தனித்துவமான நடிப்பால் இந்திய சினிமாவின் அடையாளமாக மாறியிருக்கும் தனுஷூக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அடுத்தடுத்து வெற்றிப் படங்களின் வெற்றியால் 4 தேசிய விருதுகளை வென்ற அவர், ஹாலிவுட் படங்களிலும் நடிக்கத் தொடங்கிவிட்டார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திரைப்படங்களைக் கடந்து புதிய கார்களை வாங்குவதிலும் தனுஷூக்கு ஆசை உண்டு.  ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் முதல் ஃபோர்டு மஸ்டாங் ஜிடி  வரை என இதுவரை பல விலை உயர்ந்த கார்களை வாங்கியுள்ளார். அவரிடம் இருக்கும் விலை உயர்ந்த கார்களின் பட்டியலை தான் நாம் இங்கு பார்க்க இருக்கிறோம். 


மேலும் படிக்க | நாகசைதன்யாவுடன் வாழ்ந்த வீட்டை வாங்கிய சமந்தா


1. பென்ட்லி கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர்
 (Bentley Continental Flying Spur)


இந்தியாவில் பென்ட்லி கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர் வைத்திருக்கும் சில பிரபலங்களில் தனுஷும் ஒருவர். தனுஷ் வைத்திருக்கும் பென்ட்லி கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர், சுமார் 3.74 கோடி ரூபாய் மதிப்பு என கூறப்படுகிறது. இது பிரிட்டிஷ் ஆட்டோமொபைல் நிறுவனமான பென்ட்லியின் பிரபலமான மற்றும் ஆடம்பரமான கார்களில் ஒன்றாகும்.


2. ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்
(Rolls Royce Ghost)


கருப்பு நிறத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரும் தனுஷிடம் உள்ளது. காரின் விலை சுமார் ரூ.7 கோடி. தனுஷிடம் இருக்கும் மிக விலையுயர்ந்த கார் இதுவாகும்.


3. ஆடி ஏ8
(Audi A8)


தனுஷின் கலெக்ஷனில் அடுத்த கார் ஆடி ஏ8. 5 இருக்கைகள் கொண்ட கார். இந்தக் காரின் விலை சுமார் ரூ.1.57 கோடி.


4. ஃபோர்டு முஸ்டாங் ஜிடி
(Ford Mustang GT)


தனுஷிடம் ரூ.75 லட்சம் மதிப்புள்ள ஃபோர்டு மஸ்டாங் ஜிடி காரும் உள்ளது.


5. செடான் ஜாகுவார் XE
(Sedan Jaguar XE)


5 இருக்கைகள் கொண்ட ஜாகுவார் XE கார் ஒன்றையும் தனுஷ் வைத்திருக்கிறார். இது மிகவும் ஆடம்பரமான கார்களில் ஒன்றாகும். ஜாகுவார் எக்ஸ்இ காரின் விலை சுமார் ரூ.45 லட்சம்.


மேலும் படிக்க | ராகவா லாரன்ஸ் பாதையில் விஜய் சேதுபதி! கை கொடுக்குமா திகில்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ