சுதந்திர தினத்தில் ஜீ தமிழில் என்னவெல்லாம் ஸ்பெஷல்.. இதோ முழு லிஸ்ட்
வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக ஜீ தமிழில் என்னென்ன ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்தும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.
தொலைக்காட்சி நிர்வாகமும் பண்டிகை தினங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளையும் புத்தம் புதிய திரைப்படங்களையும் ஒளிபரப்பி மக்களை மகிழ்விப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக ஜீ தமிழில் என்னென்ன ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி காலை 9.30 மணி முதல் 11 மணி வரை சுகி சிவம் தலைமையில் சுதந்திரத்துக்கு பெரிய தடையாக இருப்பது முதியோர் குணமா? இளையோர் மனமா? என்ற தலைப்பில் கலகலப்பான சுதந்திர தின சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது.
மேலும் படிக்க | இந்தியில் கெத்து காட்டும் கீர்த்தி சுரேஷ்.. பல கோடிகளில் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
அதனை தொடர்ந்து மதியம் 11 மணி முதல் 2 மணி வரை " தமிழா தமிழா விருதுகள் 2024 " என்ற விருது விழா நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த விருது விழாவில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் டி. வேல்முருகன், தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நக்கீரன் கோபால், நியூஸ் 18 தலைமை செய்தி ஆசிரியர் கார்த்திகை செல்வன், பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் சுந்தராஜன், முன்னாள் நிதி அமைச்சர் ஜெயக்குமார், கவிஞர் மானுஷ்யபுத்திரன், இயக்குனர் கோபி நாயர், நடிகை ரோஹினி, இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா, ராஜிவ் காந்தி அரசு மருத்துவனையின் முதல்வர் டாக்டர் தீரனிராஜன் என பலர் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்துள்ளனர்.
சமூக நலனிற்காக பணியாற்றியவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஜீ தமிழ் தமிழா தமிழா விருதுகளை வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.
அடுத்ததாக மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால், ப்ரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, யோகி பாபு, டெல்லி கணேஷ் என பலரது நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற ரத்னம் திரைப்படம் உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக பிரீமியர் காட்சியாக ஜீ தமிழில் ஒளிப்பரப்பாக உள்ளது.
ஒரு நில பிரச்னையை மையமாக வைத்து தமிழக, ஆந்திரா பார்டரில் நடக்கும் பரபரப்பான கதைக்களத்துடன் இந்த ரத்னம் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. இப்படி சிறப்பு பட்டிமன்றம் முதல் சூப்பர் ஹிட் திரைப்படமான ரத்னம் படம் வரை அனைத்தையும் மிஸ் பண்ணாமல் பார்த்து ஜீ தமிழுடன் உங்கள் சுதந்திர தின நாளை கொண்டாட தயாராகுங்கள்.
மேலும் படிக்க | மொழி திணிப்பை பற்றி தமிழக மக்கள்தான் புரிந்து கொள்வர்-கீர்த்தி சுரெஷ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ