Varun Starrer Gautham Vasudev Menon Directed Joshua Imai Pol Kaka Latest Twitter Review : தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர், கெளதம் வாசுதேவ் மேனன். இவர், வளரும் ஹீரோ வருணை வைத்து எடுத்துள்ள படம் ஜோஷ்வா: இமைபோல் காக்க. இந்த படம், பல நாள் போராட்டங்களுக்கு பிறகு தற்போது வெளியாகியுள்ளது. வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக, ஐசரி கணேஷ் தயாரித்திருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோஷ்வா படத்தின் படப்பிடிப்பு, 2019ஆம் ஆண்டே தொடங்கப்பட்டது. ஆனால், இடையில் கொராேனா காலம் வந்துவிட்டதால், படப்பிடிப்பும் ப்ரொடக்ஷன் பணிகளும் அப்படியே நின்றுவிட்டன. தற்போதுதான் அந்த பிரச்சனைகளையெல்லாம் தீர்த்து, படம் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. கெளதம் மேனன் படம் என்பதாலும், பல நாட்கள் வெளியிடப்படாமல் இருந்த படம் என்பதாலும், இதன் மீது ரசிகர்களுக்கு அதீத எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில், இப்படத்திற்கு ரசிகர்கள் எது போன்ற விமர்சனங்களை கொடுத்துள்ளனர் என்பதை பார்ப்போம். 


ரசிகர்களின் விமர்சனம்:


தற்போதெல்லாம் எந்த படம் வந்தாலும் அதை பிற ஊடங்கள் விமர்சனமாக போடுவதற்கு முன்னர், படம் பார்த்த பலர் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அதை விமர்சனமாக பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், ஜோஷ்வா:இமை போல் காக்க படத்தின் விமர்சனத்தையும் சிலர் வெளியிட்டுள்ளனர். 


முதல் பாதியை விட இரண்டாம் பாதி நல்லா இருக்கு..


ஜோஷ்வா படத்தை பார்த்த ஒரு ரசிகர், படம் வழக்கமான கதையை கொண்டுள்ளதாகவும் அற்புதமான காட்சியகிளை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.



மேலும், முதல் பாதியை விட இரண்டாம் பாதி நன்றாக இருப்பதாகவும், படம் மையக்கருத்துக்குள் நேரடியாக பயணிப்பதாகவும் அந்த ரசிகர் தெரிவித்திருக்கிறார். மேலும், திரைக்கதை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்திருக்கலாம் என்றும் மொத்தத்தில் படம் டீசண்டாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார். 


மேலும் படிக்க | ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ உண்மை கதை என்ன? குணா குகையில் அப்படி என்னதான் நடந்தது?


“ஆக்‌ஷன் பிரியர்களுக்கு பிடிக்கும்!”


ஜோஷ்வா படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், இப்படம் ஆக்‌ஷன் பிரியர்களுக்கு பிடிக்கும் என குறிப்பிட்டிருக்கிறார். முதல் பாதி நன்றாக இருந்ததாகவு, இரண்டாம் பாதி டீசண்டாக இருந்ததாகவும் அந்த ரசிகர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார். மேலும், திரைக்கதை மிகவும் சாதாரணமாக இருப்பதாகவும், ஆனால் அதை செயல்படுத்திய விதம் நன்றாக இருப்பதாகவும் அந்த ரசிகர் தெரிவித்திருக்கிறார். 



மேலும், ஹீரோவாக வருண் நன்றாக நடித்திருப்பதாகவும் பின்னணி இசை இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம் என்றும் அந்த ரசிகர் தெரிவித்திருக்கிறார். 


காதல்-ஆக்‌ஷன் திரைப்படம்:


ஜோஷ்வா திரைப்படம், நல்ல காதல்-ஆக்‌ஷன் திரைப்படமாக இருப்பதாக ஒரு ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். நடிகர் வருண் மிகவும் நன்றாக நடித்திருப்பதாகவும், கதாநாயகி ராஹாய் அவரது கதாப்பாத்திரத்தில் நன்கு நடித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். 



மேலும், கௌதம் மேனன் விருவிருப்பாக திரைகதையை கொண்டு செல்ல முயற்சி செய்திருப்பதாகவும் எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு நன்றாக இருப்பதாகவும் அந்த ரசிகர் தெரிவித்திருக்கிறார். கௌதம் மேனனை பிடித்தவர்களுக்கு இப்படம் பிடிக்கும் என அந்த ரசிகர் தெரிவித்திருக்கிறார். 


ஜி.வி.எம் ரசிகர்களுக்கு பிடிக்கும்


ஜோஷ்வா படத்தை பார்த்த ஒரு ரசிகர், கௌதம் மேனனின் பட பிரியர்களுக்கு இப்படம் பிடிக்கும் என குறிப்பிட்டிருக்கிறார்.



மேலும், வருணின் நடிப்பு நன்றாக இருப்பதாகவும், ஹீரோயின் மற்றும் இசை நன்றாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.


மேலும் படிக்க | Drishyam: ஹாலிவுட்டில் ரீ-மேக் ஆகும் முதல் இந்திய படம் ‘த்ரிஷ்யம்’!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ