லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம், கடந்த 19ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் த்ரிஷாவும் விஜய்யும் கணவன் மனைவியாக நடித்திருப்பார்கள். இவர்களுக்கு படத்தில், ஒரு மகனும் மகளும் இருப்பார்கள். இதில், விஜய்க்கு மகளாக நடித்துள்ள அந்த குழந்தை நட்சத்திரம் யார் தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லியோ படத்தில் குழந்தை நட்சத்திரம்:


லியோ படத்தில் நடிகர் விஜய்க்கு இரண்டு பிள்ளைகள் இருப்பது போன்று கதை அமைத்திருப்பர். இதில், விஜய்-த்ரிஷாவிற்கு மகனாக மலையாள நடிகர் மாத்யூ தாமஸ் நடித்திருப்பார். இரண்டாவது மகளாக இயல் என்ற குழந்தை நடித்திருக்கிறார். படத்தில், இவரது கதாப்பாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்தது. படத்தில் இந்த குழந்தையின் பெயர் மதி. படத்தில் துரு துரு குழந்தையாக வரும் இவர், நிஜ வாழ்க்கையிலும் அதே போலத்தான் சுட்டி குழந்தையாக இருப்பார் என கூறப்படுகிறது. இவர் பிரபல நடிகர் ஒருவரின் மகள் என்பது உங்களுக்கு தெரியுமா? 


‘இந்த’ நடிகரின் மகள்தான் அவர்..! 


‘காதலில் சொதப்புவது எப்படி’ படம் மூலம் திரையுலகிற்குள் எண்ட்ரி கொடுத்தவர், பாலாஜி மோகன். இதையடுத்து வாயை மூடி பேசவும், ஆதலால் காதல்ச் செய்வீர், அரிமா நம்பி, டார்லிங் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து விட்டார். பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் இவர் முக்கிய காமெடி கதாப்பாத்திரமாக வந்துள்ளார். இவருக்கு இலன் மற்றும் இயல் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இரட்டை குழந்தைகளான இயல்-இலன் இரண்டு பேருமே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக வலம் வருகின்றனர். 


இலன்-இயல் நடித்துள்ள படங்கள்:


அர்ஜூனனின் மகனான இலனும் சில படங்களில் குழந்தை நடசத்திரமாக நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் கவின் நடிப்பில் வெளியாகியிருந்த ‘டாடா’ படத்தில் அவருக்கு 5 வயது மகனாக வருவது, இலன்தான். இதையடுத்து, லியோ படத்தில் இலனின் சகோதரியான இயலிற்கு நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 


மேலும் படிக்க | லியோ படத்தை பார்த்து உதயநிதி சொன்ன ரிவியூ! அதிர்ச்சியில் உறைந்த படக்குழு!


வைரலாகும் அர்ஜூனனின் பதிவு:


நடிகர் அர்ஜூனன், தனது டிவிட்டர் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், தன் மகளை பார்த்துக்கொண்ட லியோ படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.



மேலும், இயலை அனைவரும் பத்திரமாக பார்த்துக்கொண்டதாகவும் தன் குழந்தை மீது மிகுந்த அக்கறை காட்டிய நடிகர் விஜய்க்கு நன்றி என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இயலுக்கு விஜய்யுடன் பல நல்ல தருணங்கள் கிடைத்ததாகவும் பிறருக்கு அவர் வேறு எந்த தொல்லையும் தரவில்லை என நம்புவதாகவும் அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். 


குழந்தைக்காக நடனமாடிய விஜய்:


லியோ படத்தில் விஜய், பேக்கரி வைத்து நடத்துபவராக நடித்திருப்பார். இதில், இவர் தனது குழந்தைக்காக “கருகரு கருப்பாயி..” பாடலிற்கு நடனமாடியிருப்பார். இந்த காட்சி, அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்களுக்கு மட்டுமன்றி, குழந்தைகளுக்கும் பிடித்துள்ளது. லியோ படத்தில் தாங்கள் வேறு மாதிரியான விஜய்யை பார்க்க முடிந்ததாக படம் பார்த்த ரசிர்கள் பலர் கருத்துகளை தெரிவித்துள்ளனர். 


மேலும் படிக்க | Leo Day 5 Box Office: 5 நாளில் இவ்வளவு கோடி வசூலா? சர்வதேச மார்க்கெட்டில் லியோ அசத்தல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ