லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம், லியோ. கடந்த 19ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பினை கொடுத்து வருகின்றனர். இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக மலையாள நடிகை மடோனா சபாஸ்டியன் நடித்திருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மடோனா சபாஸ்டியன்:


மடோனா சபாஸ்டியன், மலையாளத்தில் பெரிய நடிகையாக வலம் வருகிறார். மலையாளத்தில் வெளியாகி மெகா ஹிட் அடித்த ‘பிரேமம்’ படத்தில் செலின் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானார். இதையடுத்து தமிழில் நடிகர் விஜய் சேதுபதியுடன் ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து பா.பாண்டி, வானம் கொட்டட்டும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். வெகு சில கோலிவுட் படங்களிலேயே நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த மலையாள நாயகிகளின் பட்டியிலில் இவரும் முக்கிய இடத்தை பிடித்துள்ளார். இவர் லியோ படத்தில் நடிப்பதை சர்ப்ரைஸாக வைத்திருந்தனர். 


விஜய்க்கு தங்கையாக மடோனா..


நடிகர் விஜய்யின் பல படங்களில் தங்கை செண்டிமெண்ட் இருப்பது வழக்கமான ஒன்று. திருப்பாச்சி, கில்லி, சிவகாசி, வேலாயுதம் என பல படங்களில் தங்கை மீது அதிக பாசம் வைக்கும் அண்ணனாக நடித்திருக்கிறார் விஜய். அந்த வகையில், லியோ படத்திலும் நடிகர் விஜய் தங்கை மீது பாசம் வைத்த அண்ணனாக நடித்துள்ளார். இதில், அவருடன் பிறந்த ட்வின் சிஸ்டராக நடித்துள்ளார் மடாேனா சபாஸ்டியன். லியோ படத்தில் அவரது பெயர், எலிசா. வெகு சில நிமிடங்கள் மட்டுமே இப்படத்தில் வரும் அவருக்கு பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம். 


சம்பள விவரம்..


மடோனா சபாஸ்டியன் (Madonna Sebastian Salary), மலையாளத்தில் நடிக்க ஒரு படத்திற்கு 40-50 லட்ச ரூபாய் வரை சம்பளமாக வாங்குவதாக கூறப்படுகிறது. தமிழ் படங்களிலும் அதே அளவு தொகையைத்தான் சம்பளமாக பெருகிறாராம். இந்த நிலையில், லியோ படத்தில் காமியோ ரோலில் நடிக்கவே அவருக்கு 30 லட்ச ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தினால் இவரது மார்கெட்டும் உயர்ந்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. லியோ படத்தை அடுத்து இவர் இன்னும் ஒரு தமிழ் படத்திலும் கமிட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | ‘லியோ’ படத்தில் நடிக்க பிரியா ஆனந்த வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?


லியோ படத்திற்கு கிடைத்த கலவையான விமர்சனங்கள்:


லியோ படம், வெளியாவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியது. ஆனால் வெளியான பிறகு “எதிர்பார்த்த அளவிற்கு ஒன்றுமில்லை..” என்றே சில ரசிகர்கள் கருத்துகளை கூறினர். மேலும், முதல் பாதி நன்றாக இருப்பதாகவும் இரண்டாம் பாதி மெதுவாக சென்றதாகவும் சில ரசிகர்கள் கருத்துகளை பகிர்ந்தனர். இன்னும் சிலர் லியோ படத்தில் கதையே இல்லை என்றும் ஒரே டெம்ப்ளேட் கதையையே லோகி அனைத்து படங்களிலும் உபயோகிப்பதாகவும் தெரிவித்திருந்தனர். இருப்பினும், படம் பெரும்பாலான ரசிகர்களுக்கு பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. 


நடிகர்களின் சம்பள விவரம்:


லியோ படத்தில் ஹீரோவாக நடித்துள்ள விஜய்க்கு (Vijay Salary) ரூ. 120 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைடுத்து இவர் நடிக்கும் தளபதி 68 படத்திற்காக ரூ.150 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம். விஜய்யை அடுத்து லியோ படத்தில் அதிகமாக சம்பளம் வாங்கியிருப்பது, பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் (Sanjay Dutt Salary). ஆண்டனி தாஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த இவருக்கு 8 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம். த்ரிஷாவிற்கு (Trisha Salary) 5 கோடியும், ஹரால்டு தாஸாக நடித்த அர்ஜுனிற்கு (Arjun Salary) 2 கோடியும் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம். 


மேலும் படிக்க | அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா! எத்தனை கோடி தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ