Tamil Movies Of 2022 By Box Office Collection: தென்னிந்திய சினிமாவுக்கு இந்த ஆண்டு ஜாக்பாட் ஆண்டு என்றே சொல்லலாம். கன்னட சினிமா, தெலுங்கு சினிமா, தமிழ் சினிமா படங்கள் அசால்டாக பல கோடிகள் வசூலை வாரிக்குவித்து பாலிவுட்டுக்கு ஷாக் கொடுத்தது. அதில் இந்த ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களில் கலெக்‌ஷனில் பின்னி பெடலெடுத்தது. அந்த வரிசையில் முதலிடத்தை மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பிடித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கல்கி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி இருந்தார். அதன் முதல் பாகம் தான் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி சக்கை போட்டு போட்டது. கிட்டதட்ட 450 கோடிக்கு மேல் படம் வசூலித்தது. இந்தப் படத்தை குடும்பம் குடும்பமாக சென்று திரையரங்குகளில் ரசிகர்கள் கண்டு களித்தனர். பாகுபலி போல முதல் பாகம் செம ஹிட் ஆனதால், இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாகம் வெளியானால் நிச்சயம் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களையும் சேர்த்து வசூலில் 1000 கோடி ரூபாயைத் தாண்டும். திரிஷா, விக்ரம், ஜெயம் ரவி என பலருக்கும் இந்தப் படத்தின் வெற்றி முக்கியமானதாக அமைந்துவிட்டது. 


அடுத்ததாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் 450 கோடி ரூபாய் வரை பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷென் அள்ளியது. இந்த ஆண்டு வெளியான படங்களில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த படமாகவும் விக்ரம் அமைந்துள்ளது என்றே சொல்லலாம். லோகேஷ் கனகராஜின் LCU கனெக்ட் இந்த படத்துக்கு கை கொடுத்தது என்றே சொல்லலான். அடுத்ததாக விஜய் 67 படத்தையும் இவர் இயக்க உள்ளதால் அந்த படத்தின் கலெக்‌ஷன் நிச்சயம் விக்ரம் கலெக்‌ஷனை தூக்கி சாப்பிட்டுவிடும்.


மேலும் படிக்க: சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!


3-வது இடத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் இடம்பெற்றுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்த பீஸ்ட் படம் தமிழ் வருடப்பிறப்பு ஸ்பெஷலாக வெளியானது. நெல்சன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படம் ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை. அதிகமான அளவு நெகட்டீவ் ரிவ்யூ வந்த போதும், படம் சுமார் 235 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் இந்த வசூல் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏமாற்றம் தான்.


எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. அதிக வசூலான தமிழ்ப் படங்கள் லிஸ்ட்டில் 4-வது இடத்தில் வலிமை உள்ளது. 


லாக்டவுன் சமயத்தில் சூரரைப் போற்று, ஜெய்பீம் என ஓடிடியில் படங்களை வெளியிட்டு மக்களுடன் நடிகர் சூர்யா தொடர்பில் இருந்தார். அதன் பலனாக எதற்கும் துணிந்தவன் வெற்றி அமைந்தது. இந்தப்படம் 175 கோடி ரூபாய் கலெக்‌ஷன் ஆனது. கலவையான விமர்சனங்கள் வந்தாலும், வசூலில் நல்ல வரவேற்பே கிடைத்தது. 


மேலும் படிக்க: “இங்கு பெண்கள் விற்கப்படுகிறார்கள்” -விஸ்மயா விட்டுச் சென்றதை முடித்த ஜெயா!


சிவகார்த்திகேயனுக்கு இந்த ஆண்டு சிறப்பானதாகவும் அமைந்தது அதே நேரம் சோதனையாகவும் அமைந்தது. இவர் நடிப்பில் டான், பிரின்ஸ் என இரு படங்கள் வெளியானது. இதில் டான் படம் 125 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. நல்ல பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் கிடைத்தது. ஆனால் தீபாவளிக்கு வெளியான பிரின்ஸ் படும் படுதோல்வி அடைந்தது.


மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் ஆர்ப்பாட்டமே இல்லாமல் வெளியானது. சாதாரண கதை, பெரிய ஹீரோயிசம் இல்லை, தந்தை - மகனுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டம், தொடர் காதல் தோல்விகள், சிறுவயது தோழி என இளசுகளை கவரும் வகையில் எடுக்கப்பட்ட இந்தப்படம் இமாலய வெற்றியை பெற்றது. சுமார் 110 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து லிஸ்ட்டில் 7-வது இடத்தில் உள்ளது.


ஏற்கனவே கார்த்தியின் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் இந்த லிஸ்ட்டில் இடம்பிடித்த நிலையில், 8வது இடத்திலும் கார்த்தியின் சர்தார் படம் உள்ளது. பி எஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இந்தப்படத்துடன் வெளியான பிரின்ஸ் படம் பிளாப் ஆனதால், இதன் கலெக்‌ஷன் எகிறியது. 


மேலும் படிக்க: விஜய்க்கு வில்லனாக நடிக்க அர்ஜுன் கேட்ட சம்பளம் - ஆடிப்போன தயாரிப்பு தரப்பு


பெரிய ஹீரோக்கள் படங்கள் கலெக்‌ஷனில் அசத்தியது எல்லாம் பெரிய விஷயம் இல்லை. தனது இரண்டாவது படத்திலேயே ஒட்டு மொத்த தமிழகத்தையும் மிரட்டிவிட்டார் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கிய முதல் படமான கோமாளி 50 கோடி ரூபாய் வசூலித்தது. அடுத்த படத்தில் இவரே நாயகனாக நடித்தார். உருவக்கேலி விமர்சனங்களுக்கு மத்தியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான லவ் டுடே படம் 80 கோடி ரூபாய் வரை வசூலித்தது. அதோடு டாக் ஆஃப் த கோலிவுட் ஆகவும் மாறியது. இன்றைய 2கே கிட்ஸுகளை கவர்ந்த இந்தப்படத்தின் வெற்றியை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை இயக்கும் வாய்ப்பு இவரைத்தேடி வந்துள்ளதாக கூறப்படுகின்றது.


10-வது இடத்தை வெந்து தணிந்தது காடும், விருமனும் பிடித்துள்ளது. இந்த இரு படங்களும் 60 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. சிம்பு நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இந்தப்படத்துக்காக அதிகப்படியான உடல் எடையை குறைத்து நடித்திருந்தார் சிம்பு. 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப்படம் 60 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. அடுத்ததாக விருமன் படமும் 60 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து அசத்தியது. இந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான 3 படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். ஏற்கனவே இரண்டு படங்கள் இந்த லிஸ்ட்டில் இடம்பிடித்த நிலையில், விருமனும் டாப் 10 லிஸ்ட்டில் 10-வது இடத்தை பிடித்துவிட்டது. இந்த ஆண்டைப்போல அடுத்த ஆண்டும் தமிழ் சினிமாவுக்கு சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும்.


மேலும் படிக்க: 'கண்களை கவரும் மஞ்சள்' ஹாட் ஸ்டைலில் மாளவிகா மோகனன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ