Vettaiyan Audio Launch : வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் பேச்சு!!

Fri, 20 Sep 2024-8:48 pm,

Vettaiyan Audio Launch Live Updates : ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா, நடைபெற்று வருகிறது.

Vettaiyan Audio Launch Live Updates : டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் திரைப்படம் வேட்டையன். இந்த படத்தில் பான் இந்திய நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. அங்கு என்ன நடக்கிறது என்பதையும், எந்தெந்த திரை பிரபலங்கள் வருகை புரிந்து வருகின்றனர் என்பது குறித்த விவரங்களையும் இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேட்டையன் திரைப்படம்:


நடிகர் ரஜினிகாந்தின் 170வது படமாக உருவாகியிருக்கிறது, வேட்டையன் திரைப்படம். இந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா டகுபதி, அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். பான் இந்திய நட்சத்திரங்களே நடித்திருக்கும் இந்த படத்தில் ரஜினி காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அனைத்து ரஜினிகாந்தின் திரைப்படங்கள் போலவும், இந்த படத்திலும் அவருக்கு மாஸான காட்சிகள் இடம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் வெளியான மனசிலாயோ பாடலும், சமீபத்தில் வெளியான “ஹண்டரு வண்டாரு” பாடலும் மக்கள் மத்தியில் கவனம் பெற்றிருக்கிறது. 


இசை வெளியீட்டு விழா:


லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், பல கோடி செலவில் உருவாகியிருக்கும் வேட்டையன் படம், வரும் அக்டோபர் 10ஆம் தேதி தீபாவளி பண்டிகையை ஒட்டி ரிலீஸாக இருக்கிறது. இதையடுத்து, இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற்று வருகிறது. அங்கு என்னென்ன நடக்கிறது என்பது குறித்த அப்டேட்டை கீழே காணலாம்.


டிஜி பிரச்சனை:


வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் டிஜே பக்கமிருந்து டெக்னிக்கல் பிரச்சனையாம். இதையடுத்து, ஏவியில் தர்பார் படத்தின் காட்சிகளை திரையிட்டவுடன், ரசிகர்கள் ஆர்பரிக்க ஆரம்பித்தனர். 



இந்த வீடியோ உள்பட இன்னும் பல அப்டேட்டுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Latest Updates

  • வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் பேச ஆரம்பித்திருக்கின்றனர். 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    துஷாரா விஜயன்:

    துஷாரா விஜயன் தான் முதலில் கேட்ட பாடல் “சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்” என்பதுதான் என்று கூறியிருக்கிறார்.

    மஞ்சு வாரியர்:

    மஞ்சு வாரியர் தான் தமிழில் நடித்த படங்களுக்கு மக்கள் ஆதரவு கொடுத்தது குறித்து பேசினார். அது தான் மகிழ்ச்சி அடைவதாக பேசியிருக்கிறார். 

  • வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை, பிரபல தொகுப்பாளர் டிடி ஹோஸ்ட் செய்வதாக கூறப்படுகிறது.

    இவர் சமீபத்தில் முட்டி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • ரெடின் கிங்க்ஸ்லி நடனம்!

    வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் சினிமா துணை நடிகர் ரெடின் கிங்க்ஸ்லி மற்றும் சாண்டி மாஸ்டர் ஆகியோர் இணைந்து நடனமாடி இருக்கின்றனர். 

  • Vettaiyan Movie Teaser : வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் அப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இதில் ரஜினி, ஸ்ட்ரிட் ஆன காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். 

  • வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா ஆரம்பித்து விட்டது! இதையடுத்து படக்குழுவினரில் சிலர் கருப்பு நிற உடையில் எண்ட்ரி கொடுத்திருக்கின்றனர். 

  • ரஜினி எண்ட்ரி!!

    வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருக்கும் ரஜினியின் வீடியோ இணையத்தில் வைரல். 

  • ரஜினியின் வேட்டையன் படத்தையும், அஜித்தின் விடாமுயற்சி படத்தையும் லைகா நிறுவனம்தான் தயாரித்திருக்கிறது. இதையடுத்து விடாமுயற்சி படத்தின் க்ளிம்ஸ் வீடியோ திரையிடப்பட்டதாக ஒரு சிலர் ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

    இந்த தகவல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவுப்பு எதுவும் இப்போது வரை வெளியாகவில்லை. 

  • வேட்டையன் பட விழாவில் கூலி வைப்ஸ்!

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தை அடுத்து கூலி படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் பிண்ணனி இசையும் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஒலிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த வீடியோவை பலர் தற்போது ஷேர் செய்து வருகின்றனர். 

  • ரஜினி ஆன் தி வே! 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ரஜினிகாந்தின் டைட்டில் கார்ட் ஸ்கிரீனில் காண்பிக்கப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ரஜினியின் பேச்சை கேட்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துகொண்டிருக்கின்றனர். 

  • எல்லாமே ரெடி!

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    வேட்டையன் படத்தின் மேடை ரெடியாக இருப்பதாக ஒரு ரசிகர் இணையத்தில் பதிவிட்டிருக்கிறார். 

    இந்த போட்டோ வைரலாகி வருகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link