Indian Movie Kamal Haasan Getup Details: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படத்தில் மொத்தமாக நடிகர் கமல்ஹாசன் போட்டுள்ள கெட்டப் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

26 வருடங்களுக்கு பிறகு இந்தியன் 2 திரைப்படம்:
1996ஆம் ஆண்டு வெளியாகி, உலகம் முழுவதும் வெற்றி பெற்ற படம், இந்தியன். நம் நாட்டில் இருக்கும் லஞ்சம் கொடுக்கும் கலாச்சாரத்தையும், அதை சுற்றியிருக்கும் அரசியலையும் எதிர்க்கும் கதாப்பாத்திரத்தின் வழியே இப்படம் எடுக்கபட்டிருந்தது. இதில், கமல்ஹாசன் தந்தை சேனாபதியாகவும் மகன் சந்துரு கதாப்பாத்திரமாகவும் நடித்திருந்தார். படத்தின் இறுதியில், தன் மகனை தானே கொள்வது போன்ற காட்சியும் இடம் பெற்றிருக்கும். முதல் பாகத்தில் சுகன்யா, மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். 


இந்தியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, அப்படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கும் முயற்சியிலும் இறங்கினார் ஷங்கர். ஆனால், படத்தின் கதை தயாராக இருந்ததே தவிர படத்தின் வேலைகளை தொடங்குவதில் கடும் தாமதம் ஏற்பட்டது. படப்பிடிப்பு பணிகள் தொடங்கிய போதும், நிதி சிக்கல், படப்பிடிப்பில் விபத்து என 5 வருடங்களுக்கும் மேல் இழுத்தடிக்கப்பட்டு உருவான படம் இந்தியன் 2. இந்த படத்தில், அதே ‘சேனாபதி’ கமல் மீண்டும் வருவது பாேலவும், “இரண்டாவது சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்” என்று கூறுவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றிருக்கின்றன. 


மேலும் படிக்க | Kalki 2898 AD Movie Review : கல்கி 2898 ஏடி சென்சார் குழுவின் விமர்சனம்! அப்ளாஸ் அள்ளுமா? மன்னை கவ்வுமா?


அதன்படி தற்போது இரண்டாம் பாகத்தை லைகா நிறுவனமும் ரெட் ஜெயிண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இதில் உலக நாயகம் கமல்ஹாசனுடன் எஸ்ஜே சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், மறைந்த விவேக், மறைந்த மனோபாலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.


இந்தியன் 2 படத்தின் டிரைலர்:
இதனிடையே சமீபத்தில் இந்தியன் 2 படத்தின் டிரைலர் வெளியானது. இதில், விதவிதமாக கெட்-அப்களில் தோன்றும் கமல்ஹாசன், பறந்து பறந்து சண்டையிடுகிறார். இதை டிரைலரில் பார்த்த ரசிகர்கள் மெய் சிலிர்த்து போயிருக்கின்றனர்.


ரிலீஸ் எப்போது?
இந்தியன் 2 திரைப்படம், அடுத்த மாதம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியிருக்கிறது. 


12 கெட்டப்பில் கமல்ஹாசன்:
இந்நிலையில் இந்த படம் தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தில் கமல்ஹாசன் மொத்தம் 12 கெட்டப்களில் நடித்துள்ளாராம். அதில் இந்தியன் 2 படத்தில் 7 கெட்டப்களிலும், மூன்றாம் பாகத்தில் 5 கெட்டப்பிலும் தோற்றம் அளிக்கவுள்ளார். இதன் மூலம் தசாவதாரம் படத்தில் பத்து கெட்டப்களில் நடித்த சாதனையை முறியடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



 


மேலும் படிக்க | ‘கோட்’ படத்தின் பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா? வாயை பிளக்க வைக்கும் தொகை..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ