இந்த மாத ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன? இதோ லிஸ்ட்
OTT Releases : எஞ்சியிருக்கும் இந்த மாதம் ஓடிடி ரிலீஸில் எந்த படங்கள் வெளியாக உள்ளது என்பதை பார்ப்போம். மேலும் எந்த படத்தை, எந்த தளத்தில் பார்ப்பது என்பதையும் இந்த கட்டுரையில் காண்போம்.
OTT Releases Movie List This Week : இந்தியாவில், கொரோனா தொற்றுக்கு பிறகு ஓடிடி தளங்களின் வருகை மக்களிடையே பெருகியுள்ளது. இதனால் பல்வேறு புது படங்கள் மற்றும் சூப்பர் ஹிட் தொடர்கள் இந்த ஓடிடி தளத்தில் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மீதமுள்ள இந்த மாதத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் படங்களும் தொடர்களும் வெளியாக இருக்கின்றன. நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் போன்ற தளங்களில் வெளியாகவிருக்கும் புது படங்கள் மற்றும் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த கட்டுரையில் காண்போம்.
அரண்மனை 4: இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை, அரண்மனை 2, அரண்மனை 3 ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து உருவாக்கிய அரண்மனை 4 (Aranmanai 4) படம். இந்த படத்தில் சுந்தர்.சி நாயகனாக நடிக்க, இவருடன் இணைந்து தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா, விடிவி கணேஷ் என தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த 3ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. மேலும் இந்த படம் இதுவரை ரூ.100 கோடி கடந்து வசூலில் சாதனை படைத்துள்ளது. தற்போது அரண்மனை 4 திரைப்படம் வருகிற ஜூன் 21ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் (Disney+ Hotstar) வெளியாகயுள்ளது.
மேலும் படிக்க | நடிகர் விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு
நடிகர்: டோவினோ தாமஸ் நாயகனாக நடித்திருந்த படம் ‘நடிகர்’. லால் ஜூனியர் இந்த படத்தை இயக்கியுள்ளார். சௌபின் ஷாஹிர், இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு யாக்சன் கேரி மற்றும் நேஹா நாயர் ஆகியோர் இசையமைத்துள்ளனர். கடந்த மே 3 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியானது. தற்போது நடிகர் திரைப்படம் வருகிற ஜூன் 27ஆம் தேதி நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியாகயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிர் தமிழுக்கு: அமீர் நடிப்பில் ஆதம்பாவா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ’உயிர் தமிழுக்கு’. தமிழக அரசியல் களத்தை மையமாகக் கொண்டது இந்த படம். இந்த படத்தில் அவருடன் சேர்ந்து மறைந்த நடிகர் மாரிமுத்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் சாந்தினி ஸ்ரீதரன், இமான் அண்ணாச்சி, ராஜ்கபூர், ஆனந்தராஜ், சரவண சக்தி, மகாநதி சங்கர், சுப்பிரமணியம் சிவா, கஞ்சா கருப்பு என பலரும் நடித்துள்ளனர். வித்யாசாகர் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் (Disney+ Hotstar) வெளியாகயுள்ளது.
நாகேந்திரன்ஸ் ஹனிமூன்ஸ்: சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உருவாகியுள்ள இந்த சீரிஸில், சுராஜ் வெஞ்சரமுடு முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், கிரேஸ் ஆண்டனி, ஷேவ்தா மேனன், கனி குஸ்ருதி, ஆல்பி பஞ்சிகரன், நிரஞ்சனா அனூப், பிரசாந்த் அலெக்சாண்டர், அம்மு அபிராமி, ஜனார்த்தனன், கலாபவன் ஷாஜோன் & ரமேஷ் பிஷாரடி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். MGC(P) Ltd உடன் இணைந்து நிதின் ரஞ்சி பணிக்கர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிரஞ்சன் ரஞ்சி பணிக்கர் இந்த சீரிஸை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். நிகில் S பிரவீனின் அசத்தலான காட்சியமைப்புகள் மற்றும் ரஞ்சின் ராஜின் வசீகரிக்கும் இசையில், இந்த சீரிஸ் நகைச்சுவை, கலந்த அசத்தலான அனுபவத்தைத் தரும் சீரிஸாக உருவாகியுள்ளது, இந்த பரபரப்பான சீரிஸ் விரைவில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகயுள்ளது.
மேலும் படிக்க | தேசிய கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி கீர்த்தி சாந்தனு துவக்கி வைத்தார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ