SIP என்னும் மியூச்சுவல் ஃபண்டில் சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் பெரிய அளவில் கார்ப்ஸை உருவாக்கலாம். ஆயிரத்தை கோடிகளாக்கும் பரஸ்பர நிதியம் சாமான்யர்களை கோடீஸ்வரர்களாக ஆக்கும் வல்லமை படைத்தது. பரஸ்பர நிதிய முதலீடுகளில், சராசரியாக 12 - 15% சதவிகித ஆண்டு வருமானம் கிடைப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், பல சமயங்களில், சிறந்த பரஸ்பர நிதிய திட்டங்களில் முதலீடு செய்தல், 20% முதல் 30% வரை கூட ஆண்டு வருமானத்தை வழங்கியுள்ளன என சமீபத்திய தரவுகள் கூறுகின்றன.
HDFC Flexi Cap Fund
முதலீட்டாளர்களை பணக்காரர்களாக்கிய மியூச்சுவல் ஃபண்டு பல திட்டங்கள் பல உள்ளன. அதில் ஒன்று எச்டிஎஃப்சி ஏஎம்சி. இதில் மாதம்தோறும் வெறும் ரூ.10,000 என்ற அளவில் 30 ஆண்டுகளுக்கு தொடர் முதலீடு செய்யப்பட்டு வந்த நிலையில், அது ரூ.21 கோடியாக பெருகியுள்ளன. இந்த ஃபண்டின் பெயர் HDFC Flexi Cap Fund. 1995 ஜனவரி 1ம் தேதியன்று எஸ்ஐபி மூலம் இந்த ஃபண்டில் ரூ.10,000 முதலீடு செய்யத் தொடங்கிய நிலையில், இன்று உங்கள் பணம் ரூ.20.65 கோடியாக அதிகரித்துள்ளது.
19.13 சதவிகித வருமானம்
ஜனவரி 1, 1995 முதல் ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 முதலீடு என்ற அளவில், முதலீட்டாளர் இதுவரை ரூ.35.90 லட்சம் முதலீடு செய்துள்ளார். HDFC Flexi Cap Fund தனது நிதியை லார்ஜ்கேப், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளில் முதலீடு செய்கிறது. இந்தத் திட்டம் 19.13 சதவிகிதம் CAGR வருமானத்தை அளித்துள்ளது. இந்தத் திட்டம் தொடங்கும் போது மொத்த முதலீடாக ரூ.1,00,000 முதலீடு செய்திருந்தால், இன்று இந்தப் பணம் ரூ.1.88 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கும். இந்த ஃபண்ட் அதன் பெஞ்ச்மார்க் நிஃப்டி டிஆர்ஐ கணிப்பை விட சிறந்த வருமானத்தை அளித்துள்ளது.
பங்குகளில் முதலீடு
HDFC Flexi Cap Fund திட்டம் ஃப்ளெக்ஸி கேப் பிரிவில் உள்ள பழமையான திட்டங்களில் ஒன்றாகும். வெவ்வேறு சந்தை மூலதனம் கொண்ட நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் அதன் போர்ட்ஃபோலியோவை பல்வகைப்படுத்த முயற்சி செய்யும் திட்டமாகும். பல்வகைப்படுத்தல் என்பது பல வகையான ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்வது.
பல்வகைப்படுத்தல் முறையிலான முதலீடு
பல வகையான பண்டுகளில் பிரிது முதலீடு செய்யும் பல்வகைப்படுத்தல் முறையிலான முதலீட்டில் உள்ள நன்மை என்னவென்றால், ஏதேனும் ஒரு துறையின் செயல்திறன் மோசமாக செய்யும் போது, போர்ட்ஃபோலியோ அதிகம் பாதிக்கப்படாது. எனெனில் எல்லா நேரங்களிலும் எல்லா பண்டுகளிலும் அதிக வருமானம் கிடைக்கும் என கூற இயலாது. ஒன்றில் குறைந்த வருமானம் கிடைக்கும் போது, மற்றொன்றில் அதிக வருமானம் கிடைக்கும். இதனால், வருமானம் பாதிக்கப்படாமல் சீராக இருக்கும்.
ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு
HDFC AMC என்னும் பரஸ்பர நிதி முதலீட்டாளர்களை பணக்காரர்களாக ஆக்கியுள்ளது என்றாலும், ஒரு நிதியின் கடந்தகால செயல்திறன் எதிர்காலத்தில் சிறந்த செயல்திறனுக்கான உத்தரவாதம் அல்ல என்பதை முதலீட்டாளர்கள் மனதில் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மியூச்சுவல் ஃபண்டுகளில், குறிப்பாக ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்வதில் நிறைய ரிஸ்க் உள்ளது. நீங்கள் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்ய விரும்பினால், இது தொடர்பாக உங்கள் நிதி ஆலோசகர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ