‘லியோ’ படத்தில் நடிக்க விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு? முழு விவரம்!

Leo Cast and Crew Salary Details: நடிகர் விஜய் லியோ படத்தில் நடிப்பதற்காக வாங்கிய சம்பள விவரங்களும் பிற நடிகர்-நடிகைகள் வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Oct 9, 2023, 02:22 PM IST
  • லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.
  • இந்த படத்தில் நடிக்க விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு?
  • பிற நடிகர்களின் சம்பள விவரம் என்ன?
‘லியோ’ படத்தில் நடிக்க விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு? முழு விவரம்!  title=

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் லியாே. தமிழ் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் லிஸ்டில் முதல் இடத்தில் இருக்கிறது. வரும் 19ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் கிட்டத்தட்ட 1 மாத காலமாகவே தயாராக உள்ளனர்.

லியோ படக்குழு:

லியோ படத்தில் விஜய் உடன் இணைந்து தமிழ் சினிமாவின் பல நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர். நடிகை த்ரிஷா, கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார். ஆக்ஷன் கிங் அர்ஜூன், படத்தில் ஒரு பயங்கர கேங்ஸ்டர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சஞ்சய் தத், இன்னொரு கேங்ஸ்டராக வருகிறார். பிரியா ஆனந்த், மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்துள்ளனர். 

வெளியில் சொல்லப்படாத நடிகர்கள்..

இத்திரைப்படம் எல்.சி.யூவில் இருக்கிறதா இல்லையா என்பதை படக்குழுவினர் மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர். பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், கைதி படத்தில் நடித்த ஜார்ஜ் மரியன், அர்ஜூன் தாஸ், பகத் பாசில், ஹரிஷ் உத்தமன், ஜனனி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், படம் வெளியான பிறகுதான் இவர்கள் எல்லாம் இப்படத்தில் நடித்திருக்கிறார்களா இல்லையா என்பது தெரியும். 

மேலும் படிக்க | தலைவர் 171 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு..?

விஜய் வாங்கிய சம்பளம்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராகவும் பணக்கார நடிகராகவும் வலம் வருபவர், விஜய். இவர், கடந்த சில ஆண்டுகளில் தன் சம்பளத்தை பன்மடங்காக உயர்த்தி விட்டார். கோலிவுட்டில் ரஜினியை அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் இவரும் இருக்கிறார். லியோ படத்தில் நடிக்க, விஜய்க்கு 120 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் நடிக்க இருக்கும் ‘தளபதி 68’ படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிக்க அவருக்கு 150 கோடி சம்பளம் காெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

த்ரிஷா:

South Queen என்று அழைக்கப்படும் த்ரிஷா, விஜய்யுடன் ஜாேடி சேர்ந்து நடிக்கும் 5வது படம், லியோ. த்ரிஷா நடிப்பில் ‘தி ரோட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பினை பெற்றுள்ளது. த்ரிஷா ஒரு படத்திற்கு 12 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஆனால், லியோ படத்தில் நடிப்பதற்காக அவர் 5 கோடி சம்பளம் வாங்கியதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது. 

சஞ்சய் தத்:
விஜய்யை அடுத்து, லியோ படத்தில் இருக்கும் பெரிய நடிகர் சஞ்சய் தத். கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கும் மேலாக திரையுலகில் இருக்கிறார். பாலிவுட்டின் பெரிய கை நடிகர்களுள் இவரும் ஒருவர். சஞ்சய் தத், லியோ படத்தில் ஆண்டனி தாஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் லியோ படத்தில் நடிப்பதற்காக 8 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

அர்ஜூன்:

விஜய்யுடன் முதன் முதலாக அர்ஜூன் சேர்ந்து நடிக்கும் படம், லியோ. இப்படத்தில் இவர் ஹரால்டு தாஸ் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் அவருக்கு பயங்கரமான கேங்ஸ்டர் கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை க்ளிம்ஸ் வீடியோ மூலம் ரசிகர்கள் அறிந்து கொண்டனர். இப்படத்தில் நடிப்பதற்காக அர்ஜூன் 1 கோடி சம்பளம் வாங்கினாராம். 

பிற நடிகர்களின் சம்பளம்:

லியோ படத்தில் இடம் பெற்றுள்ள சான்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், மிஷ்கின், பிரியா ஆனந்த், மாத்யூ தாமஸ், கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோருக்கு 50-70 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | “விஜய் கெட்ட வார்த்தை பேசியதற்கு நான்தான் பொறுப்பு” லோகேஷ் கனகராஜ் பளிச் பேட்டி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News