Leo OTT Release Date: ஓடிடியில் லியோ படம்...எப்போது ரிலீஸ்?
Leo OTT Release date: லியோ படத்தின் OTT வெளியீட்டு தேதி குறித்து தகவல் வெளியாகி உள்ளன. தளபதி விஜய் நடித்துள்ள இப்படம் தற்போது வசூலை வாரி குவித்து வருகிறது.
லியோ ஓடிடி ரிலீஸ் தேதி: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியான நிலையில், 4 வாரத்திலேயே ஓடிடியில் வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லியோ திரைப்படம்:
'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு தளபதி விஜய் (Actor Vijay) மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள இரண்டாவது படமான லியோவும் வெற்றி ஹிட் அடித்துள்ளது. இந்த படத்தின் திரைக்கதையை லோகேஷ், ரத்ன குமார் மற்றும் தீரஜ் வைத்தி எழுதியுள்ளனர். விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், மடோனா செபாஸ்டியன், ஜார்ஜ் மரியன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் லியோ படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. லியோ (Leo Movie) படம் கைதி (2019) மற்றும் விக்ரம் (2022) ஆகிய படங்களின் தொடர்ச்சிகளை கொண்ட லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாகும். மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. லியோ படம் விஜய்யின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. வழக்கமான விஜய் படங்களை போன்று அறிமுக பாடல், சண்டைக்காட்சி இல்லாத முற்றிலும் வித்தியாசமான படமாக லியோ இருந்தது. லியோவுக்கு கலவையான பேச்சு இருந்தாலும், வசூல் அந்த விளைவை சந்தவிக்கவில்லை.
லியோ படத்தின் வசூல் நிலவரம்:
லியோ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்து இருக்கிறது. இந்த படத்தின் வசூல் தொடர்ந்து வலுவாக உள்ளது. வெளியாகி 7 நாட்களாகி இருக்கும் நிலையில், இந்த திரைப்படம் 250 கோடி ரூபாய்யை தாண்டி வசூல் செய்து இருக்கிறது. நேற்று மட்டும் லியோ திரைப்படம் 10 கோடி ரூபாய் வசூல் செய்து இருக்கிறது.
மேலும் படிக்க | மலை போல் காசை குவித்து வைத்திருக்கும் த்ரிஷா.. சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
ஓடிடியில் லியோ திரைப்படம்:
இந்நிலையில் லியோ திரைப்படம் திரையரங்கில் வெளியாகி இன்னும் 7 நாட்களே ஆகியுள்ள நிலையில், தற்போது வரும் நவம்பர் 4வது வாரத்தில் லியோ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் முன்னணி ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் லியோ படத்தின் டிஜிட்டல் உரிமையைப் பெற்றுள்ளது. அதன்படி வரும் நவம்பர் 17 ஆம் தேதி அல்லது 21 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் லியோ திரைப்படம் ஸ்ட்ரீமிங்கிற்கு கிடைக்கும் என வதந்திகள் பரவி வருகின்றன. இருப்பினும், லியோ ஓடிடி வெளியீடு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.
4 வாரத்தில் ஓடிடியில்:
இதினிடையே ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆன 4 வாரத்தில் ஓடிடியில் வெளியிடப்பட்டது. அதேபோல் அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி மற்றும் சமந்தாவின் குஷி, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்கள் 4 வாரத்திலேயே ஓடிடியில் வெளியாகின. அதே போல லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் 4 வாரத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | நடிகை ராதாவின் மகளுக்கு நிச்சயதார்த்தம்! மாப்பிள்ளை யார்? திருமணம் எப்போது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ