Jailer Audio Launch LIVE: குரைக்காத நாயுமில்ல-குறை சொல்லாத வாயுமில்ல-மேடையில் பஞ்ச் பேசிய ரஜினி..!

Fri, 28 Jul 2023-11:33 pm,

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துடுள்ள ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. அதன் சுட சுட அப்டேட்ஸ்களை இங்கு காணலாம்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. அதன் சுட சுட அப்டேட்ஸ்களை இங்கு காணலாம். 

Latest Updates

  • ஜெயிலர் இசை வெளியீட்டு விழாமேடையில் பஞ்ச் பேசிய ரஜினி..!

    ரஜினி இன்றைய விழாவில், “குரைக்காத நாயுமில்ல குரை சொல்லாத வாயுமில்ல..ரெண்டும் இல்லாத ஊருமில்ல” என பேசினார். இவரது பேச்சு ரசிகர்களை ஈர்த்துள்ளது. 

  • மோகன்லால் குறித்து ரஜினி..!

    மோகன்லால் குறித்து பேசிய ரஜினி, அவர் ஒரு சிறப்பான நடிகர் என கூறியுள்ளார். அது மட்டுமன்றி ஜெயிலர் படம் குறித்த மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை ரஜினி பகிர்ந்துள்ளார். 

  • ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த ரஜினி..!

    “யாரும் தயவு செய்து குடிக்காதீங்க. நீங்கள் ஒருவர் குடித்தால் உங்கள் குடும்பம், நண்பர்கள், உறவினர்கள், என எல்லோரும் சிரமப்படுவார்கள்” என ரஜினி தன் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார். 

  • ரஜினியை பார்த்து மேடையில் ஏறி ரம்யா கிருஷ்ணன் செய்த செயல்..!

    ரஜினியை பார்த்து பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன், “வயசானாலும் உன் ஸ்டைலும அழகும் இன்னும் உண்ண விட்டு போகல..” என்று வசனத்தை பேசியுள்ளார். 

  • சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து ரஜினிகாந்த் பேச்சு..!

    ”சூப்பர் ஸ்டார் பட்டம் எப்போதுமே தொல்லைதான்..” என ரஜினிகாந்த் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். 

  • நெல்சனை சந்தித்த நிகழ்வை நகைச்சுவையாக கூறிய ரஜினிகாந்த்..!

    ஜெயிலர் படம் குறித்து பேசுவதற்காக தன்னை பார்க்க நெல்சன் வந்த சம்பவம் குறித்து ரஜினி நினைவு கூர்ந்துள்ளார். அவர் தன்னை முதன்முதலில் சந்தித்த போது “நல்ல காப்பி இருந்தா சொல்லுங்க..” என்று கூறியதாக பேசியுள்ளார். 

  • ‘அண்ணாத்த படத்துக்கு பிறகு பெரிய கேப்..’ ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேச்சு. 

    ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, அண்ணாத்த படத்திற்கு பிறகு ஒரு படம் ரிலீஸாக நிறைய நாட்கள் எடுத்துக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். சரியான கதை கிடைக்காததால் இவ்வளவு நாட்கள் ஆகி விட்டதாக ரஜினி தெரிவித்தார். மேலும், இயக்குநரும் கதையும் படத்திற்கு மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறினார். 

  • ரஜினி என்னை சார் என்று அழைத்தார்-நெல்சன்!

    ஜெயிலர் படப்பிடிப்பின் போது ரஜினி தன்னிடம் நெகடிவாக ஒரு முறை கூட பேசியதில்லை என்றும் அவர் தன்னை சார் என்று அழைத்ததாகவும் நெல்சன் கூறியுள்ளார். 

  • ‘இதுதான் என்னுடைய முதல் இசை வெளியீட்டு விழா..’ நெல்சன் நெகிழ்ச்சி...!

    ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நெல்சன், இதுதான் தனது முதல் இசை வெளியீட்டு விழா என குறிப்பிட்டுள்ளார். இதுவரை தான் 4 படங்களை இயக்கியுள்ளதாகவும் இதுவே தனது முதல் இசை வெளியீட்டு விழா என்றும் கூறியுள்ளார். 

  • ஜெயிலர் இசை வெளியீட்டு விழா-ரஜினி-விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் மோதல்!

    ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பீஸ்ட் பட பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து, ரஜினி ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் ட்விட்டரில் அடித்துக்கொள்கின்றனர். 

  • 'ரஜினி எனக்கு சித்தப்பா..’ நடிகர் சிவராஜ் குமார் பேச்சு..!

    ரஜினி தனக்கு சித்தப்பா போன்றவர் எனவும் அவர் கையை பிடித்துக்கொண்டுதான் சபரி மலைக்கு தான் பயண மேற்கொள்வேன் என்றும் நடிகர் சிவராஜ் குமார் பேசியுள்ளார். 

  • ஜெயிலர் இசை வெளியீட்டு விழா-நெல்சனிடம் ரஜினி சொன்ன வார்த்தை..!

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்று வருவதை தொடர்ந்து, நெல்சனிடம் ரஜினி ஷூட் முடிந்து வீட்டுக்கு போகையில் சொன்ன வார்த்தையை விடிவி கணேஷ் கூறியுள்ளார். 

    ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் முடிந்து வீட்டிற்கு செல்லும் போது ரஜினி நெல்சனிடம் "I'll Miss You" என்று கூறினாராம். இதை விடிவி கணேஸ்ஷ் நினைவு கூர்ந்துள்ளார். 

  • ரஜினியா? விஜய்யா..? ட்விட்டரில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்..!

    ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவையொட்டி, டிவிட்டரில் சில ரஜினி ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் மாறி மாறி சண்டை போட்டு வருகின்றனர். 

  • ஜெயிலர் பட விழாவில் விஜய்யின் அரபிக்குத்து பாடல்..! ரசிகர்கள் ஆரவாரம்..!

    ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவின் ஆரம்பத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடல் ஒளிபரப்பப்பட்டது. இதற்கு ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர்.

  • ஜெயிலர் படத்தின் அனைத்து பாடல்களும் வெளியீடு..!

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ஜெயிலர் படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

  • அனிருத், நெல்சன் திலீப் குமாரை கட்டித்தழுவிய ரஜினி!

    ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த ரஜினி அனிருத் மற்றும் நெல்சன் திலீப்குமாரை கட்டித்தழுவினார். 

  • ‘சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு’ ரஜினி எண்ட்ரிக்கு ஆராவாரம் செய்த ரசிகர்கள்..!

  • ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த ரஜினியின் பேரன்கள்.!

  • ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்குகிறார் கவின்..!

    நடிகர் கவின், ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறார். 

  • ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவிற்கு ரஜினிகாந்த் வருகை..!

    ஜெயிலர் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் விழா அறங்கிற்கு வந்துள்ளதாக அரங்கில் இருக்கும் ரசிகர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார். 

  • ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ‘பேட்ட’ பாடல்..!

    ஜெயிலர் பட விழாவில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படத்தின் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. 

  • ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் லைவாக பாட இருக்கும் அனிருத்..!

    ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் அனிருத் லைவாக பாடல் பாட உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

  • ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவிற்கு ரஜினியின் சகோதரர் சத்யநாராயணன் வருகை தந்துள்ளார். 

    ரஜினி வருவதற்கு முன்னர், ரசிகர்களுக்காக ரஜினியின் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளன. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link