Leo First Single Update: 'மாஸ்டர்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் 'லியோ' படம் உருவாகி வருகிறது. வரும் அக்.19ஆம் தேதியன்று திரையரங்குகளில் லியோ திரைப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இந்த படம் தான் இந்த ஆண்டின் மிகப்பெரிய வசூலை குவிக்கும் படமாக அமையும் என எதிர்பார்ப்புகள் உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் தி ரூட் நிறுவனம் இணைந்து லியோ படத்தினை தயாரிக்கின்றன. இந்த ஆக்ஷன் திரைப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், பிக்பாஸ் ஜனனி, அபிராமி, இயக்குனர்கள் கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர்.  


லியோ படத்தின் எதிர்பார்ப்பு இருந்து வந்த அதே வேளையில், விஜய் - வெங்கட் பிரபு இணையும் தளபதி 68 படத்தின் அறிவிப்பு வெளியாகி விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது எனலாம். இருப்பினும், தற்போதைக்கு லியோ படத்தின் மீதுதான் முழு கவனமும் இருக்க வேண்டும் என்பதால், தளபதி 68 குறித்த முதல் அறிவிப்போடு அதுகுறித்த தகவல்களை வெளியிடலாம் படக்குழு உள்ளது. 


அந்த வகையில், வரும் ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் வருவதால், லியோ படத்தின் அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்திருந்தனர். ஆனால், திடீரென அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று மாலை 4 மணியளவில் 'ரெடியா...?' என பதிவிட்டிருந்தார். இதனால், லியோ படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. 


இந்நிலையில், படத்தின் முதல் பாடல் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தரப்பில் இன்று மாலை 5 மணியளவில் அறிவிக்கப்பட்டது. அந்த பாடலுக்கு 'நான் ரெடி' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், இந்த 'நான் ரெடி' பாடலை நடிகர் விஜய் பாடியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 



ஏனென்றால், விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படத்தில் 'குட்டி ஸ்டோரி' என்ற பாடல் தான் முதலில் வெளியிடப்பட்டது. அந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்த நிலையில், நடிகர் விஜய் தான் அப்பாடலை பாடியிருந்தார். எனவே, அதே சென்டிமண்டை தொடரும் வகையில், 'நான் ரெடி' பாடலையும் விஜய் பாடியிருக்கலாம் என கூறப்படுகிறது. 



லியோ படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் ப்ரோமாவுக்கு படக்குழு வெளியிட்ட வீடியோவில், அனிருத்தின் பின்னணி இசை மிரட்டியிருந்தது என ரசிகர்கள் தெரிவித்திருந்தனர். எனவே, முதல் பாடல் விஜய் ரசிகர்களுக்கு அனிருத்தின் வேற லெவல் விருந்தாக இருக்கும் என எதிர்பார்ப்பும் தற்போது எழுந்துள்ளது. 'நான் ரெடி' பாடல் தேதி அறிவிப்புக்கு படக்குழு வெளியிட்ட புகைப்படத்தில், 'Alter Ego' என குறிப்பிடப்பட்டுள்ளது. புகைப்படத்தில் விஜய் சிகரெட்டுடனும், துப்பாக்கியுடனும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ