சண்முகம் பரணியை வெளியே போக சொன்னது ஏன்? அதிர்ச்சியில் ரசிகர்கள்... அண்ணா சீரியல்
Anna Serial Update: பரணியை வெளியே போக சொல்லும் சண்முகம்.. அதிர்ச்சியான குடும்பம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி சௌந்தரபாண்டியை சமாதானம் செய்தார். பரணியின் தோழிகள் ஊருக்கு கிளம்ப சண்முகம் பரணி அவர்களை வழி அனுப்ப வந்த இடத்தில் ஒரு குழந்தைக்கு வலிப்பு வந்து உயிருக்கு போராட பரணி அதை பார்த்து ஓடிப் போய் உதவி செய்து குழந்தையின் உயிரை காப்பாற்றுகிறாள்.
பாக்கியமும் சௌந்தரபாண்டியும் சீர் கொடுக்க ஷண்முகம் பரணி அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி கொண்டு புது துணியை மாற்றி கொண்டு வெளியே வருகின்றனர். இந்த நிலையில் அடுத்து அண்ணா சீரியலில், முத்துப்பாண்டி ஷண்முகத்திற்கு மோதிரம் போடும் சாக்கில் அவன் விரலை உடைக்க முயற்சிக்க ஷண்முகம் முத்துபாண்டியின் காலை மிதித்து அவனிடம் இருந்து தப்பிக்கிறான்.
மேலும் படிக்க | ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்காக எஸ்.ஜே.சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
அதன் பிறகு பரணியின் தோழிகள் நீ சேவை செய்வதெல்லாம் சரிதான் ஆனால் பிராக்டிஸ் இல்லாம பண்ணி உன் பேரை கெடுத்துக்காத என்று சொல்ல சண்முகம் அவளுக்கு தாலி கட்டி கணவ கலைச்சிட்டேன் என்று வருத்தப்படுகிறான்.
அதன்பிறகு வீட்டுக்கு வந்த சண்முகம் பரணி என் தாக எடுத்து வைத்து நீ உன் வீட்டுக்கு கிளம்பு என்று சொல்ல எல்லோரும் என்னாச்சு என்று பதற பரணி என் வீட்டுக்கு எதுக்கு போகணும் என்று கேட்க நீ சுதந்திரமா பறக்க வேண்டிய பறவை இது உனக்கு ஜெயில் தான் என்று சொல்கிறான்.
ஆனால் பரணி சும்மா நடிக்காத 100 நாள் யார் என்ன சொன்னாலும் நான் வீட்டை விட்டு போக மாட்டேன். 100 நாளைக்கு பிறகு ஒரு நாள் கூட இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என்று பேக் எடுத்துக் கொண்டு ரூமுக்கு சென்று விடுகிறாள்.
மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: ரவுடியுடன் வசமாக சிக்கும் மகா.. நடக்க போவது என்ன?
அத்துடன் அம்மாவாக நினைத்து மரத்தின் அருகே வந்த சண்முகம் நான் நினைக்கிறது எனக்கு புரியுதா அம்மா என்று வருத்தப்பட்டு பேச வைகுண்டம் என்னாச்சு என்று கேட்க சண்முகம் நடந்த விஷயத்தை சொல்லி, பரணி சேவை செய்யட்டும் என்று சொல்கிறார்.
ஆனால் சேவையை பரணி நம்ம வீட்ல இருந்தே செய்யட்டும் என சொல்கிறார். இருந்தாலும் சண்முகம் அவர் இந்த வீட்டில் இருக்க வேண்டிய கிடையாது, நம்ம குல சாமி என பரணியை புகழ்ந்து பேசுகிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ