Maharaja OTT Release: தமிழ் திரையுலகில் கால் பாதித்த போதிலிருந்து தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து பிரபலமானவர், நடிகர் விஜய் சேதுபதி. தற்போது இவரது நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம் மகாராஜா. இது விஜய் சேதுபதியின் 50ஆவது திரைப்படமாகும். தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஜா திரைப்படம்:
குரங்கு பொம்மை படத்தை இயக்கி கவனம் ஈர்த்த நித்திலன் சாமிநாதன் மகாராஜா (Maharaja) திரைப் படத்தை இயக்கியுள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் மகாராஜா படத்தில், விஜய் சேதுபதி (Vijay Sethupathi) கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் அவருடன் இந்த படத்தில் மமதா மோகன்தாஸ், நட்டி என்கிற நட்ராஜ், அபிராமி, திவ்ய பாரதி, பாரதிராஜா, முனிஷ்காந்த், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு வில்லனாக அறிமுகமான அனுராக் காஷ்யப் இந்த படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார். 


மேலும் படிக்க | 10 நிமிட காட்சிக்கு 100 கோடி சம்பளம்! அநியாயம் செய்யும் தமிழ் நடிகர்..யார் தெரியுமா?


வெற்றி படம்:
இந்த படம் திரையரங்கில் வெளியான முதல் நாளில் இருந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்றது. அதேபோல் படத்தை பார்த்த திரை பிரபலங்கள் பலர் படத்தை ஆஹா.. ஓஹோ என்று பாராட்டினர். குறிப்பா படத்தின் கிளைமேக்ஸ் காட்சி, விஜய் சேதுபதி மற்றும் அவரது மகளாக நடித்தவரின் நடிப்பு அதேபோல் வில்லனாக நடித்த அனுராக் காஷ்யப்பின் நடித்து படத்திற்கு பாசிட்டிவாக அமைந்தது என்று தான் கூற வேண்டும்.


வசூல் வேட்டை:
முதல் நாள் முதலே படத்திற்கு கிடைத்த வரவேற்பால் இந்தியா அளவில் முதல் நாளிலேயே இந்த படம் 5 கோடி ரூபாய் வரை வசூல் வேட்டை நடத்தியிருந்தது. ஒட்டுமொத்தமாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து உள்ளது. இதன் மூலம் 100 கோடி வசூல் படங்களில் இந்த படம் அசால்டாக இடம்பெற்றது.


ஓடிடி ரிலீஸ் எப்போது?
இந்நிலையில் மகாராஜா ஓடிடி ரிலீஸுக்கு காத்திருந்த மக்களுக்கு தற்போது முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி மகாராஜா ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும், இந்த படம் ஜூலை 12 ஆம் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது. இது தொடர்பான அதிகாரப் பூர்வ தகவல் சற்று முன் வெளியாகியுள்ளது.




மேலும் படிக்க | வரலக்ஷ்மி ரிசப்ஷனுக்கு மட்டும் இத்தனை கோடியா? அம்பானி போல் செலவு செய்த சரத்குமார் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ