Leo Trailer Review: லியோ ட்ரெய்லர் எப்படியிருக்கு? இதோ முதல் விமர்சனம்
Leo Trailer First Review: விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த `லியோ` படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரின் முதல் விமர்சனம் உங்களின் பார்வைக்கு.
லியோ ட்ரெய்லர் விமர்சனம்: இன்று லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் தங்களுடைய விமர்சனத்தை சமூக வலைத்தளத்தில் கூறி வருகின்றனர். அவர்கள் கூறியுள்ளபடி ட்ரெய்லர் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.
லியோ திரைப்படம்:
லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி உள்ள படம் லியோ. லியோ படம் வெளியாவதற்கு முன்பே பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை படைத்து வருகிறது. தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள இப்படம் வெளிநாடுகளில் அமோக வியாபாரம் செய்ததால், அட்வான்ஸ் விற்பனை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் ஏற்கனவே UK பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய அதிக புக்கிங் ஆனா தமிழ் படமாக மாறி வருகிறது.
மேலும் படிக்க | வெளியானது 'லியோ' படத்தின் மாஸ் ட்ரெய்லர்.. விஜய் ரசிகர்களுக்கு இதோ ட்ரீட்
படக்குழு:
விஜய்யுடன் கடைசியாக ‘குருவி’ படத்தில் இணைந்து நடித்திருந்த த்ரிஷா, தற்போது 15 வருடங்கள் கழித்து அவருடன் லியோ படத்தில் இணைந்துள்ளார். படத்தின் இன்னொரு நாயகியாக வருகிறார், பிரியா அனந்த். மலையாள நடிகர் மாத்யூ தாமஸ், தமிழ் இய்ககுநரும் நடிகருமான மிஷ்கின், காமெடி நடிகர் வையாபுரி, வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இவரது பெயர் இதில் ஆண்டனி தாஸ். இவர்களை தவிர, படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் யார் யார் என்பதை வெளியில் கூறாமல் வைத்திருக்கிறார், இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அந்த லிஸ்டில் கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன் தாஸ், பகத் பாசில், நரேன் என பல நட்சத்திரங்கள் உள்ளனர். யார் யார் நடித்திருக்கிறார்கள் என்பது படம் வெளிவந்த உடன்தான் தெரியும். அதுமட்டுமின்றி லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது.
லியோ ட்ரெய்லர் வெளியீடு:
இந்நிலையில் சற்று முன் லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. மேலும் ட்ரெய்லர் எப்படி இருக்கிறது என்று பலர் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
லியோ ட்ரெய்லர் விமர்சனம்:
மேலும் படிக்க | மீனாட்சி பொண்ணுங்க: மீனாட்சி வீட்டுக்கு வந்து சர்ப்ரைஸ் கொடுத்த ரங்கநாயகி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ