`ஆரம்பிக்கலாங்களா` இன்று 5 மணிக்கு.. விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக்!
தமிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். `கைதி` படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்திலேயே விஜய்யை வைத்து மாஸ்டர் படம் இயக்கி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
கமல் நடிப்பில் உருவாகி வரும் 'விக்ரம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேற்று அறிவித்திருந்தார். அவரின் அறிவிப்பை அடுத்து கமல் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளானர். சமூக ஊடகங்களை ஆக்கிரமித்து உள்ளனர்.
தமிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். "கைதி" படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்திலேயே விஜய்யை வைத்து மாஸ்டர் படம் இயக்கி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
அடுத்ததாக தனது கலை உலக குருவான கமல்ஹாசனை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. நடிகர் கமலஹாசன் தயாரித்து நடிக்கும் விக்ரம் படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது.
ஆனால் அதற்கு பிறகு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சி தயாரானதால், அந்தப் படத்தின் படப்பிடிப்பு தாமதமானது.
ALSO READ | Kamal Haasan-னின் விக்ரம் படம்: மாஸ் அப்டேட் அளித்த லோகேஷ் கனகராஜ்
இதனைத் தொடர்ந்து இப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் கடந்த வருடம் கமலின் பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மோஷன் போஸ்டரின் இறுதியில் இருந்த "ஆரம்பிக்கலாங்களா" என்ற வசனம் இணையத்தில் வைரலானது.
தற்போது கமலின் இந்தியன் 2 படம் பிரச்சனையில் இருப்பதால் அடுத்து எந்த படத்தில் நடிப்பார், பாபநாசம் 2 ஹா அல்லது விக்ரமா என்று கமல் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், "ஆரம்பிச்சுடோம்" என்று இயக்குனர் லோகேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே படத்தின் டெக்சினியன்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் இணைந்த கேமரா மேன் கிரீஸ் கங்காதர் உடன் அடுத்த மாதம் இப்படத்தின் சூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR