Aranmanai 4 OTT : அரண்மனை 4 படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்போது பார்ப்பது?

Aranmanai 4 OTT Release Date : சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த வெற்றிநடை போட்ட படம், அரண்மனை 4. இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 

Aranmanai 4 OTT Release Date : தமிழ் திரையுலகில் பேய் படங்களை இயக்கி பெரும் பிரபலமானவர், இயக்குநர் சுந்தர்.சி. அதுவும், இந்த பேய் படங்களை இயக்க ஆரம்பித்தது 2014ஆம் ஆண்டில்தான். வினய், ஹன்சிகா மோத்வானி, ஆண்ட்ரியா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றதை தொடர்ந்து, அடுத்து அதே பெயரில் வெவ்வேறு கதைகளை கொண்ட படங்களை இயக்க தொடங்கினார். அந்த வகையில், அவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம்தான், அரண்மனை 4. இந்த படத்தில் தமன்னா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதன் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 

1 /8

சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த கடந்த மே மாதம் 3ஆம் தேதி வெளியான படம், அரண்மனை. இந்த படத்தில் சுந்தர்.சி நடித்தும் இருந்தார். 

2 /8

10 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான அரண்மனை படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்த நான்காவது பாகம், இந்த படம். 

3 /8

‘அரண்மனை’ என்ற தலைப்பில் இதற்கு முன்னர் 3 படங்கள் வெளியாகிவிட்டன. இதில், முதல் இரண்டு படங்கள் பெரும் வெற்றி பெற்றன. ஆனால், மூன்றாவது படம் தோல்வியை சந்தித்தது. 

4 /8

அரண்மனை படத்தின் முதல் இரண்டு பாகத்திலும் ஹன்சிகா மோத்வானி பேயாக நடித்திருந்தார். அடுத்த ஒரு பாகத்தில் ஆண்ட்ரியா பேயாக வந்தார். 

5 /8

ஒரு மாதத்திற்கு முன்னர் வெளியான அரண்மனை 4 திரைப்படத்தில் தமன்னா பேயாக நடித்திருந்தார். இவருக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பினை கொடுத்தனர். படத்தில், ‘பாக்’ எனும் புதிய அமானுஷ்ய கான்செப்ட் நன்றாக இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர். 

6 /8

அரண்மனை படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 

7 /8

இந்தியாவின் பிரபல ஓடிடி தளமான டிஸ்னி ஹாட்ஸ்டார் இப்படத்தை ஓடிடியில் வெளியிட இருக்கிறது. இப்படத்தை, இந்த தளத்தில் இம்மாத இறுதிக்குள் பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

8 /8

அரண்மனை படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா, சுந்தர்.சி, சந்தோஷ் பிரதாப், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.