‘மாமன்னன்’ படத்திற்கு ஒரு மாதம் கழித்து விமர்சனம் கொடுத்த லோகேஷ் கனகராஜ்…!
லியோ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாமன்னன் படத்தை பாராட்டி விமர்சனம் கொடுத்துள்ளார்.
பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்திருந்த ‘மாமன்னன்’ படத்திற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் கொடுத்துள்ளார். இது வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ்:
விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். ‘மாநகரம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தொடர்ந்து கத்தி, மாஸ்டர், விக்ரம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். விஜய்யை வைத்து ஏற்கனவே ஒரு படத்தை இயக்கிய அவர், தற்போது அவருடன் மீண்டும் லியோ படம் மூலம் கைக்கோர்த்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து மிஷ்கின், கெளதம் மேனன், த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடத்துள்ளனர். இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார்.
மாமன்னன் திரைப்படம்:
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி திரைக்கு வந்த படம், ‘மாமன்னன்’. அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலில் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் நடிகர் வடிவேலு அவருக்கு தந்தையாகவும் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருந்தார். கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க, மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் இதில் வில்லனாக வந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று நல்ல வசூலை குவித்தது. மாமன்னன் படம் சில தினங்களுக்கு முன்னர் ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது.
மேலும் படிக்க | பிக்பாஸ் கவினுக்கு ஆகஸ்ட் மாதம் திருமணமா? பொண்ணு யார் தெரியுமா?
லோகி விமர்சனம்..
மாமன்னன் திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகு அப்படத்தினை பலர் கண்டுகளித்தனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பலவகையான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ்ஜும் சமீபத்தில்தான் இந்த படத்தை பார்த்துள்ளார். அவர், மாமன்னன் படத்திற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனமும் கொடுத்துள்ளார். அவர் இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், “மாமன்னன் படம் அருமையாக இருந்தது” என குறிப்பிட்டிருக்கிறார்.
“நான் மிகவும் லேட்டாக விமர்சனம் கூறிகிறேன் என தெரியும். மாமன்னன் படம் பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. படத்தின் எல்லா துறைகளிலும் நேர்த்தியான வேலைபாடுகள் தெரிகிறது. அதிலிருந்து இன்னும் மீள முடியவில்லை” என்று கூறியுள்ளார். மேலும் படத்தில் நடித்து உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபகத் ஃபாசில் ஆகியோருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜ்ஜிற்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையையும் அவர் பாராட்டியுள்ளார். மொத்த மாமன்னன் படக்குழுவிற்கும் அவர் இந்த ட்வீட்டில் ஃபயர் விட்டுள்ளார்.
லியோ பட பணிகள் தீவிரம்…
விஜய்யின் லியாே திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. கடந்த மாதம் நடிகர் விஜய் தன் பங்கு காட்சிகளை நடித்து கொடுக்க, விரைவில் படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து படத்தின் பிற பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இப்படம் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வைரலான ஃபகத் ஃபாசில்..
மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில், தமிழில் ‘வேலைக்காரன்’ படம் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமானார். மலையாளத்தில் ஏற்கனவே திறமையான நடிகர் என பெயர் பெற்ற இவருக்கு, இந்த படத்திற்கு பிறகு தமிழிலும் ரசிகர்கள் குவிந்தனர். ஃபகத் ஃபாசில் இந்த படத்திற்கு பிறகு சூப்பர் டீலக்ஸ், விக்ரம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடத்திருந்தார். இதைத்தொடர்ந்து மாமன்னன் படத்திலும் அவர் வில்லனாக நடித்தார். ‘ரத்ன வேல்’ எனும் கதாப்பாத்திரத்தில் கொடூர வில்லனாக இவர் இதில் நடித்திருந்தார். மாமன்னன் படம் ஓடிடியில் வெளியானதை தொடர்ந்து அவரை வைத்து வீடியோ எடிட் செய்து ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஒதில் ஒரு தரப்பினர் ஃபகத் ஃபாசிலின் நடிப்பை பாராட்ட, இன்னொரு தரப்பினர் அவரை சாதிய ரீதியிலும் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். காரணமே தெரியாமலும் ஃபகத் ஃபாசிலை சிலர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ