கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்! - விஜய், அஜித்துக்கு எத்தனையாவது இடம்?
கூகுள் தளத்தில் கடந்த அரையாண்டில் ஆசிய அளவில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அரசியல் பிரபலங்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் நீங்கலாக இந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது.
கூகுள் தளத்தில் கடந்த அரையாண்டில் ஆசிய அளவில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அரசியல் பிரபலங்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் நீங்கலாக இந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது.
100 பேர் கொண்ட அந்தப் பட்டியலில் கொரியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர். அதன்படி தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல பாடகரான ‘வி’ முதலிடத்தில் உள்ளார். BTS எனும் பிரபல பேண்டைச் சேர்ந்தவர் இந்த ‘வி’.
கோலிவுட் நடிகர்களைப் பொறுத்தவரை நடிகர் விஜய்தான் இதில் முன்னணியில் உள்ளார். இணையத்தில் எப்போதும் ட்ரெண்டிங்காக இருக்கும் விஜய் இந்தப் பட்டியலில் 22ஆவது இடத்தில் உள்ளார். விஜய்யைப் பொறுத்தவரை நடப்பாண்டில் பீஸ்ட் திரைப்படம் வெளியானபோது நல்ல ட்ரெண்டிங்கில் இருந்தார். இதையடுத்து கடந்த 22ஆம் தேதி அவரது நாளையொட்டியும் ட்ரெண்ட் ஆனார். அது மட்டுமல்லாமல் அவரது அடுத்த படமான வாரிசு பற்றியும் அப்டே வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றிருந்தார்.
அதேபோல நடிகர்களான தனுஷுக்கு இதில் 61ஆவது இடமும் சூர்யாவுக்கு 63ஆவது இடமும் கிடைத்துள்ளன. ரஜினி இந்தப் பட்டியலில் 77ஆவது இடத்தில் உள்ளார். அஜித் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் இந்த டாப் 100 பட்டியலில் இடம்பெறவில்லை. நடிகைகளைப் பொறுத்தவரை அண்மையில் குழந்தைக்குத் தாயான காஜல் அகர்வால் 15ஆவது இடமும் ட்ரெண்டிங்கில் இருந்துவரும் நடிகை சமந்தாவுக்கு 18ஆவது இடமும் கிடைத்துள்ளது.
மேலும் படிக்க | சர்ச்சையில் சிக்கிய திருச்சிற்றம்பலம்- ‘தாய்க் கிழவி’ பாடலுக்குத் தடை?
அண்மையில் காலமான பழம்பெரும் பாடகியும் பாரத ரத்னா விருது வென்றவருமான லதா மங்கேஷ்கர் அதிகம் தேடப்பட்டோர் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளார். அதேபோல அண்மையில் காலமான பாடகர் கே.கே இதில் 30ஆவது இடத்தில் உள்ளார்.
பாலிவுட் நடிகர்களான சல்மான் கான் ஷாருக்கான முறையே 11 மற்றும் 12ஆவது இடங்களில் உள்ளனர். இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களுள் இருக்கும் ஒரே கிரிக்கெட் வீரர் விராட் கோலிதான். அவ்வகையில் அவருக்கு 10ஆவது இடம் கிடைத்துள்ளது.
கடந்த 9ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட நடிகை நயன்தாராவுக்கு இந்த டாப் 100 பட்டியலில் 33ஆவது இடம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியல் அனைத்தும் 2022 ஜனவரி முதல் தேதியிலிருந்து 2022 ஜூன் 23ஆம் தேதி வரையிலான ஆக்டிவிட்டிகளைக் கொண்டு உருவாகியுள்ளது.
மேலும் படிக்க | 25 years of 'பாயசம் சாப்பிடுங்க ஃபிரண்ட்'! வைரலாகும் சூர்ய வம்சம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR