இந்தியில் கெத்து காட்டும் கீர்த்தி சுரேஷ்.. பல கோடிகளில் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

Actress Keerthy Suresh Salary: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டிலும் கலக்கி வருக்கிறார். அதன்படி தற்போது இந்தியில் நடித்துள்ள திரைப்படம் பேபி ஜான்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 13, 2024, 12:29 PM IST
  • தெறி படத்தில் சமந்தா நடித்திருந்த கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ்.
  • தெறி படத்தின் இந்தி ரீ-மேக்கில் நடித்துள்ளார்.
  • ஹீரோவாக பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடித்திருக்கிறார்.
இந்தியில் கெத்து காட்டும் கீர்த்தி சுரேஷ்.. பல கோடிகளில் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா title=

Actress Keerthy Suresh Salary: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டிலும் கலக்கி வருக்கிறார். அதன்படி தற்போது இந்தியில் நடித்துள்ள திரைப்படம் பேபி ஜான். இந்த படத்திற்கு இவர் வாங்கிய உள்ள சம்பளம் எவ்வளவு என்கிற தகவலை இந்த கட்டுரையில் காணலாம்.

கீர்த்தி சுரேஷ்: 
கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ், முதல் முறையாக தமிழ் சினிமாவில் தான் அறிமுகமானார். தமிழில், ’இது என்ன மாயம்’ என்கிற படம் தான் நடிகை கீர்த்தி சுரேஷின் முதல் படமாகும். இன்று தமிழ்-தெலுங்கு மொழி திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர், கீர்த்தி சுரேஷ். இவரது தாய் மேனகா தமிழில் நடிகர் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லால், மம்மூட்டி ஆகியோருக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். தற்போது கீர்த்தி சுரேஷிற்கு எவ்வளவு மவுசு உள்ளதோ, அதே போல 80 மற்றும் 90களில் மேனகாவிற்கும் மவுசு இருந்தது. 

தேசிய விருது:
நடிகை கீர்த்தி சுரேஷ் சில ஆண்டுகளுக்கு முன்னர் ‘மகாநதி’ (நடிகையர் திலகம்) என்ற படத்தில் நடித்திருந்தார். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில் சாவித்ரியையே கண் முன் நிறுத்தியதாக கீர்த்திக்கு பல வழிகளிலும் பாராட்டு குவிந்தது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகியிருந்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதுவே இவருக்கு தேசிய விருதையும் வாங்கி கொடுத்தது. இது, கீர்த்தியின் திரை வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | மொழி திணிப்பை பற்றி தமிழக மக்கள்தான் புரிந்து கொள்வர்-கீர்த்தி சுரெஷ்

பாலிவுட்டில் கால் பதித்த கீர்த்தி:
தென் திரையுலகில் பெரிய நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது பாலிவுட்டில் கால் பதித்துள்ளார். அதன்படி இவர் அட்லீ குமார் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த படமான தெறி படத்தின் இந்தி ரீ-மேக்கில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பேபி ஜான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஹீரோவாக பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடித்திருக்கிறார். இப்படத்தை கலீஸ் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறதாம். கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என்கின்றனர். மேலும் தெறி படத்தில் சமந்தா நடித்திருந்த கதாபாத்திரத்தில் தான் இந்தியில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளாராம். 

கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம்:
இந்நிலையில் தற்போது சமந்தா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் ரூ. 4 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து இவர் தனது சம்பளத்தை உயர்த்தலாம் என்று கூறப்படுகிறது.

‘ரகு தாத்தா’ கீர்த்தி சுரேஷ்:
இதனிடையே நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 15 ஆம் தேதி கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘ரகு தாத்தா’ படம் திரையரங்கில் வெளியாகிறது. சுமன் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தில் கீர்த்தி சுரேஷுடன் எம் எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ஆனந்த் ராஜ், ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர்  முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ரகு தாத்தா இந்தி திணிப்புக்கு எதிரான படம் என்பதால் மக்களுக்கு படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது.

மேலும் படிக்க | சிறுத்தை சிவாவை நம்பலாமா? வேணாமா? கங்குவா டிரைலருக்கு ரசிகர்கள் சொன்ன விமர்சனம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News