தமிழ் சினிமா பாடலாசிரியர்களில் நா. முத்துக்குமார் எப்போதும் ஸ்பெஷல். அவரது வரிகள் அலங்காரமின்றி, அகங்காரமின்றி எளிமையாக இருந்ததால் பலதரப்பினரையும் சென்று சேர்ந்தன. இதனால் நா. முத்துக்குமாரை இளைஞர் முதல் பெரியவர்வரை அனைவரும் ரசித்தனர். தொடர்ச்சியாக பத்து வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் அதிக பாடல்களை எழுதிய பாடலாசிரியர்களில் முதலிடத்தில் அவர் இருந்தார். பெரிய இயக்குநர், சின்ன இயக்குநர் என வேறுபாடு பார்க்காமல் அனைவருக்கும் ஒரேமாதிரியான மொழியை கொடுத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுமட்டுமின்றி தங்கமீன்கள், சைவம் என தொடர்ச்சியாக 2013 மற்றும் 2014ஆம் வருடங்களில் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை தொடர்ச்சியாக பெற்றார். மேலும் பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். இந்தச் சூழலில் கடந்த 2016ஆம்  ஆண்டு அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இழப்பை நினைத்து இன்றும் அவரது ரசிகர்கள் வருந்திக்கொண்டிருக்கின்றனர்.



இந்நிலையில், கடந்த 2009 முதல் 2014ஆம் ஆண்டுவரை வெளியான சிறந்த படங்கள், சிறந்த நடிகர் - நடிகைகள், பின்னணி பாடகர்கள், பாடலாசிரியர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தற்போது தமிழ்நாடு அரசின் மாநில விருதுகள் வழங்கும் விழா குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.


2009 - 2014ஆம் ஆண்டுவரை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருது வழங்கும் விழா நாளை மாலை 5.00 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறவிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.



இதில் தொடர்ச்சியாக 3 வருடங்கள் தமிழ்நாடு அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டில் பல படங்களில் பாடல் எழுதியதற்கும், 2013 தங்கமீன்கள் படத்துக்கும், 2014ஆம் ஆண்டு சைவம் திரைப்படத்திற்கும் என அடுத்தடுத்து மூன்று விருதுகள் அவருக்கு வழங்கப்படவிருக்கின்றன.



இதனையடுத்து நா. முத்துக்குமார் இன்னும் பல காலம் உயிரோடு இருந்திருக்கலாம். அப்படி இருந்திருந்தால் பல விருதுகளை அவர் வென்றிருப்பார். இன்னும் சிறந்த பாடல்களை கொடுத்திருப்பார் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துவருகின்றனர். இந்த விருதினை நா. முத்துக்குமாரின் மகனான ஆதவன் முத்துக்குமார் பெற்றுக்கொள்கிறார்.


மேலும் படிக்க | நா. முத்துக்குமார் பெயரை சொன்னால் உள் நெஞ்சில் கொண்டாட்டம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEata