சமந்தாவிற்கு ஜோடியாக நடிக்கும் சந்தானம்..? ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ நாயகன் சொன்ன சூப்பர் தகவல்..!

Samantha and Santhanam: நடிகர் சந்தானம் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது நடிகை சமந்தா குறித்த விஷயங்களை அவர் பகிர்ந்து காெண்டார். 

Written by - Yuvashree | Last Updated : Aug 2, 2023, 06:22 AM IST
  • டிடி ரிட்டர்ன்ஸ் நாயகன் சந்தானம் சமந்தா குறித்து பேச்சு.
  • அடுத்து சமந்தாவுடன் நடிக்க உள்ளதாக தகவல்.
  • இவர்கள் கடைசியாக நான் ஈ படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர்.
சமந்தாவிற்கு ஜோடியாக நடிக்கும் சந்தானம்..? ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ நாயகன் சொன்ன சூப்பர் தகவல்..! title=

சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ள படம், ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. இந்த படத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் குறித்த ஒரு நிகழ்ச்சியில் அவரிடம் நடிகை சமந்தாவுடன் நடிக்க உள்ள வாய்ப்புகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்துள்ளார். 

நகைச்சுவை நடிகர் டூ ஹீரோ:

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பா காமெடி நிகழ்ச்சி, ‘லொள்ளு சபா’ இதன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது ஹீரோவாக உயர்ந்துள்ள நடிகர் சந்தானம். கோலிவுட்டின் முன்னணி நடிகர்களின் படங்ளில் கதாநாயகனுக்கு நண்பனாகவும் சகோதரனாகவும் நடித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து ‘இனி காமெடியனாக நடிக்க போவதில்லை’ என்று சபதம் எடுத்த இவர் தற்போது காமெடி ஹீரோவாக நடித்து வருகிறார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், தில்லுக்கு துட்டு, டிக்கிலோனா போன்ற வித்தியாசமான கதையம்சம் நிரம்பிய படங்களில் காமெடி நாயகனாக வந்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். இவர் நடித்த டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம், கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியானது. 

மேலும் படிக்க | DD Returns: சக்கைப்போடு போடும் வசூல்... சந்தானம் வாங்கிய சம்பளம் இவ்வளவா...?

சமந்தாவுடன் நடித்தது பற்றி..

பிரபல நடிகை சமந்தா தற்போது சினிமாவில் நடிப்பதில் இருந்து ப்ரேக் எடுத்துக்கொண்டு, தனது தோழிகளுடன் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் நாயகியாக நடித்து 2012ஆம் ஆண்டு வெளியான படம், நான் ஈ (தெலுங்கு-ஈகா). இந்த படத்தில் நடிகர் சந்தானம், சமந்தாவை ஒரு தலையாக காதலிக்கும் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இதையடுத்து இவர்கள் இருவரும் ‘நீ தானே என் பாென்வசந்தம்’ படத்தில் நடத்திருந்தனர். அதன் பிறகு இருவருக்கும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இது குறித்த சமீபத்திய நேர்காணலில் பகிர்ந்து கொண்ட சந்தானம், சமந்தாவுடன் விரைவில் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டார். 

ஜோடியாக நடிக்கிறாரா..? 

சந்தானம், கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். ரசிகர்களிடம் இனி காமெடியன் கதாப்பாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்றும் கூறிவிட்டார். அதனால் இவர் அடுத்து சமந்தாவுடன் ஒரு படத்தில் நடிக்கப்போவதாக இருந்தால் அதில் கண்டிப்பாக அவருக்கு ஜோடியாக நடிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இல்லை என்றால் சமந்தா நடிக்கும் படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தில் வருவார் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் சமந்தா தனது ப்ரேக்கை முடித்துவிட்டு வந்தால்தான் இது குறித்த முழு விவரம் தெரியும். 

‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் மொத்த வசூல்:

பேய்-த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தில் சந்தானம் மற்றும் நான்கடவுள் ராஜேந்திரன் ஆகியோரைத் தவிர பெரிய நடிகர்கள் யாரும் நடிக்கவில்லை. துணை நடிகர்களாக நடித்துள்ளவர்கள் சந்தானத்துடன் அடிக்கடி படங்களில் தோன்றுபவர்ளாகத்தான் இருக்கிறார்கள். இதனால், இப்படம் மொத்தமாகவே 10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் இப்படம் 400 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. வெளியான முதல்நாளே இப்படம் 2.5 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் இப்படம் மூன்றாம் நாளாக திரையரங்கில் வெற்றிநடை போட்டு வருகிறது. தற்போது இப்படத்தின் கலெக்ஷன் உலகளவில் 7 கோடியை தாண்டியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசிக்கொள்கின்றனர். 

நயன்தாராவை சந்தித்த சந்தானம்..

நடிகை நயன்தாராவுடன் சேரந்து சந்தானம் வல்லவன், குசேலன், பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, வாலு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நயன்தாராவும் சந்தானமும் திரைக்கு பின்னால் நல்ல நட்பு பாராட்டக்கூடியவர்கள். கடந்த ஆண்டின் இறுதியில் இரட்டை குழந்தைகளுக்கு தாயான நயன்தாரவையும் அவரது கணவன் விக்னேஷ் சிவனையும் சந்தானம் நேரில் சென்று சந்தித்துள்ளார். இது குறித்த அனுபவங்களை ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்த அவர், நயன்தாராவின் குழந்தைகளுடன் விளையாடியதாகவும் அந்த குழந்தைகளுக்கு தாய்மாமன் சீர் நான்தான் செய்வேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். 

மேலும் படிக்க | பிக்பாஸ் கவினுக்கு ஆகஸ்ட் மாதம் திருமணமா? பொண்ணு யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News