ஆபாசம் உடைகளில் அல்ல, உங்கள் பார்வையில்- பிரபல தொகுப்பாளர்

பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்கிற டிடி தற்போது அந்தமானுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார்.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 28, 2021, 11:42 AM IST
ஆபாசம் உடைகளில் அல்ல, உங்கள் பார்வையில்- பிரபல தொகுப்பாளர் title=

பிரபல தனியார் தொலைகாட்சியில் நட்சத்திர தொகுப்பாளராக இருந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவருக்கு ரசிகர் கூட்டம் அதிகம் உள்ளனர். காலில் செய்துகொண்ட சர்ஜரி காரணமாக டிடி அதிக நேரம் நிற்கமுடியாது என்கிற காரணத்தினால் அவர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஷோ தொகுத்து வழங்குவதை தவிர்த்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது டிடி என்கிற திவ்யதர்ஷினி அந்தமானுக்கு சுற்றுலா சென்று உள்ளார். அங்கிருந்து பல பதிவுகளை அவ்வப்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் காட்டு பகுதியில் இருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் 'சர்வைவர் ஷோவுக்கு போறீங்களா' என கேட்டிருந்தனர். 'அட பாவிங்களா, எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க' என கேட்டிருந்தார் அவர்.

ALSO READ கடைசில என்னையும் மீம் போட வச்சிட்டீங்களே! ஆர்யாவின் கலக்கல் டிவீட்!

இதற்கிடையில் நேற்று இவர் நீச்சல் உடையில் கடற்கரையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரல் ஆகி வருகிறது. நீச்சல் உடை அணிந்து போஸ் கொடுத்தது பற்றி பேசிய டிடி, 

 

 

அது உடையில் அல்ல, மனநிலை தான் காரணம். நான் கடலில் குளிக்க நீச்சல் உடை அணிந்திருக்க, அந்தமானில் ஒரு ஆண் கூட என்னை பாதுகாப்பு இல்லாமலோ, தவறாகவோ உணர வைக்கவில்லை. அதனால் அது mindsetல் தான் இருக்கிறது. எனவே உலக சுற்றுலா தினமான இன்று நான் ஒவ்வொரு பெண், திருநங்கை பயணம் செய்யும்போது பாதுகாப்பாக உணர வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

ALSO READ ஆயிரத்தில் ஒருவன்: உண்மையை போட்டுடைத்த செல்வராகவன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News