‘லியோ’ படம் எப்படியிருக்கு…? வெளியானது முதல் விமர்சனம்..!
Loe Review By Anirudh: லியோ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் லியோ படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம், லியோ. படம் வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தை பார்த்த பிரபலம் ஒருவர் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
லியோ படம்:
லோகேஷ் கனகராஜ்-விஜய் இரண்டாவது முறையாக கைக்கோர்த்துள்ள படம், லியோ. ஏற்கனவே மாஸ்டர் படத்தில் இணைந்து ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த இவர்கள், இந்த படம் மூலமாகவும் இன்னொரு ஹிட் கொடுக்க உள்ளனர். வெகு சில படங்களையே இயக்கி இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் “நல்ல இயக்கநர்” என்ற பெயரை பெற்றுள்ளார் லோகேஷ் கனகராஜ். படம் குறித்த ஒவ்வொரு அறிவிப்புகளையும் அப்டேட்டுகளையும் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
லியோ விமர்சனம்:
லியோ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே, லோகேஷ் கனகராஜ் உடன் மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய இவர், மூன்றாவது முறையாக லியோ படத்தில் இணைந்துள்ளார். படம் ரிலீஸாவதற்கு முன்னர் அப்படத்தின் குழுவினர் படத்தை பார்ப்பது வழக்கம். அந்த வகையில், இசையமைப்பாளர் அனிருத்தும் லியோ படத்தை பார்த்துள்ளார். படத்தை பார்த்த அவர், அது குறித்த விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்..
லியோ படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். படத்திற்கு முதலில் வைக்கப்பட இருந்த டைட்டிலில் இருந்து நடிகர் விஜய் கடைப்பிடிக்கும் டயட் வரை அவர் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
முதலில் வைக்கப்பட இருந்த டைட்டில்..
லியோ படத்திற்கு முதலில் வைக்கப்பட இருந்த பெயர் குறித்து பேசிய லோகி, அப்படத்தின் கதையை எழுதும் போது ‘ஆண்டனி’ என்று டைட்டில் வைக்க இருந்ததாராம். பின்னர் டைட்டில் வைப்பது குறித்து விவாதம் நடைப்பெற்ற போது, லியோ படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் அன்பரிவு, ‘லியோ’ என்ற டைட்டில் வைக்கலாம் என கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விக்ரம் படத்தின் கதையே வேறு..
லியோ படத்திற்கு முன்னர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை இயக்கியிருந்தார். அதில் கமல்ஹாசன் சீக்ரட் ஏஜெண்டாக இருப்பது போல கதை எழுதப்பட்டிருக்கும். ஆனால் முதலில் கதை அப்படியில்லையாம் இல்லையாம். குழந்தையை பராமரிக்கும் வேலை பார்க்கும் வயதானவர், ஒரு ரீசார்ஜ் கடையையும் நடத்தி வருகிறார். அவர் கடையில் அவருக்கே தெரியாமல் யாரோ சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்ய பயன்படுத்திக்கொள்கின்றனர். இதற்கடுத்து நடப்பவைதான் கதை. இதை கமலிடம் கூறிய போது, அவர் கொடுத்த ஒன்லைன் ஸ்டோரியை வைத்து அதை அப்படிய 6 மாதத்தில் பெரிதாக எழுதிய கதைதான் ‘விக்ரம்’ என்று பெரிய விஷயத்தை அசால்டாக பகிர்ந்துள்ளார் லோகேஷ்.
விஜய்யின் ஃபிட்னஸ்:
நடிகர் விஜய், லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது 30-40 நிமிடங்கள் வரை கார்டியோ செய்வதாகவும், மிகவும் குறைவான அளவே உணவை எடுத்துக்கொள்வதாகவும் கூறினார். அவர், டயட்டையும் ஸ்டிரிக்டாக கடைபிடிப்பதாக கூறியுள்ளார். அவர் உடற்பயிற்சி செய்வதற்காகவே லியோ செட்டில் ஒரு ஜிம் செட்-அப் இருந்ததாகவும் லோகி குறிபிட்டார்.
மேலும் படிக்க | விஜய்யா? ரஜினியா? தென்னிந்திய திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார்?
அனிருத்தின் விமர்சனம்:
அனிருத், Leo என்று படத்தின் பெயரை ஹேஷ்டேக்கில் குறிப்பிட்டு, 5 Fire எமிஜிக்களையும், 5 பட்டாசு எமோஜிக்களையும், 5 கப் எமோஜிக்களையும் இணைத்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள், “அடடா…கிரீன் சிக்னல் கிடைச்சிருச்சு…படம் சக்ஸஸ்தான்” என்று மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
எமோஜியாலே ரிவ்யூ கொடுக்கும் அனிருத்..
இசையமைப்பாளர் அனிருத், தான் இசையமைக்கும் படங்களை பார்த்த பிறகு அவற்றிற்கு எமோஜிக்களாலேயே ரிவ்யூ கொடுத்து வருகிறார். காரணம், பீஸ்ட்ட படத்திற்கு அவர் கொடுத்த விமர்சனத்தை பார்த்து அதை நம்பி திரையரங்கிற்கு சென்றவர்கள் இவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். இதனாலேயே, அவர் தான் இசையமைத்த ஜெயிலர் படத்திற்கும் ஜவான் படத்திற்கும் எமோஜிக்களாலேயே விமர்சனம் கொடுத்தார். தற்போது லியோ படத்திற்கும் அதையே செய்திருக்கிறார்.
மேலும் படிக்க | “லியோ படத்திற்கு முதலில் வைத்த டைட்டில் வேற..” ஷாக் கொடுத்த லோகேஷ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ