலில் ஒரு பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டத்து. ஆம் நான் மொத்த முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளேன். கடந்த 10 ஆண்டுகளில் இது எனது 4வது அறுவை சிகிச்சை ஆகும். எனது வலது முழங்காலுக்கு இதுவே இறுதி அறுவை சிகிச்சையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்கிறேன். இந்த பயணம் மிகுந்த வலி நிறைந்ததாக இருந்தாலும், நல்ல முன்னேற்றம் தருவதாக இருந்தது. நான் என்னையும் என் முழங்காலையும் கடுமையாக வறுத்திக்கொண்டிருக்கிறேன்.
2 மாத அறுவை சிகிச்சைக்குப் பிறகு, திரையில் என்னை நேசிப்பவர்களுக்காகவும், எப்போதும் என்னை ஆதரித்தவர்களுக்காகவும், என் வலியைப் புரிந்துகொண்டவர்களுக்காகவும் இந்தப் பதிவை வெளியிடுகிறேன். உங்கள் அனைவரிடமிருந்தும் இந்த எல்லையற்ற அன்பைப் பெற நான் என்ன செய்தேன் என்று நினைத்து இன்னும் ஆச்சரியப்படுகிறேன். இத்தனை ஆண்டுகளாக எனக்காக பிரார்த்தனை செய்தவர்களிடமும், வேலையில் எனக்கு ஆதரவளித்தவர்களுக்கும் என் அடி மனதில் இருந்து ஒரு பெரிய நன்றியை சொல்ல விரும்புகிறேன். அது என்னை, எனது கருப்பான நாட்களைக் கடக்க உந்துதலாக அமைந்தது. இந்த வலி என்னை ஒரு கசப்பான நபராக மாற்ற வேண்டாம் என்று நான் எப்போதும் எனக்குள் சொல்லிக்கொண்டேன், அதைச் செய்ய உங்கள் அன்பு எனக்கு உதவியது. இப்போது , மீண்டும் வலுவாக வருவேன் என்று உறுதியளிக்கிறேன் (நான் ஏற்கனவே இருக்கிறேன்).
இவ்வாறு டிடி தனது பதிவில் கூறியிருக்கிறார்.
டிடியின் வாழ்வில் ஓயாமல் வீசிய புயல்:
தொகுப்பாளர் திவ்யதர்ஷினி மிக இளம் வயதிலேயே திரையில் தோன்றியவர். ஆரம்பத்தில் சில படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்த இவர், பின்பு பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக மாறினார். கொஞ்சம் கொஞ்சமாக இவர் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்ததை ஒட்டி, காஃபி வித் டிடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். இந்த நிகழ்ச்சி ஹிட் அடித்த கையோடு, இவருக்கு 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்களின் மன வாழ்க்கை 3ஆண்டுகளில் முடிவுக்கு வந்துவிட்டது.
தனியாக வாழ ஆரம்பித்த டிடி, சில வருடங்களுக்கு முன்பு கீல்வாத நோயால் (arthritis) பாதிக்கப்பட்டார். எந்த ஷோவாக இருந்தாலும், பல மணி நேரங்கள் நின்றே வேலை பார்த்த இவர், அதன் பிறகு சில நிமிடங்கள் கூட நிற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். இப்படி வாழ்க்கையில் புயலுக்கு மேல் புயல் வீசினாலும் பலமாக அதை எதிர்த்து எதிர்நீச்சல் போட்டு வருகிறார், டிடி.
மேலும் படிக்க | விவாகரத்தில் முடிந்த திருமணம்..தாங்க முடியாத சாேகம்! மனம் திறந்த டிடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ