துணிவு vs வாரிசு LIVE Updates: பொங்கல் ஆட்டநாயகன் யார்...? - விமர்சனம் முதல் கொண்டாட்டம் வரை !

Wed, 11 Jan 2023-7:41 am,

Varisu And Thunivu Review: பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகவிருக்கும் வாரிசு மற்றும் துணிவு படத்தை கொண்டாட ரசிகர்கள் தயார்.

Varisu And Thunivu Release: இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் துணிவு மற்றும் இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு ஆகிய  இரண்டு திரைப்படங்களும் இன்று வெளியாகியுள்ளது. அஜித், விஜய் ரசிகர்கள் நள்ளிரவு முதல் அதிகாலை வரை திரையரங்குகளுக்கு உள்ளேயும் வெளியேயும் கொண்டாடி தீர்த்தனர். பல வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவின் இரு பெரும் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் ஆகியோரின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகியிருப்பதால் தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ள இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்கும் இவ்விரு திரைப்படத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாரிசு படத்தின் விமர்சனம்: Varisu Movie Review: வாரிசு படம் எப்படி இருக்கு? - திரை விமர்சனம்


துணிவு படத்தின் விமர்சனம்: Thunivu Review: ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட்... துணிவு படம் ஓக்கேவா...? - திரை விமர்சனம்


Thunivu vs Varisu: விஜய், அஜித் பேனர்கள் கிழிப்பு - சென்னை ரோகிணியில் என்ன நடந்தது?


Varisu Movie: வாரிசு படத்திற்கு இலவச டிக்கெட்... ஆனால் ஒரே ஒரு கண்டீஷன்!


துணிவு vs வாரிசு : எந்தெந்த ஓடிடியில் ரிலீஸ் - முழு விவரம்

Latest Updates

  • துணிவு, வாரிசு திரைப்படங்களை பார்த்த திரிஷா
    பிரபல நடிகையான திரிஷா துணிவு, வாரிசு இரண்டு திரைப்படங்களை FDFS-விலேயே பார்த்திருக்கின்றார். தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியுடன் திரிஷா படம் பார்த்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

     

  • அதிர்ச்சியில் துணிவு, வாரிசு படக்குழு

    'துணிவு' மற்றும் 'வாரிசு' படங்கள் சமூக வலைத்தளத்தில் லீக் ஆனதால் படக்குழுவினர் அதிக அதிர்ச்சியில் உள்ளனர். 

  • கட் அவுட், பேனர்களை நீக்க உத்தரவு

    காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல திரையரங்குகளில் வைக்கப்பட்டுள்ள வாரிசு, துணிவு படத்தின் பேனர், கட் அவுட்டுகளை நீக்க அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • அஜித்தின் 30 அடி கட்-அவுட்டுக்கு அலகு குத்தி பாலாபிஷேகம்

  • தியேட்டர் கண்ணாடிகள் உடைப்பு
    சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால், அங்கிருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி விழுந்தன.

  • இயக்குனர் வெங்கட் பிரபு ட்வீட்
    கொண்டாட்டம் ஆரம்பம் என்று இயக்குனர் வெங்கட் பிரபு ட்வீட் செய்துள்ளார்.

  • ஹரீஷ் கல்யாண் ட்வீட் ...
    ‘டபுள் பிளாக்பஸ்டர் கன்ஃபார்ம்’ - ஹரிஷ் கல்யாண்

  • அஜித் ரசிகர் மரணம்
    லாரி மீது ஏறி நடனமாடி கீழே குதித்த போது முதுகு தண்டில் காயம் ஏற்பட்டு அஜித் ரசிகர் பரிதாபமாக உயிரிழந்தார். 

  • ப்ரீ புக்கிங் மூலம் வசூல் வேட்டை எந்த படம்
    ப்ரீ புக்கிங் விவரத்தை வைத்து பார்க்கும் போது அஜித்தின் துணிவு ரூ. 12 கோடியும், விஜய்யின் வாரிசு திரைப்படம் ரூ. 10 கோடியும் வசூலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • வாரிசு படம் பார்த்துவிட்டு கண்கலங்கிய தமன்

  • மண்டியிட்டு வந்து கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம்
    விஜய் நடித்த வாரிசு திரைப்படம் மயிலாடுதுறையில் இரண்டு திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் தியேட்டர் வாசலில் மண்டியிட்டு வந்து, விஜய்யின் ஆளுயர கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து கொண்டாட்டம்.

  • இந்த பொங்கல் யாருக்கு ?

    அஜித்தின் துணிவு படமும், விஜய்யின் வாரிசு படமும் முதல் காட்சி நிறைவடைந்த நிலையில், இரு படங்கள் குறித்த விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. இரண்டு படங்களிலும் சிறு சிறு குறைபாடுகள் கூறப்பட்டாலும், ஒட்டுமொத்தமாக இரண்டு படங்களும் கொண்டாட தகுந்தவை என கூறப்படுகிறது. 

  • சரத்குமார் ட்வீட்

  • கண்ணாடியை சில்லு சில்லாக உடைத்த ரசிகர்கள்

    ரசிகர்கள் தள்ளிக்கொண்டு படத்திற்கு உள்ளே நுழைய முயன்ற போது ரோஹிணி திரையரங்கின் முகப்பு கண்ணாடி சுக்கு நூறாய் உடைந்த காட்சி. 

  • FDFS பார்த்த திரிஷா 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    நடிகை திரிஷா, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் இணைந்து துணிவு, வாரிசு திரைப்படங்களின் முதல் காட்சியை பார்த்துள்ளனர். அர்ச்சானா கல்பாத்தி திரையரங்கில் படம் பார்ப்பது குறித்து ட்வீட் போட்டுள்ள நிலையில், திரிஷா இன்ஸ்டாவில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார். 

     

  • அருண் விஜய் ட்வீட்

    துணிவு படத்தின் முதல் நாள் முதல் காட்சி நிறைவடைந்துள்ள நிலையில், ரசிகர்கள், பிரபலங்கள் ஆகியோர் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில், அஜித் வெறித்தனமாக நடித்திருப்பதாகவும், ஆக்ஷன், திரைக்கதை, நடிப்பு, சமூக கருத்து ஆகியவை மூலம் ரசிகர்களுக்கு விருந்து படைத்திருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். அவர் இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். 

  • துணிவு படத்தின் முதல் நாள் முதல் காட்சி நிறைவடைந்துள்ள நிலையில், ரசிகர்கள், பிரபலங்கள் ஆகியோர் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில், அஜித் வெறித்தனமாக நடித்திருப்பதாகவும், ஆக்ஷன், திரைக்கதை, நடிப்பு, சமூக கருத்து ஆகியவை மூலம் ரசிகர்களுக்கு விருந்து படைத்திருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். அவர் இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். 

  • சிஎஸ்கேவை கலாய்த்த துணிவு?

    துணிவு படத்தில் ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பகடி செய்யும் வகையில் வசனம் வைக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவுகின்றன.  

  • தூள் கிளப்பியதா துணிவு ?

    அஜித் நடித்த துணிவு படத்தின் முதல் நாள் முதல் காட்சி நிறைவடைந்துள்ள நிலையில், படம் விமர்சனம் வெளியாகியுள்ளது. திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரும்பிய பக்கமெல்லாம் படக்குழுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

  • ஆளுநரை வம்பிழுத்ததா துணிவு?

    துணிவு படத்தில் ஆளுநர் குறிப்பிடும் வகையில் வசனம் உள்ளதாக ட்விட்டரில் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. அது படத்தின் கதை சார்ந்த வசனம் என்று கூறப்பட்டாலும், அது அரசியல் சூழலுக்கு பொருந்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

  • பாராட்டு மழையில் ஹெச். வினோத்

    சமூகத்திற்கு தரமான கருத்தைக் கூறும் படமாக துணிவு படம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஆகிய மாபெரும் வெற்றி படங்களை போலவே துணிவையும் தெளிவான புரிதலோடு உருவாக்கியுள்ளார் என இயக்குநர் ஹெச். வினோத் மீது பாராட்டு மழை பொழிகிறது. 

  • கலவரம் போன்ற சூழல்

    சென்னை கோயம்பேடு ரோகிணி விஜய் - அஜித் இருவரின் பேனர்களும் கிழிக்கப்பட்டு, ரசிகர்கள் தள்ளுமுள்ளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ரசிகர்கள் செருப்பு, குச்சி, வாட்டர் கேன், கம்பு, கல் ஆகியவற்றை எடுத்து  தியேட்டர் முகப்பு கண்ணாடி மீது வீசியுள்ளனர். இதனால், அப்பகுதியே கலவர பகுதியாக காட்சியளிக்கிறது.  

  • 'சில்லா சில்லா'

    துணிவு படத்தில் முதல் பாதி முடிந்தவுடன் சற்று நேரத்தில் வரும் சில்லா சில்லா பாடல் திரையரங்கில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

  • துணிவு - முதல் பாதி எப்படி?

    துணிவு FDFS-இன் முதல் பாதி நிறைவடைந்துள்ளது. படத்தின் திரைக்கதை அதிவேகமாக நகர்வதாகவும், ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருப்பதாகவும் ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

  • துணிவு பேனரையும் கிழித்த ரசிகர்கள்

    சென்னை ரோகிணி திரையரங்கில் அஜித்தின் துணிவு பட பேனரும் கிழிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, விஜய்யின் வாரிசு பட பேனரும் கிழிக்கப்பட்டது. தற்போது, துணிவு படத்தின் நள்ளிரவு 1 மணி காட்சி திரையிடப்பட்டு வருகிறது. அதிகாலை 4 மணிக்கு வாரிசு படம் திரையிடப்பட உள்ளது. 

  • துணிவு - வாரிசு : எந்தெந்த ஓடிடியில் ரிலீஸ்?

    வாரிசு திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவிலும், துணிவு திரைப்டம் நெட்பிளிக்ஸிலும் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. படத்தின் டைட்டில் கார்ட்டுகளில் போடப்பட்ட தகவல் மூலம் இது உறுதிசெய்யப்படுகிறது. 

  • வெளியானது துணிவு

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    அஜித்தின் துணிவு படத்தின் முதல் நாள் முதல் காட்சி உலகம் முழுவதும் வெளியானது. 

     

  • வாரிசு படத்தின் திரைப்பட விமர்சனம் - No Spoilers 

    விமர்சனத்தை இந்த இணைப்பில் படிக்கவும்: Varisu Movie Review: வாரிசு படம் எப்படி இருக்கு? - திரைவிமர்சனம்

  • வாரிசு பேனர் கிழிப்பு

    சென்னை ரோகிணி திரையரங்கில் விஜய்யின் வாரிசு பட பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளது. தற்போது, அஜித்தின் துணிவு படம் நள்ளிரவு 1 மணிக்கு வெளியாக உள்ளது. ரோகிணி திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

  • வாரிசு - 'எல்லாமே இருக்கு'

    வாரிசு படத்தின் சிறப்பு காட்சிகள் நிறைவடைந்துள்ள நிலையில், படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் இசை வெளியிட்டு விழாவில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ கூறியது போல, டான்ஸ், சண்டை, விஜய் பாடி லேங்குவேஜ், எமோஷன் என அனைத்தும் சேர்ந்த கலவையாக உள்ளது என தெரிவித்திருந்தார். அதேபோலவே, படம் பக்கா கமர்ஷியலாக வெளிவந்துள்ளது.

  • ஷோபா உடன் ராஷ்மிகா

    சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற வாரிசு படத்தின் சிறப்பு காட்சியின் போது, நடிகர் விஜய்யின் தாயார் ஷோபாவுடன், நடிகை ராஷ்மிகா உரையாடும் காணொலி தற்போது வெளியாகியுள்ளது.

  • தன் குடும்பத்தோடு வாரிசு படத்தை பார்க்க வந்த வம்சி!

     

  • வாரிசு வேற ரகம் பாத்து உஷாரு!

  • வாரிசு படத்திற்கு பொருத்தமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதை விட பொருத்தமான தலைப்பு வைக்க முடியாது.

     

  • சென்னை ரோகிணி திரையரங்கில் தொடங்கி துணிவு கொண்டாட்டம்

  • 1st எப்படி?

     

  • பொழுதுபோக்கு படம்:

  • #வாரிசு: கிட்ஸ் அண்ட் லேடீஸ் ஸ்பெஷல்

     

  • #செலிபிரிட்டிஷோ:  முதல் பாதி.. விஜய்-கு வயசே ஆகாதா என ரசிகர்கள் கேள்வி!

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    #Varisu | #Thunivu | #Vijay | #AjithKumar | #FDFS |

     

  • எமோஷனல்:
    செலிபிரிட்டி ஷோ: முதல் பாதி வரை #வாரிசு படத்தின் எமோஷனல் காட்சிகள் நன்றாக இருக்கிறது. 

  • முதல் பாதி மாஸ்.. பைசா வசூல்..
    வாரிசு படத்தின் முதல் பாதி "அருமை" என ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார். மேலும் வம்ஷி பைடிப்பள்ளி தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்கிறார் எனவும், மெர்சலுக்குப் பிறகு எதிர்பார்க்காத அளவுக்கு விஜய் நடித்துள்ளார் மற்றும் பைசா வசூல் எனக்கூறியுள்ளார்.

  • வாரிசு:

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link