விஜய் தேவரகொண்டா,ராஷ்மிகா மந்தனா நடித்த "கீதா கோவிந்தம்" தெலுங்கு படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அவர்கள் "டியர் காம்ரேட்" படத்தில் மீண்டும் ஜோடியாக நடித்தார்கள். விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஜோடி தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனது . ராஷ்மிகாவும், விஜய்யும் காதலிப்பதாக முன்பு பரபரப்பாக பேசப்பட்டு காலப்போக்கில் அந்த பேச்சு அடங்கியது.

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக மீண்டும் பேச்சு கிளம்பியிருக்கிறது. பாலிவுட் படங்களில் நடிக்க மும்பை சென்ற ராஷ்மிகா அடிக்கடி ஜிம்மிற்கு சென்று ஒர்க் அவுட் செய்து வந்தார். அந்த நேரம் மும்பையில் இருந்த விஜய்யும் ராஷ்மிகா சென்ற அதே ஜிம்மில் ஒர்க் அவுட் செய்திருக்கிறார். இந்நிலையில் ஹைதராபாத் திரும்பிய இருவரும் ஒரே ஜிம்மில் ஒர்க் அவுட் செய்துள்ளனர். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.

அந்த ஜிம்மில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்தவர்கள் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் காதலிப்பதாக மீண்டும் பேசத் தொடங்கிவிட்டனர். விஜய் தன் நெருங்கிய நண்பர் என்று ராஷ்மிகா பலமுறை கூறினாலும் இவர்களது காதல் கிசுகிசு மட்டும் அடங்குவதாக இல்லை. விஜய் தேவரகொண்டா 'லைகர்' படத்தில் நடித்தபோது அவருக்கும், பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக வதந்தி கிளம்பியது. ஆனால் அந்த பேச்சு கிளம்பிய வேகத்தில் அடங்கிவிட்டது. இந்நிலையில் மீண்டும் ராஷ்மிகாவின் பெயர் அடிபட்டு வருகிறது.

அதிக சம்பளம் கேட்டதுடன் மட்டுமல்லாது  பல நிபந்தனைகள் விதித்ததால் ரஷ்மிகா ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கும் படத்தில் ஒப்பந்தம் செய்யவில்லை.தற்போது அல்லு அர்ஜுன் நடித்து வரும் 'புஷ்பா' படத்தில் ராஷ்மிகா ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும். 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!! 


Android Link - https://bit.ly/3hDyh4G 


Apple Link - https://apple.co/3loQYeR