வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் 52 நிமிடம் பேசிய ரஜினி!! அப்படி என்ன சொன்னார்?
Vettaiyan Audio Launch Rajinikanth Speech : வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று நடைப்பெற்றது. இந்த நிலையில் ரஜினியின் பேச்சு குறித்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Vettaiyan Audio Launch Rajinikanth Speech : டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம், வேட்டையன். இந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து பான்-இந்திய நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் செப்டம்பர் 20ஆம் தேதியான நேற்று, வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது.
வேட்டையன் பட விழா:
ரஜினிகாந்தின் 170வது படமாக, வேட்டையன் திரைப்படம் உருவாகியிருப்பதால், இதன் மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. வழக்கமாக, ரஜினிகாந்தின் பட விழா என்றாலே அது ரசிகர்களால் மாபெரும் கொண்டாட்டமாக பார்க்கப்படும். வேட்டையன் பட விழாவும் அப்படிப்பட்ட ஒன்றாக அமைந்தது. நேற்று நடந்த விழாவில் ரஜினிகாந்த், டிஜேஞானவேல், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ரானா டகுபதி, அனிருத் உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில், வேட்டையன் படத்தின் டீசரும் வெளியிடப்பட்டது. படத்தில் நடித்த முக்கிய கதாப்பாத்திரங்களை கடந்த சில நாட்களாக அறிமுகம் செய்து வைத்த லைகா நிறுவனம் ரஜினியின் கதாப்பாத்திரம் குறித்த விவரத்தை மட்டும் வெளியிடவில்லை. டீசரிலும், ரஜினியின் கேரக்டர் குறித்த விளக்கங்கள் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், வேட்டையன் படவிழா மேடையில் படக்குழுவினர் அனைவரும் பேசினர். ஆனால், அனைவரும் காத்திருந்தது ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் பேச்சுக்காகத்தான்.
ரஜினியின் பேச்சு…
நடிகர் ரஜினிகாந்த், வழக்கமாக தனது பட விழாக்களில் ஏதேனும் குட்டி கதை கூறுவார், ரசிகர்களை மோட்டிவேட் செய்யும் வகையில் பல கருத்துகளை பேசுவார். தன்னுடன் நடித்தவர்கள் மற்றும் அவர்களுடன் ஏற்பட்ட சுவாரஸ்ய அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வார். ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவின் போது அவர் கூறிய “காக்கா-கழுகு” கதை வேறு ஒரு பிரபல நடிகரை அட்டாக் செய்வது போல இருப்பதாக கூறப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அந்த பிரபல நடிகரும் தனது பட விழாவில் பதிலடி கொடுத்தால் இது இரு நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையே மோதலாக வெடித்தது. இதற்கு நடிகர் ரஜினிகாந்த், லால் சலாம் பட விழாவில் விளக்கம் கொடுத்தார். இந்த முறை அவர் வேட்டையன் பட விழாவில் பேசியது என்ன? இங்கு காண்போம்.
சகுனிகள் குறித்த பேச்சு..
நடிகர் ரஜினிகாந்த், வேட்டையன் பட விழாவில் மொத்தம் 52 நிமிடம் பேசியதாக கூறப்படுகிறது. அதில் அவர் சகுனிகள் குறித்து பேசியிருக்கிறார்.
“சகுனிகள் இருக்கிற இந்த சமுதாயத்தில் நல்லவனா இருந்தா பிழைக்க முடியாதுங்க. கொஞ்சம்ன் சாணக்கியத்தனமும், சாமர்த்தியமும் வேணும்” என்று கூறியிருக்கிறார். இதை கேட்ட விஜய்யின் ரசிகர்கள், வழக்கம் போல “நம்ம தலைவரைத்தான் சொல்கிறாராே” என்று யோசிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
குட்டி கதை..
ரஜினி, தனது அனைத்து பட விழாக்களையும் போல இந்த விழாவிலும் ஒரு குட்டி கதையை கூறியிருக்கிறார். சென்ற முறை காக்கா-கழுகு கதையை கூறிய அவர், இந்த முறை கழுதை கதை கூறியிருக்கிறாராம்.
மாஸ் டைலாக்..
ரஜினிகாந்திற்கு அடையாளமே அவரது ஸ்டைல்தான் என்றாலும், ஒரு சில வசனங்கள் அவரது ரசிகர்களின் மனங்களில் ஆழ பதிந்திருக்கும். அப்படிப்பட்ட டைலாக்குகளில் ஒன்று “கெட்டப்பய சார் இந்த காளி..” இந்த டைலாக்கை அவர் நேற்று வேட்டையன் பட விழாவில் பேசினாராம்.
அனிருத் குறித்து பேச்சு..
“அனிருத் எனக்கு குழந்தை மாதிரி..அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்தால் என்னுடையை 10 அடி போட்டோவை மாட்டி வைத்திருப்பார். இவ்வளவு அன்பை நான் எப்படி திரும்ப தர போகிறேன் என்று தெரியவில்லை” என்று பேசியிருக்கிறார். “அனிருத்தை மன்னன் படத்தின் ஷூட்டிங்கின் போது அனிருத்தை முதன் முதலாக பார்த்தேன். அப்போது அவர் சிம்மாசனத்தில் அமர வைத்து, அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டேன். இப்போது இசையின் சிம்மாசனத்தில் அவர் அமர்ந்து கொண்டிருக்கிறார்.
தளபதி படம் குறித்து..
நடிகர் ரஜினிகாந்த், தான் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவம் குறித்தும் பேசியிருக்கிறார். “நீங்கள் தளபதி படத்தை மட்டும்தான் பார்த்தீர்கள். ஒரு காட்சியை படமாக்க எடுக்கப்பட்ட 15-20 டேக்குகள் குறித்து உங்களுக்கு தெரியாது” என்று கூறியிருக்கிறார்.
கடைசியில் பேசியது..
நடிகர் ரஜினிகாந்த், ஏதேனும் ஒரு கருத்தை கூறி தனது உரையை முடிப்பது வழக்கம். அந்த வகையில், “கெட்டவங்க கிட்டதான் நிறைய கத்துப்போம்” என்று கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க | வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ