2015ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'நானும் ரவுடி தான்' படத்தின் மூலம் காதல் உறவில் இணைந்த நட்சத்திர ஜோடிகளான நயன்தாரா-விக்னேஷ் சிவன், தற்போது புனிதமான திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.  ஆரம்ப காலகட்டத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து வருவதாக பல செய்திகள் வெளியானதை இந்த ஜோடியே உறுதிப்படுத்தியது.  பின்னர் இருவரும் அடிக்கடி வெளியூர்கள் செல்லுவது, கிறிஸ்துமஸ், காதலர் தினம் போன்றவற்றை கொண்டாடுவது என ஒன்றாக இருக்கும் பலவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | நயன்-விக்னேஷ் ஜோடி! களைகட்டும் கல்யாண கொண்டாட்டம்!


நீண்ட நாட்களாகவே இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர்.  ரசிகர்கள், திரைபிரபலங்கள் என அனைவருக்கும் இருந்து வந்த வந்த ஒரே கேள்வி இவர்களின் திருமணம் எப்போது என்பது தான்.  இணையத்தில் ரசிகர் ஒருவர் விக்னேஷ் சிவனிடம் எப்போது நயன்தாராவை திருமணம் செய்வீர்கள் என்று கேட்டதற்கு, அவர் 'கல்யாணதிற்கு ரொம்ப செலவாகும் ப்ரோ, அதனால் திருமணத்திற்காக பணத்தை சேமித்து வைக்கிறேன், அதோடு கொரோனா போனதும் திருமணம் செய்வேன்' என்று நகைச்சுவையாக கூறியிருந்தார்.


இந்த இருவரின் ஜோடி பிரிந்துவிடக்கூடும் என்று பலரும் நினைத்த நிலையில், இவர்கள் தற்போது திருமணம் வரை சென்றுள்ளனர்.  பல வலிகளுக்கு பின் நயன்தாராவிற்கு ஒரு நல்ல வழித்துணையாகவும், வாழ்க்கை துணையாகவும் விக்னேஷ் சிவன் அமைந்திருப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.  இவர்கள் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர்.  சில மாதங்களுக்கு முன்னர் நயன்தாராவின் தந்தைக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்ட பிறகு இருவரும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.



இன்று மகாபலிபுரத்தில் நடைபெறும் திருமண விழாவில் ரஜினிகாந்த, ஷாருக்கான், கவுதம் வாசுதேவ் மேனன், ராதிகா சரத்குமார், கார்த்தி, விக்ரம் பிரபு, விஜய் சேதுபதி,பொன்வண்ணன் போன்ற பல முக்கியமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர்.  பல கட்டுப்பாடுகளுடன் திருமணம் நடைபெற்று வருகிறது, இவர்களின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நெட்ப்ளிக்ஸ் தளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | 1 லட்சம் பேருக்கு கல்யாண விருந்தளிக்கும் நயன்தாரா-விக்னேஷ் சிவன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR